குழந்தை இல்லை என்பதை குத்தி காட்டிய சகோதரி..?கோபிநாத் கேட்ட கேள்வி.. கண் கலங்க வைத்த தருணம்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரே குடும்பத்தில் பிறந்த அக்கா தங்கைகள் மாறுபட்ட சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு சகோதரி தனக்கு குழந்தை இல்லை என்ற பொழுதும் என்னுடைய அக்காவே தனக்கு குழந்தை குட்டின்னு இருக்கு அதனால நான் போன் பண்ண முடியாது என்று என்னை குத்தி காட்டுகிறார் என்று கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு ஒரு தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது சொந்த அக்கா தங்கைகள் மாறுபட்ட குடும்ப பின்னணியில் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்கு ஏற்பட்டும் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே அக்கா தங்கைகள் என்றால் பக்கத்தில் இருக்கும் போது டாம் அண்ட் ஜெர்ரி ஆக தான் அடித்துக் கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு பல பேருக்கு பாசம் பொங்கிவிடும். ஆனால் ஒரு சில நேரங்களில் அக்கா தங்கைகளாக இருந்தாலும் சில பொறாமைகளும் கோபமும் எட்டிப் பார்க்க தான் செய்யும் என்பது இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் நிரூபணம் ஆகி இருக்கிறது.

ஒரு பக்கம் தங்கைகள் தங்களுக்கு அக்காக்கள் மீது இருக்கும் கோபம் பொறாமைகளை நீயா நானாவில் கொட்டுகின்றனர். இன்னொரு பக்கம் அக்காக்கள் தங்கைகள் செய்வது தவறு என்றும் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தான் ஒரு சகோதரி குழந்தை இல்லாமல் தனக்குள் இருக்கும் வேதனையை குறித்து நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
அதில் அவர்களுக்கு இரண்டு பசங்க எனக்கு ஐந்து வருடங்கள் ஆகுது இன்னும் குழந்தை இல்லை. அப்போ நான் எப்பவாவது போன் பண்ணலேன்னா நான்தான் குழந்தை குட்டின்னு வச்சுட்டு எப்பவும் வேலை பார்த்துகிட்டு இருக்கேன் என்று சொல்லுவாங்க. அது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு என்று ஃபீல் பண்ணி கண் கலங்குகிறார்.

அதற்கு அந்தப் பெண்ணின் அக்கா நான் அந்த மாதிரி எண்ணத்தில் சொன்னது கிடையாது என்று சமாதானம் செய்ய, அதற்கு கோபிநாத் நீங்க என்னதான் சொன்னாலும் நீங்க சொன்ன வார்த்தை கொஞ்சம் தடித்த வார்த்தை தானே என்று கேட்கிறார். தற்போது இந்த ப்ரோமோ பார்த்து பலர் இது ஒரு வலி நிறைந்த வார்த்தை இதை பார்க்கும் போது கேட்கும் போது அழுகையாக வருகிறது என்று பீல் பண்ணி அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்..












Click it and Unblock the Notifications