இப்படியா விஜய் படத்தை காப்பி அடிப்பாங்க? தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் துள்ளாத மனமும் துள்ளும் சீரியலை காப்பி அடித்த கதை போன்று இருக்கிறது என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை: விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரத்தோடு சீசன் 1 முடிவடைந்த நிலையில் இந்த வாரத்தின் திங்கள் கிழமையில் இருந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் கதாநாயகனாக வினோத் பாபுவும் கதாநாயகியாக பவித்ராவும் நடித்து வருகின்றனர்.
தென்றல் வந்து என்னை தொடும் இரண்டாவது சீசனின் ப்ரோமோ விஜய் மற்றும் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் காட்சிகளைப் போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஜெயிலுக்கு சென்ற வெற்றி
விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த சீரியலில் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடையப்பட்டு இந்த வாரத்தில் திங்கட்கிழமையிலிருந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்புவதாக ப்ரோமோ வெளியாகி இருந்தது. ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வினோத் பாபு தன்னுடைய அண்ணி செய்த கொலை குற்றத்தை தான் செய்ததாக ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு சென்றதால் கோபித்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறிய அபி தற்போது இரண்டாவது சீசனில் கலெக்டராக மாறி இருக்கிறார்.

சீரியலின் கதை
முதல் சீசனில் ஜெயிலுக்கு சென்ற வெற்றி வெளியே வந்து தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை தேடி பார்த்து அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியாததால் தன்னுடைய குழந்தையை எங்கேயோ கொண்டு சென்ற அபியை இனி நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று வீராப்போடு திட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் பழைய படி ரௌடியாக மாறுகிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஆரம்பத்தில் இருந்து அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலின் கதை வெளிநாட்டில் படித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்த பெண் கோவிலில் சாமி கும்பிடும்போது அங்கே ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் நடக்கிறது. அந்த காதலை பிரிப்பதற்காக வெற்றி அங்கே வந்து கழுத்தில் இருந்த தாலியை பறித்து அடித்து உதைக்கிறார்.

மீண்டும் ட்ரோல்
அதை தடுத்த அபியின் கழுத்தில் தாலி கட்டி நெற்றியில் பொட்டு வைத்து இப்ப என்ன செய்வாய் என்று கேட்க, தாலி கட்டி விட்டால் நீ தான் என்னுடைய கணவன் என்று வெற்றியின் வீட்டில் வந்து அபி இருந்து கொண்டு வெற்றியை திருத்தி தற்போது கர்ப்பமாகவும் இருந்தார். இந்த சீரியல் அதிகமாக ஆரம்பத்தில் கலாய்க்கப்பட்டது. ஒரு பெண்ணுக்கு பிடிக்காத ஒருவன் தாலி கட்டி விட்டால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இது என்ன கதை. இதைத்தான் சமுதாயத்தில் பலர் பின்பற்றுவார். இது தவறான முன்னுதாரணம் என்றெல்லாம் அதிகமான ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் தங்களுடைய கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகத்தின் ப்ரோமோவில் அபி கலெக்டர் ஆகி இருப்பதை வைத்து மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஒருவேளை இருக்குமோ
ஏற்கனவே தாலி கட்டிய ஒரே காரணத்தினால் அவன் தான் என்னுடைய கணவர் என்று வாழ்ந்து வந்த அபி இப்போ கலெக்டராக மாறிய பிறகு என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று சிலர் கேள்வி எழுப்ப? இல்லை இப்போதுதான் இந்த இயக்குனர் அயலி திரைப்படம் பார்த்திருப்பாராக இருக்கும். அந்த வெப் சீரிஸ் கதையைப் பார்த்து இது நம்ம சீன் போல இருக்கிறது. அதனால் நம்மை யாரும் கலாய்க்கும் முன்பு நாமே இதை முடித்துவிட்டு புது கதையை தொடங்கி விடுவோம் என்று அவசர அவசரமாக இப்படி அபியை கலெக்டராக மாற்றி இருக்கிறார் என்று கலாய்த்து வருகிறார்கள். இனி எப்படியும் அபி வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் பெண்ணியம் பேசி பிரச்சனைகளை வைத்தே பல எபிசோடுகளை வைத்து விடுவார்கள் என்று திட்டியும் வருகிறார்கள்.

துள்ளாத மனமும் துள்ளும் சாயல்
அதுமட்டுமல்லாமல் கலெக்டர் என்றால் உடனே அவர் கெட்டப் அப்படியே துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் கலெக்டர் சிம்ரன் போல மாறி விடுவார்கள் போல, அதே போல உடை உடுத்தி முகத்தில் வீராப்போடு பவித்ராவும் மாறி இருக்கிறார். இதனால் இனி துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் கதைக்களம் இங்கேயும் வருமா? இல்லை காற்றிகள் மட்டும்தான் அதே போல இருக்கப் போகிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப ,மீண்டும் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
-
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications