கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி எப்போதுமே சிந்திக்க வைக்கும் தலைப்புகளுக்காக பிரபலமானது. ஆனால் இந்த வார எபிசோடு, பலரையும் நேராக மனசுக்குள் தொட்டது என்று சொல்லலாம். இந்த வார தலைப்பு "காதல் பிரேக்கப்பால் வலியை அனுபவித்தவர்கள்... அதை கடந்து வர அவர்களுக்காக குடும்பம் பட்ட கஷ்டம்". ஸ்டேஜ்ல பேசின ஒவ்வொருவரின் கதையும், அதை பார்த்தவர்களுக்கும் அவர்களோட பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்த மாதிரி இருந்தது.

தவறான புரிதல்
ஒரு பெண் பேசும்போது சொன்ன கதை பலரையும் உருக்கியது. "நாங்க 8 வருடமா காதலிச்சோம். ஆரம்பத்துல நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. நான் எப்போதும் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா வீட்டிலிருந்து கல்யாணம், லைஃப் செட்டில் ஆகணும் என்று பிரஷர் வந்துச்சு. அதை நான் அவங்கிட்ட சொன்னேன்."
அந்த நேரத்தில் அந்த பையன் படிப்பு முடிச்சு வேலை தேடி கொண்டிருந்தாராம். ஆனா அவ்வளவு சீக்கிரம் செட்டில் ஆக முடியாத நிலை. "ஒருநாள் எனக்கு வேலை கிடைச்சுச்சு என்று சொன்னார். நான் அப்பாயின்மென்ட் லெட்டர் பார்க்கணும்னு ஆசைப்பட்டு, அதை போட்டோ எடுத்துக்காட்ட சொன்னேன். ஆனா அதை அவர் தவறாக எடுத்துக்கிட்டார். 'அதை காட்டினா தான் நீ என்னை காதலிப்பியா?'ன்னு கேட்டார்... அதுவே பிரேக்கப்பாக மாறிடுச்சு" என்று அந்த பெண் கண்ணீர் மல்க சொன்னார்.
அதற்குப் பிறகு அந்த பையன் வேற எங்கேஜ்மென்ட், கல்யாணம் எல்லாம் ஆகிவிட்டதாம். "அவர் திரும்பி வருவார் என்று நான் ரொம்ப நம்பினேன்... அந்த வலியிலிருந்து வெளியே வர ரொம்ப கஷ்டப்பட்டேன்" என்றார்.
அம்மாவின் ஆறுதல்
அந்த பெண் தொடர்ந்து, "அந்த நேரத்தில் என்னோட அம்மா தான் என்னை காப்பாத்தினாங்க. எல்லோருடைய வீட்டில் மாதிரி திட்டவே இல்ல. 'உனக்கு நாங்க இருக்கோம்... நீ தான் எங்களுக்கு முக்கியம்'ன்னு சொல்லி புரிய வைத்தாங்க" என்றார்.
அம்மா முன்னாடி அழ கூட முடியாத அந்த நிலை... ஆனால் ஒரு கட்டத்தில், அம்மா-அப்பா எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு புரிஞ்சதுக்குப் பிறகு தான், மெதுவா அந்த வலியிலிருந்து வெளியே வர ஆரம்பிச்சேன் என்று சொன்னது, பலரையும் சோகமாக்கியது.
இன்னொரு கதை
அதேபோல் ஒரு இளைஞன் பேசும்போது, "நான் படிப்பு, வசதி குறைவா இருக்கேன் என்று சொல்லி நான் லவ் பண்ண பொண்ணு என்னை விட்டுட்டாங்க. அந்த வலியிலிருந்து வெளியே வர ரொம்ப கஷ்டப்பட்டேன்" என்றார். அந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருந்தது குடும்பம்தான் என்றார்.
அதை கேட்ட கோபிநாத், அவருடைய அம்மாவிடம் "உங்க பையனை எப்படி மீட்டீங்க?" என்று கேட்டார். அதற்கு அவர் அம்மா சொன்னது இன்னும் அதிகம் உருக்கியது, "நாங்க அவன்கிட்ட எப்போதுமே ஆறுதலா பேசுவோம். அவன் சாப்பிடலனா நானும் சாப்பிட மாட்டேன். அவன் கஷ்டப்படுறதை பார்த்தா நானே அழுவேன்... அப்படித்தான் மெதுவா அவன் திரும்பி வந்தான்" என்றார்.
அம்மாவின் லவ்
மற்றொரு பெண் பேசும்போது, அவங்க அம்மா சொன்ன ஒரு டயலாக் ஸ்டூடியோவையே சிரிக்க வைத்தது. "என் பொண்ணு இவ்வளவு கஷ்டப்படுறத பார்க்க முடியல... நீ சொல்லு, அந்த பையன நான் போய் தூக்கிட்டு வர்றேன். அவனை தூக்குற அளவுக்கு எனக்கு இன்னும் தெம்பு இருக்கு!" என்று கெத்தா சொன்னார். அதை கேட்ட அந்த பெண்ணே சிரிச்சுட்டாராம்.
பலரின் வாழ்க்கை
இந்த வார 'நீயா நானா' எபிசோடு, சாதாரண விவாதமா இல்ல. ஒவ்வொருவரோட வாழ்க்கை கதைகள் பேசப்பட்ட ஒரு உணர்ச்சி நிறைந்த மேடையாக இருந்தது. காதல் பிரேக்கப் வலி எல்லாருக்கும் இருக்கும்... ஆனா அந்த வலியிலிருந்து வெளியே கொண்டு வர்றது பெரும்பாலும் குடும்பமும் நண்பர்களும் தான் என்பதைக் கொஞ்சம் கூட மறக்க முடியாத மாதிரி இந்த எபிசோடு நினைவுபடுத்தியது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications