நெஞ்சத்தை கிள்ளாதே: மதுமிதாவின் காதல் குறித்து அறியும் அபிஷேக்.. அடுத்து நடக்கப் போகும் சூழ்ச்சி என்ன?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அதிதி ஜூஸ் வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்க அபிஷேக் குடிக்க சொல்லி கொண்டிருக்க யாரும் எதிர்பாராத விதமாக அங்கு அபிஷேக்கின் தம்பி ராகுல் வந்து நிற்கிறார். நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கேட்க உங்க அண்ணன் தான் அழைத்து வந்ததாக சொல்கிறார் அதிதி.
பிறகு ராகுல் அதிதிக்கு கொடுக்க அபிஷேக் ரெடி பண்ண ஜூஸை எடுத்து குடித்து விடுகிறார். அபிஷேக் வேலை இருப்பதாக சொன்னதால் அதிதை நான் டிராப் பண்ணி விடுகிறேன் என்று சொல்ல அபிஷேக் வேண்டாம் என்று மறுக்கிறார். ஆனால் ராகுல் நீங்க வேலையை பாருங்க என்று சொல்லி அவளை அழைத்து கொண்டு கிளம்புகிறார்.

வரும் வழியில் ராகுலுக்கு போதை ஏற தொடங்க அவர் காரை தாறுமாறாக ஓட்டுகிறார். ஒரு வழியாக வீடு வந்து சேர அதிதி ராகுலை வீட்டிற்கு கூப்பிட ராகுலை பார்த்த மாயா அவர் குடித்து இருப்பதை புரிந்து கொள்கிறார். அதே நேரத்தில் ராகுலுக்கு குடிக்கும் பழக்கம் இல்லாததால் இது எப்படி நடந்தது என்று குழப்பம் அடைகிறார்.
மதுவும் கௌதமும் வீட்டிற்கு வர மாயா உண்மையை மறைக்க முயற்சிக்கிறார். ராகுலின் நடவடிக்கையை பார்த்து கௌதமுக்கு சந்தேகம் வருகிறது. அபிஷேக்கின் திட்டம் ராகுலால் பெயிலியரான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மதுமிதாவை பார்க்க அவளது தோழி ( முன்னாள் காதலரின் மனைவி ) வந்திருக்க ரேணுகா நீ அடிக்கடி இங்க வராத, மதுமிதாவோட காதல் விஷயம் மாப்பிள்ளைக்கு தெரிந்தா பெரிய பிரச்னையாகிடும் என்று திட்டி கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அதிதியை பார்க்க அபிஷேக் இங்கு வர இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு விடுகிறான், இதை வைத்து மதுவை பழி தீர்க்க திட்டமிடுகிறார். அடுத்து ரேணுகா தலை தீபாவளி வருவதால் மதுவையும் மாப்பிள்ளையும் வீட்டிற்கு கூப்பிட வேண்டும் என பேசி கொண்டிருக்கிறார்.
இதே நேரத்தில் மாயா ஜீவாவிடம் நாமளும் நம்ம வீட்டிற்கு போகணும், எங்க வீட்டில் 4 ட்ரக்ல பட்டாசு வாங்குவாங்க என்று சொல்ல ஜீவா அதை கேட்டு ஷாக் ஆகிறான். பிறகு ரேணுகாவும் நீங்களும் தல தீபாவளிக்கு அங்க தான் போகணும் என்று சொல்ல மாயா இருங்க நான் அம்மா கிட்ட கேட்டுட்டு வரேன் என்று போன் செய்கிறார்.

ஆனால் சகுந்தலா போனை எடுக்கலாம் இருக்க மாயா டென்ஷன் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications