Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IC 814: The Kandahar Hijack Review: அரவிந்த்சாமி நடிப்பில்.. திக், திக், கந்தகார் கடத்தல் சீரிஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய பாதுகாப்பு போன்ற விஷயங்களை திரைப்படத்திலோ, சீரிசிலோ கையாளும் போது, இயக்குநர்கள் பெரும்பாலும் தேசபக்தி மிகுந்த கதையை சொல்ல முயற்சிப்பார்கள். நாடக பாணியிலான பேச்சுக்கள், நாடக பாணியிலான வசனங்கள், உண்மைக்கு புறம்பான காட்சிகள் மூலம் கதையை நகர்த்துவார்கள். ஆனால், நெட்ஃப்ளிக்ஸின் சமீபத்திய ஒரிஜினல் தொடரான "IC 814: தி கந்தஹார் ஹைஜாக்" (ic 814 the kandahar hijack) இதற்கு விதிவிலக்கு.

1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்திய விமான நிறுவனத்தின் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், ஐந்து தீவிரவாதிகளால் hijack செய்யப்பட்டது. இந்த கடத்தல் எட்டு நாட்கள் நீடித்தது. அப்போது 24 மணி நேர செய்தி டிவி சேனல்கள் அதிகமில்லை என்றபோதிலும், தொலைக்காட்சி செய்திகளில் இந்த செய்தியின் அப்டேட்டை பார்க்க மக்கள் டென்ஷனோடு காத்திருந்தார்கள். விமானத்தில் பயணித்த சமீபத்தில்தான் திருமணமான நபரை கொன்று வீசியது போன்ற இரக்கமற்ற செயல்களில் தீவிரவாதிகள் ஈடுபட்டு நாளுக்கு நாள் இந்திய மக்களின் கோபத்தை சம்பாதித்தனர்.

ott netflix

பயன்படுத்திய பொருட்கள்: வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோது நடந்தது இந்த சம்பவம். அப்போதைய நமது அரசின் தயார் நிலை குறைபாடு, நிர்வாகத் துறையில் ஏற்பட்ட பல்வேறு தவறுகள் மற்றும் பயணிகளை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் நடத்தப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தை ஆகியவற்றை நெட்பிளிக்ஸ் சீரிஸ் கண்முன்பாக கொண்டுவந்துள்ளது. இந்த தொடர் 1999களின் கால கட்டத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறது. கதாப்பாத்திரங்கள் பயன்படுத்தும் வாகனங்கள், தொலைபேசிகள் உள்ளிட்ட அனைத்திலும் அக்காலகட்டம் கவனமாக நினைவூட்டப்படுகிறது. அதற்காகவே ஹேட்ஸ்-ஆப், இயக்குநர் அனுபவ் சின்ஹா.

அஜித் தோவல்: பயணிகளின் உயிரை காப்பாற்ற இந்திய அரசு மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டிய கடினமான முடிவை எடுத்தது. அந்த நேரத்தில் உளவுத்துறை ஆபரேஷன்ஸ் தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.

உண்மை தகவல்கள்: நெருக்கடியின் சிக்கல்களையும், இந்திய அரசின் முடிவெடுக்கும் செயல்முறையையும் உண்மைக்கு பக்கத்தில் இருந்து இந்த சீரிஸ் ஆழமாக ஆராய்கிறது. பயணிகளை காப்பாற்ற பயங்கரவாதிகளை விடுவித்த சம்பவத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பி, அந்த செயல்களின் நீண்ட கால விளைவுகளை ஆராய்கிறது. அதோடு, கடத்தல் வீரர்கள், விமான பணிப்பெண்கள் மற்றும் பயணிகளுக்கிடையேயான உறவை காண்பிக்கிறது. ஊடகங்கள் அப்போது எவ்வாறு செயல்பட்டன, நியூஸ் ரூமில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் தொட்டுச் செல்கிறது.

ஷார்ப்பாக உள்ளது: ஆறு எபிசோடுகளில், விமானத்திலும், விமானத்திற்கு வெளியே நாடு முழுக்கவும் ஏற்பட்ட குழப்பம் மற்றும் நிர்வாக தயாரின்மையை புட்டுபுட்டு வைத்துள்ளார் இயக்குநர். அனைத்து எபிசோடுகளும் சுருக்கமானவை மற்றும் நேர விரயம் இல்லாமல் உள்ளன. வணிக சினிமா பெரும்பாலும் அதிகம் நம்பியிருக்கும் தேவையற்ற காட்சிகள் அல்லது துணைக்கதைகள் இந்த சீரிசில் இல்லை. விமானத்தில் உள்ளவர்களின் பின்னணியை இழுத்தடித்து பின் கதையை கொண்டு செல்லவில்லை. காட்சியமைப்புகளிலேயே அது கடத்தப்பட்டுவிடுகிறது.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லை: உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம் மற்றும் தொடர்களுக்கு பொதுவாக ஒரு சவால் உண்டு. தகவல்கள் நிறைய இருக்கும் என்பதால் அதை முழுமையாக காட்ட வேண்டியிருப்பதோடு, திரித்துவிடாமலும் பார்க்க வேண்டியிருக்கும். அதிக தகவல்களை அடுக்கினால் பார்வையாளர்கள் சோர்ந்துவிடவும் வாய்ப்பு உண்டு. டாக்குமென்ட்ரி பார்க்கும் ஃபீலிங்கும் வரக்கூடும். ஆனால், சின்ஹா இந்த இரண்டுக்கும் இடையே சமநிலைப்படுத்தியுள்ளார். பரபரப்பான சினிமா அனுபவத்தை தந்துள்ளார். தெளிவான புரிதலை வழங்க சில இடங்களில் பின்னணி குரல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ott netflix

செயற்கைத்தனம் இல்லை: 1999 காலகட்டம் 24 மணி நேர செய்தி டிவி சேனல்கள் இப்படி குவிந்து கிடக்காத காலகட்டம். எனவே அது பரபரப்பு குறைவான காலகட்டம். அது காட்சிகளிலும் எதிரொலிக்கிறது. அனைவருமே இயல்பாக நடித்துள்ளனர். எந்த அதிகாரியும் விழுந்தடுத்து ஓடி தங்களை பரபரப்பாக காட்டிக்கொள்ளவில்லை.

இதய துடிப்பை இமிடேட் செய்துள்ள பிஜிஎம், திரைக்கதையின் பரபரப்பை காட்சிக்கு, காட்சி, பக்காவாக கொண்டுவருகிறது. ஒளிப்பதிவும் அதை கடத்துகிறது. மற்றபடி கதாப்பாத்திரங்கள் வீணாக டென்ஷனாகி செயற்கைத்தனத்தை காட்டவில்லை. வெளியுறவுத்துறை உயரதிகாரிகளில் ஒருவராக, வரும் அரவிந்த் சாமி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவரது கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் பார்ப்பது, ரோஜா படத்தை ரீவிசிட் செய்வது போல உள்ளது. மொத்தத்தில், A must watch Netflix series.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+