90ஸ் இதயங்களை உடைத்த நீயா? நானா? இப்படி எல்லாமா இருக்குறாங்க? அதிர்ச்சியான கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் லவ் பண்ணுடா என சொல்லும் பெற்றோர்கள், காதல் அமையாத பிள்ளைகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் பெற்றோர்கள் பேசும் வார்த்தையை கேட்டு இப்படி எல்லாம் நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லை என்று கோபிநாத் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் காதலிக்காததால் இருக்கும் பிரச்சனைகள் குறித்து பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.
விஜய் டிவியில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் வைக்கப்படும். பொதுவாக சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளின் அடிப்படையில் நீயா நானா நிகழ்ச்சி விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில வாரங்களாக நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு தங்களுக்கு பிடிக்கவில்லை என்று அதிகமான ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் சற்றும் எதிர்பாராத வகையில் சமுதாயத்தில் நிலவும் மிகப்பெரிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதாங்க பொதுவா இப்போ இருக்கிற சூழ்நிலையில் பல பெண்களுக்கு நினைத்த மாதிரி கணவன் அமைவதில்லை. அதுபோல பல சில ஆண்களுக்கு தகுதியான வாழ்க்கை துணை அமைவதில்லை. இதற்கெல்லாம் காரணம் காதல் தான் அந்த காதலை சரியான வயதில் செய்திருந்தால் பிரச்சனையே இல்லை என்று இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் விவாதித்து இருக்கின்றனர்.

"லவ் பண்ணுடா" என்று பெற்றோர்களும்.. எங்களுக்கு தான் அந்த லவ்வே செட் ஆகலையே என்று சொல்லி பிள்ளைகளும் இரு வேறு அணியாக கலந்து கொண்டிருக்கிறனர். அந்த வகையில் இந்த வாரத்திற்காக வெளியான முதல் ப்ரோமோவில் கோபிநாத் இந்த வாரம் 90ஸ் கிட்ஸ்களின் நெஞ்சத்தை சுக்கு நூறாக உடைக்க போகும் என்று கூறியிருக்கிறார்.
அதோடு ஒரு பெண் என் பிள்ளைங்க காதலிச்சு இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணுது என்று சொல்ல, அதற்கு இன்னொரு சிவப்பு கலரில் பட்டு புடவை அணிந்த பெண், பொண்ணு தேட போகும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தன்னுடைய வேதனையை சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சியான கோபிநாத் இந்த மாதிரி எல்லாம் நான் கேட்டதே இல்ல என்று சிரித்தபடியே புலம்புகிறார்.

மேலும் ஏன் நீங்க காதலிக்கலை என்று பிள்ளைகளிடம் கேட்க, அதற்கு ஒரு பெண் "லவ் செட் ஆக மாட்டேங்குது" என்று குழந்தை தனமாக சொல்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் அதே சிவப்பு கலர் புடவை பெண்ணிடம் கோபிநாத் உங்களுக்கு உங்க பையன் லவ் மேரேஜ் பண்ணுனா நல்லா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? என்று கேட்க அந்த பெண் ஆமா சார் என்று சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து கோபிநாத் அந்தப் பெண்ணின் மகனிடம் இந்த சட்டை யார் சூஸ் பண்ணினது என்று கேட்க, தம்பி என்று சொல்கிறார். பேண்ட் என்று கேட்க அதுவும் தம்பி என்று சொல்கிறார். அப்போ அவ்வளவுதான். வீட்ல ஒரு தம்பி இருக்கான்ல அவன் கிட்ட சொல்லுங்க அவன் கூட்டிட்டு வந்துருவான். அனேகமா எனக்கு தெரிஞ்சி அவன் லவ்வுல தான் இருப்பானு சொல்ல, அரங்கத்தில் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.













Click it and Unblock the Notifications