நீயா நானா நிகழ்ச்சியில் போராட்டத்தில் குதித்த இளம் பெண்கள்.. கோபிநாத் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மே 14ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் திருமணம் வேண்டாம் என சொல்லும் பெண்கள் மற்றும் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் என இரண்டு அனியினர் கலந்து கொள்கின்றனர்.
அதில் பெண்கள் எங்களுக்கு திருமணமே வேண்டாம் என்று கையில் போர்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகமான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சமூகத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் பற்றியே விவாதங்கள் வைத்து வருகிறார்கள்.
இந்த வகையில் கடந்த வாரம் 2கே கிட்ஸ்கள் மற்றும் 90ஸ் கிட்ஸ்கள் இரண்டு அணிகளாக கலந்து கொண்டு கருத்து மோதல்களில் ஈடுபட்டு தங்களுடைய சந்தோஷங்கள் துக்கங்களை அங்கே பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் இந்த வாரம் திருமணம் வேண்டாம் என சொல்லும் பெண்களும், திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஆண்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளர்களாக அறிமுகமாகி வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தவர்களும் உண்டு என்று இதே நிகழ்ச்சியில் கூட சிலர் கூறியிருக்கின்றனர். இந்த வகையில் இந்த வாரம் யாருக்கு அந்த யோகம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் நாங்கள் எல்லாம் வேற மாதிரி என்று கலந்து கொண்டிருக்கும் பங்கேற்பாளர்களும் மிரட்டுகிறார்கள்.
அதில் கோபிநாத் ஆண்களிடம் உங்களுக்கு திருமண கனவு பாட்டெல்லாம் இருக்கா? என்று கேட்க ஒரு பங்கேற்பாளர் உயிரே உன்னை உன்னை என்று வரும் பாட்டில் டிஃபரண்ட் டைப் ரிலீஜனில் திருமணம் செய்வாங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல, இன்னொரு ஆண் எனக்கு இது தானா என்று பாடல் வரும்போது உள்ளுக்குள் ஏதோ பூ பூக்கும் என்று சொல்லி இருக்கிறார் .

அதைத் தொடர்ந்து இன்னொரு ஆண் கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே எனும் பாடலை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என்று தன்னுடைய உணர்வுகளை வெளிக்காட்ட, பெண்கள் எல்லோரும் கையில் பதாகையோடு வேண்டாம், வேண்டாம் திருமணம் வேண்டாம் என்று கோஷமிட்டு போராட்டத்தில் குதிக்கின்றனர்.
நீங்கள் அப்படி என்றால் நாங்கள் இப்படி என்று அங்கிருக்கும் ஆண் ஒருவர் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் என்று உட்கார்ந்தபடியே போராட்டம் செய்ய அதை பார்த்து கோபிநாத் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். தற்போது இந்த பிரமோ வைரலாக பரவி வருகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications