Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷ்மாவுக்கு எல்லாமே தெரியும்.. அப்படி இருந்தும் ஏன் இப்படி சொன்னாங்க! ஜெய் ஆகாஷ் பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அதை சீரியலில் கதாநாயகியாக நடித்த ரேஷ்மா முரளிதரன் ரசிகர்களும், கதாநாயகனாக நடித்த ஜெய் ஆகாஷ் ரசிகர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதற்கு ரேஷ்மா தன்னுடைய கோபத்தை ஒரு கமெண்டில் வெளிப்படுத்தி இருந்தார். அது குறித்து நடிகர் ஜெய் ஆகாஷ் பரபரப்பான பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

ஜீ தமிழில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியல் தொடங்கப்படுவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஆகாஷ் கமிட் ஆகி இருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடித்திருந்தார்.

zee tamil reshma muralitharan

ரேஷ்மா முரளிதரன் ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியிருந்தார். அதற்கு பிறகு பூவே பூச்சூடவா சீரியல் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலிலும், கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் சீரியலிலும் நடித்திருந்தார். அதுபோல ஜெய் ஆகாஷ் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அவருக்கு தமிழில் பிரபலம் கொடுத்தது ரோஜாவனம் திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து சமீபத்தில் ஜீ தமிழில் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்று சீரியலில் நடித்திருந்தார். இப்போதும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலில் கமிட்டாகி இருக்கிறார் என்றதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் சீரியல் தொடங்கி ஆறு மாதத்திற்குள் திடீரென்று கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இது இந்த சீரியல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது. இதனால் ஜெய ஆகாஷ் ரசிகர்கள் மற்றும் ரேஷ்மா ரசிகர்கள் இருவரும் இந்த சீரியல் யாரால் முடிந்தது என்று கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

அப்போது ஜெய் ஆகாஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு காலில் அடிபட்டிருந்ததால் தன்னால் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியவில்லை. நான் ஒரு வாரம் சீரியலில் நடிக்கவில்லை என்றதும் டிஆர்பி குறைந்துவிட்டது. அதனால் சேனல் தரப்பினர் நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். என்னால் முடியாது ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னேன். அதனால் சீரியலை முடித்துவிட்டார்கள்.

zee tamil reshma muralitharan

இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இந்த சீரியல் முடிவதற்கு காரணம் ரேஷ்மா தான் என்று ஜெய் ஆகாஷின் ரசிகர்கள் சில போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். அதற்கு அதில் ரேஷ்மா ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதில் ஜெய் ஆகாஷ் ரசிகர்கள் அனைவருக்கும் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த சீரியல் எதற்காக முடிந்தது என்று சரியான உண்மை உங்களுக்கு தெரியாவிட்டால் பொய்யான கதைகளை பரப்புவதையும் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதையும் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நெஞ்சத்தை கிள்ளாதே நிகழ்ச்சியை ஏன் முடிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அது என்னுடைய தவறு அல்ல. எனது குழுவின் எந்த தவறும் இல்லை.

எனது ரசிகர் பக்கங்களை தாக்கி நீங்கள் புகார் அளிப்பது உண்மையை மாற்றப் போவதில்லை. எனது ரசிகர்கள் என்னை அன்புடனும், மரியாதைகளுடன் ஆதரித்துள்ளனர். அவர்கள் அநியாயமாக குறி வைக்கப்படுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நீங்கள் உண்மையிலேயே உங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக இருந்தால் அவருடைய தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள். டாக்ஸிக்காக யாருக்கும் சப்போர்ட் செய்யாதீர்கள் என்று காட்டமாக பதில் கொடுத்திருந்தார்.

அந்த பதிலுக்கு ரேஷ்மாவின் தோழியான நடிகை நக்ஷத்திராவும் ஆதரவு தெரிவித்து இருந்தார். இது குறித்து நடிகர் ஜெய் ஆகாஷ் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் ரேஷ்மா எதற்காக இப்படி கமெண்ட் கொடுத்தாங்க என்று எனக்கு சத்தியமா தெரியல. எனக்கு கால் வலி இருக்கிறது என்று ரேஷ்மாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும்.

என்னுடைய கால் வீங்கி இருப்பதை பார்த்து அவர்களே கால பார்த்துக்கோங்க என்று அத்தனை முறை சொல்லி இருக்காங்க. இந்த சீரியல் இப்போது முடிவடைந்ததற்கு முழுக்க காரணம் நான் தான் என்று எனக்கு தெரியும். இதற்கு வேறு வழியில்லை. நான் என்ன செய்ய முடியும்? நான் என்னால் முடியவில்லை என்று சேனல் தரப்பினிடம் சொல்லிவிட்டேன். அதற்கு அவர்கள் எடுத்த முடிவுக்கு நான் பொறுப்பாக முடியாது.

ஒருவேளை ரேஷ்மாவிற்கு இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது வருத்தமாக இருந்திருக்கலாம். அதற்காக அவங்க இப்படி ஒரு கமெண்ட் போட்டு இருக்கணுமா? என்பது எனக்கு கேள்வியாக இருக்கிறது. ரேஷ்மா என்னிடம் நன்றாக தான் பேசிக் கொண்டு இருந்தாங்க. ஆனாலும் இப்போ அவங்க இப்படி கமெண்ட் போட்டு இருக்காங்க. இதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. இதில் சம்பந்தமே இல்லாம ரேஷ்மாவின் பிரண்ட் நக்ஷத்திரா கமெண்ட் கொடுத்திருப்பது டிசென்டா இல்ல என்று அந்த பேட்டியில் ஜெய் ஆகாஷ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+