நீயா நானா: ஒழுக்கமா பிள்ளை வளர்த்துட்டு வந்து பேச வாங்க... பெண்ணை சாடிய கோபிநாத்.. அதிர்ந்த அரங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் அக்டோபர் 22ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் இந்த வாரம் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை எதிர்க்கிறேன் என்றும் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை ஆதரிக்கிறேன் என்றும் இரண்டு தரப்பினர்கள் விவாதிக்கின்றனர்.

அதில் நான்காவது ப்ரோமோவில் ஒரு பெண்ணிடம் கோபிநாத் சண்டை போடுவது போன்று பேசி இருக்கிறார். இது வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றியதாகவே விவாதங்கள் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை எதிர்க்கிறேன் VS சொந்தத்திற்குள் திருமணம் செய்வதை ஆதரிக்கிறேன் என்று இரு அணியாக பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
நீயா நானா: நீ மட்டும் தான் இந்தியனா? கோபிநாத் முன்பு கோபத்தில் கிரிக்கெட் பிரபலம்
அதில் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சொந்தத்துக்குள் என்னுடைய அத்தை பையனையோ அல்லது மாமா பையனையோ நான் கல்யாணம் பண்ணி இருந்தால் என்னுடைய அம்மா வந்து என் கூடவே தங்கலாம் என்று ஒரு பெண் தன்னுடைய ஆசையை சொல்கிறார். அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் பெண் புதுசா வெளியில் திருமணம் செய்யும்போது புதிய சொந்தங்கள் நமக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து சொந்தத்துக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்ற அணியில் இருந்து ஒரு ஆண் சொந்த மாமா தாய் மாமா வீட்டுல இருக்கிற உரிமை எனக்கு வெளியே எங்க போனாலும் கிடைக்காது என்று கூறுகிறார்.இப்படியாக பல பேர் பல கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அதை தொடர்ந்து இன்னொரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபிநாத் தனக்கே உரிய நக்கல் நையாண்டித்தனத்தோடு பேசி இருக்கிறார். அப்போது அங்கு இருக்கும் ரோஸ் கலர் புடவை கட்டிய பெண் ஒருவரிடம் கோபிநாத், ரொம்ப டாக்ஸியான பொண்ணு எப்ப பாரு அடம் பிடித்துக் கொண்டே இருக்கும். சந்தேகப்படுது, பாத்திரத்தை தூக்கி போட்டு உடைக்கிறது... அந்தப் பொண்ணு நான் தான்.
அப்போ வசந்தி அத்தை பஞ்சாயத்துக்கு வாராங்க என்று சொல்ல, அங்கு இருக்கும் இன்னொரு ரோஸ் கலர் புடவை கட்டிய பெண், என்னம்மா சொல்லுற பேச்சை கேட்டுகிட்டு இருக்க மாட்டியா? என்று கோபிநாத்திடம் கேட்க, அதற்கு கோபிநாத் அந்த பெண்ணிடம் உங்க வேலைய பாத்துட்டு போங்க, உங்க பேச்சை எதுக்குங்க கேட்கணும் என்று சொல்ல,

அந்த நேரத்தில் முதலில் கோபிநாத் பேசிய ரோஸ் கலர் புடவை கட்டிய பெண் கோபிநாத் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில், அது அசலில் பெண்ணு எடுத்தால் இருக்கும் என்று பேச போக அந்த பெண்ணை பேசவிடாமல் கோபிநாத் உங்க வீட்டு பொண்ணுனா? யாரும் அப்படி வச்சுக்க மாட்டாங்களா? நீங்க முதல்ல ஒழுக்கமா புள்ளை வளர்த்துட்டு வந்து பேச வாங்க என்று குழாய் அடியில் சண்டை போடுவது போன்று பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதே நேரத்தில் கோபிநாத்தா இப்படி எல்லாம் பேசுறது. தொகுப்பாளர் என்று பார்த்தால் இவர் போட்டியாளர்களிடம் இப்படி மல்லுக்கு நிற்கிறாரே என்று கேள்விகள் குவிந்து வருகிறது.
-
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications