கோபிநாத் கேள்வியால் நீயா நானாவில் கதறி அழுத பெண்.. வியக்க வைத்த தந்தையின் தியாகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஏப்ரல் 23ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் தனி தந்தைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு தான் வில்லனாகவும் ஹிட்லராகவும் தான் இருந்தேன். ஆனால் இன்னைக்கு நல்லா வளர்த்துட்டேன் என்று ஒரு தந்தை கண்கலங்கி அழுது இருக்கிறார்.

விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் சிறப்பான தருணமாக அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு சில வாரங்களுக்கு முன்பு சிங்கிள் அம்மாக்களின் வலிகளையும், வேதனைகளையும் அவர்கள் இந்த சமுதாயத்தில் படும் கஷ்டங்களையும் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் சிங்கிளாக தன்னுடைய குழந்தைகளை வளர்த்து வந்த அப்பாக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பாக்களின் தியாகங்களை புரிந்து கொண்ட குழந்தைகளும் சிலர், புரிந்து கொள்ளாமல் இருக்கும் குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த அற்புதமான கலந்துரையாடல் பலருடைய பாராட்டை பெரும் என்பது ஐயம் இல்லை.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோவில் ஒரு தந்தை தன்னுடைய மகனை மூன்று வயதில் இருந்து வளர்க்கிறேன். இப்போது அவருக்கு 27 வயது ஆகிறது என்று சொல்ல, அதற்கு கோபிநாத் ஏய்...ப்பா பாராட்டுகிறார். பிறகு இன்னொரு தந்தை தன்னுடைய மகனுக்கு நான் ஒரு வில்லனாகவும், ஹிட்லராகவும் தான் இருந்து இருக்கிறேன். ஒரு நல்ல தகப்பனாக இல்லை.ஆனால் இன்னைக்கு நல்லா அவனை வளர்த்து இருக்கிறேன் என்று சொல்லும் போதே கண் கலங்கி அழுகிறார்.

அதைத்தொடர்ந்து இன்னொரு பெண் அப்பா என்றால் நான் அவரை அப்பாவாகத்தான் பார்க்கிறேன் இத்தனை வருஷமாக அப்படித்தான் இருந்திருக்காங்க என்று சொல்ல, அவருடைய தந்தையும் அழுகிறார். மேலும் அந்தப் பெண் யாரும் பார்த்தாலும் உங்க அப்பா மாதிரி யாரும் வர மாட்டாங்க என்று சொல்லுவாங்க என்று சொல்லிக் கொண்டே மேலும் சொல்ல முடியாமல் அந்த குழந்தை அழுகிறார்.
தற்போதைய உள்ள இளைஞர்களின் மத்தியில் அப்பா என்றால் வில்லனாகத்தான் தெரிவார்கள் என்பது இன்றைய ப்ரோமோவில் நன்றாகவே தெரிகிறது. வெளியே கரடு முரடாக இருக்கும் பலாப்பழத்தில் உள்ளே இருக்கும் தித்திப்பை சுவைத்து பார்த்தால் தான் தெரியும். அந்த மாதிரி தான் பல அப்பாக்கள் வெளியே கரடு முரடாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பாசத்தை வெளியே காட்டாமலே கடைசி வரைக்கும் இருந்து விடுகிறார்கள். அது இந்த நீயா நானா நிகழ்ச்சியில் வெளிச்சமாகிறது.
இந்த நிலையில் இந்த ப்ரோமோ பலருடைய மனதில் இருக்கும் கவலைகளையும் பாசத்தையும் வெளியே கொண்டு வரும் விதத்தில் இருந்திருப்பதாக தெரிகிறது. காரணம் கமெண்ட்களில் அத்தனை பேர் தங்களுடைய அப்பாக்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த உலகில் இப்படியும் தந்தைகள் இருக்கின்றனர் என்று நீயா நானா நிகழ்ச்சி வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. பல பேர் தங்களை கஷ்டப்பட்டு வளர்த்த அப்பாக்களின் அருமைகளையும், பெருமைகளையும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்களில் கமெண்ட்டுகளாக நிறைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications