நீயா நானாவில் ஏற்பட்ட பரபரப்பு.. உண்மை மாதிரி இல்லை என கோபிநாத் முகத்துக்கு நேரா பேசிய பெண்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 30ஆம் தேதிக்கான 2வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் எபிசோட்டின் ஆன்லைன் காதல் அழகானது என்றும் ஆன்லைன் காதல்கள் சரிவராது என்று இரு தரப்பினர் பேசியிருக்கின்றனர்.

அதில் ஒரு பெண் ஆன்லைன் காதல் செய்தவர்கள் குறித்து இது உண்மை மாதிரி இல்லை என முகத்துக்கு நேராக பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரஸ்யமான தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் காதல் அழகானதா அல்லது அது சரி வராது என்றும் இருதரப்பு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் மூலமாக பலர் கடல் கடந்து காதல் செய்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதே ஆன்லைன் மூலமாக பலர் தங்களுடைய வாழ்க்கைகளை இழந்து பொன்னான உயிரை துறந்தவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். தினமும் செய்திகளில் நாம் கேட்கும் அதிகமான வார்த்தைகளில் ஒன்றாக இந்த ஆன்லைன் இருந்து வருகிறது. இந்த ஆன்லைனால் உலகத்தில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பது இந்த வார நீயா நானாவில் விவாதத்தில் இருக்கிறார்கள்.
பொதுவாக ஆன்லைனில் உண்மையாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.பொய்யான முகத்திரையில் ஒளிந்து கொண்டு சூழ்ச்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். உண்மையாக இருப்பவர்கள் பலர் சூழ்ச்சி செல்பவர்களிடம் மாட்டிக்கொண்டு இருப்பது பற்றி தினமும் நாம் கேள்விப்படும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் காதல் அழகானது என ஒரு தம்பதி பேசியிருக்கிறார்கள்.
அதில் ஒரு பெண் நான் ஒரு பெங்காலி எங்களுக்கு இடையில் ரிலேஷன்ஷிப் வந்து எட்டு வருடம் ஆகிறது. பிறகு எங்களுக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு ஆண் என்னுடைய மனைவிக்கு ஊரு ஸ்ரீலங்கா நாங்க பேச ஆரம்பித்தோம்.

அதற்கு பிறகு பிடித்துப் போனது என்று சொல்ல, அதற்கு அவருடைய மனைவி அவர் பேசுறது எல்லாம் உண்மையாக இருந்தது. அதனால ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணனும்னு தெரியாது என்று தன்னுடைய கதையும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு எதிர் தரப்பில் ஆன்லைன் காதல் ஆபத்து என்று சொல்லும் அணியில் இருந்த ஒரு பெண் ஆன்லைனில் பார்த்து மேரேஜ் பண்ணுறவங்க எல்லாம் உண்மை கிடையாது. அது பாக்குறதுக்கு உண்மை போல இல்லை என்று கூறுகிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் கடந்த வார எபிசோடில் ஒரு அப்பா சொன்ன வார்த்தை இந்த எபிசோட்டுக்கு நினைவு வருகிறது. அது நிஜ ரோஜாக்கு சமமாக ஆயிரம் கோடி பிளாஸ்டிக் மலர்கள் வைத்ததாலும் நிஜத்தில் ஈடாகாது என்று சொன்னது என கூறி இருக்கிறார். அதுபோல இன்னும் பலர் ஆன்லைன்ல செத்தவன் லிஸ்ட் பெருசா போகும் என்று கிண்டல் செய்திருக்கிறார். இப்படியாக பல கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications