சீச்சீ இப்படி ஒரு அபத்தமா? காருக்குள்ளே அக்கப்போரு.. பிரபல சீரியல் சொதப்பல்..இதை கவனிச்சு இருக்கலாம்
சென்னை: விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சில காட்சிகள் குறித்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
கதாநாயகி வெண்ணிலாவும் கதாநாயகன் சூர்யாவும் காருக்குள்ளே பல நாட்களாக இருந்து வருகிறார்கள். இது குறித்து தான் இப்போது சமூக வலைத்தளத்தில் பலர் கலாய்கின்றனர்.
அதுவும் காருக்குள்ளே குளியல் போட்டு இவர்கள் செய்யும் அலப்பறைகள் பலரையும் முகம் சுளிக்க வைத்து கொண்டு இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதாநாயகி கிராமத்தில் இருக்கிறார். அவர் எப்படியாவது தான் படித்து பெரிய அளவில் வரவேண்டும் என்று இருக்கும் நிலையில் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். தனக்கு படிப்பு தான் முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டு போராடி ஒரு கல்லூரியில் சேர்கிறார்.
பிறகு பல பிரச்சினைகளுக்கு பிறகு படிப்பை தொடங்கும் கதாநாயகி வெண்ணிலாவிற்கு அந்த காலேஜில் ப்ரொபஷராக இருக்கும் சூரியா மீது காதல் வருகிறது. இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கியும்போது வீட்டில் பிரச்சனை வருகிறது. பல பிரச்சனைகளைத் தாண்டி திருமண மேடை வரை வந்த இவர்களுடைய திருமணம். அப்போதும் பிரச்சனையை ஏற்பட்டு இருவரும் சண்டை இட்டு பிரிந்து விடுகிறார்கள்.
இப்போது மீண்டும் வெண்ணிலா அதே காலேஜில் படிக்க வந்திருக்கும் நிலையில் கோவிலில் சாமி கும்பிட்டு இருக்கும்போது அவருக்கு தெரியாமல் சூரியா தாலி கட்டி விடுவார். அதற்கு பிறகு இவர்களுக்கு பல பிரச்சனைகள் வரும். சரி அதை விடுவோம். இப்போது கதைக்கு வருவோம். வெண்ணிலா மனதை எப்படியாவது சூரியா மாற்ற வேண்டும் என்று என்எஸ்எஸ்க்கு போகிறோம் என்று வெண்ணிலாவை ஏமாற்றி ஒரு ஊருக்கு கூட்டிட்டு வரும்போது சில ரவுடிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறது.
அப்போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக காரை அருகில் இருந்த வைக்கோல் புதர்களுக்குள் வீட்டு புதருக்குள்ளே காருக்குள் சூர்யா மற்றும் வெண்ணிலா இருவரும் இருக்கின்றனர். அப்போது காருக்குள்ளே வெண்ணிலா குளிப்பதற்காக சூர்யா ரெடி பண்ணி கொடுக்க, காருக்குள்ளேயே குளியல் வேலையை வெண்ணிலா முடித்து விடுகிறார். இந்த காட்சிகள் தான் இப்போது இணையத்தில் வேகமாக அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. எப்படித்தான் ஒரு காருக்குள் இவர்களால் பாத்ரூம் உருவாக்க முடிந்தது என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்கு மேலாக இவர்கள் இதே வைக்கோல் போருக்குள் அக்கபோர் பண்ணி கொண்டு இருப்பதை குறித்து அதிகமானார் கேள்வி எழுப்பியும் கலாய்த்தும் வருகிறார்கள். என்னதான் சீரியலாக இருந்தாலும் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இவர்கள் உருட்டுற உருட்டு வேற லெவல் என்று கூறி வருகிறார்கள். அடிக்கடி இந்த சீரியலில் இதுபோன்று பல சொதப்பல்களும் அபத்தமான காட்சிகளும் இருக்கிறது. அதுபோல இந்த சீரியலின் கதை கூட ஒரு அபத்தமானது தான்." ஒரு கல்லூரி மாணவி காலேஜ் ப்ரொபோசரை காதலித்து இவர்கள் பண்ணும் ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை" என்று பலர் கருத்து கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்த காட்சிகளிலும் இவர்கள் செய்யும் அலப்பறையும் தாங்க முடியவில்லை. காரணம் கதை நகர வேண்டும் என்பதற்காக எப்படி என்றாலும் இவர்கள் கதையை உருவாக்க முடியுமா? என்று இந்த சீரியலில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும் என்று சில கூறி வருகின்றனர். காரணம் இவர்கள் அடிக்கடி இது போன்ற சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது.
குறிப்பிட்ட இந்த காருக்குள் இருக்கும் சீனில் கூட இவர்களை தேடி வந்து அடியாள்கள் வைக்கோல்போர் பக்கத்தில் இருந்து சாப்பிட்டு கொண்டிருப்பார்கள் அப்போது அவர்களுக்கே தெரியாமல் சூர்யா சென்று அங்கிருக்கும் சாப்பாட்டை திருடி கொண்டு வந்து வெண்ணிலாவிடம் கொடுத்து இருப்பார். எப்படி ஒரு மனிதன் வெளியே வைக்கோல் போரை விட்டு வெளியே வந்து பிறகு மீண்டும் உள்ளே போவது கூட தெரியாத அளவிற்கு அங்கு இருப்பவர்களால் இருக்க முடிந்தது என்று தெரியவில்லை.
ஆனால் காருக்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வெண்ணிலாவிற்கு விக்கல் வரும் அப்போது மட்டும் அங்கிருந்தவர்களுக்கு காது கேட்கிறது. இதுதான் எப்படி என்று தெரியவில்லை. அதுபோல அந்த வக்கோல் போருக்குள் கார் உள்ளே போயிருக்கும். ஆனால் வைக்கோல்போர் சுற்றி சிறு கயிறால் கட்டப்பட்டிருக்கிறது. எந்த கயிறையும் கார் துண்டிக்காமல் உள்ளே போய் இருக்கிறது. இது எப்படி? என்று கேள்வியும் நமக்கு வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த காருக்குள் இவர்கள் இருக்கப் போகிறார்களோ என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். சென்னை: விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சிரியலில் சில காட்சிகள் குறித்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
கதாநாயகி வெண்ணிலாவும் கதாநாயகன் சூர்யாவும் காருக்குள்ளே பல நாட்களாக இருந்து வருகிறார்கள். இது குறித்து தான் இப்போது சமூக வலைத்தளத்தில் பலர் கலாய்கின்றனர்.
அதுவும் காருக்குள்ளே குளியல் போட்டு இவர்கள் செய்யும் அலப்பறைகள் பலரையும் முகம் சுளிக்க வைத்து கொண்டு இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதாநாயகி கிராமத்தில் இருக்கிறார். அவர் எப்படியாவது தான் படித்து பெரிய அளவில் வரவேண்டும் என்று இருக்கும் நிலையில் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். தனக்கு படிப்பு தான் முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டு போராடி ஒரு கல்லூரியில் சேர்க்கிறார்.

பிறகு பல பிரச்சினைகளுக்கு பிறகு படிப்பை தொடங்கும் கதாநாயகி வெண்ணிலாவிற்கு அந்த காலேஜில் ப்ரொபஷனராக இருக்கும் சூரியா மீது காதல் வருகிறது. இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கியும்போது வீட்டில் பிரச்சனை வருகிறது. பல பிரச்சனைகளைத் தாண்டி திருமண மேடை வரை வந்த இவர்களுடைய திருமணம். அப்போதும் பிரச்சனையை ஏற்பட்டு இருவரும் சண்டை இட்டு பிரிந்து விடுகிறார்கள்.
இப்போது மீண்டும் வெண்ணிலா அதே காலேஜில் படிக்க வந்திருக்கும் நிலையில் கோவிலில் சாமி கும்பிட்டு இருக்கும்போது அவருக்கு தெரியாமல் சூரியா தாலி கட்டி விடுவார். அதற்கு பிறகு இவர்களுக்கு பல பிரச்சனைகள் வரும். சரி அதை விடுவோம். இப்போது கதைக்கு வருவோம். வெண்ணிலா மனதை எப்படியாவது சூரியா மாற்ற வேண்டும் என்று என்எஸ்எஸ்க்கு போகிறோம் என்று வெண்ணிலாவை ஏமாற்றி ஒரு ஊருக்கு கூட்டிட்டு வரும்போது சில ரவுடிகளிடம் பிரச்சனை ஏற்படுகிறது.
அப்போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக காரை அருகில் இருந்த வைக்கோல் புதர்களுக்குள் வீட்டு புதருக்குள்ளே காருக்குள் சூர்யா மற்றும் வெண்ணிலா இருவரும் இருக்கின்றனர். அப்போது காருக்குள்ளே வெண்ணிலா குளிப்பதற்காக சூர்யா ரெடி பண்ணி கொடுக்க, காருக்குள்ளேயே குளியல் வேலையை வெண்ணிலா முடித்து விடுகிறார். இந்த காட்சிகள் தான் இப்போது இணையத்தில் வேகமாக அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. எப்படித்தான் ஒரு காருக்குள் இவர்களால் பாத்ரூம் உருவாக்க முடிந்தது என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்கு மேலாக இவர்கள் இதே வைக்கோல் போருக்குள் அக்கபோர் பண்ணி கொண்டு இருப்பதை குறித்து அதிகமானார் கேள்வி எழுப்பியும் கலாய்த்தும் வருகிறார்கள். என்னதான் சீரியலாக இருந்தாலும் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இவர்கள் உருட்டுற உருட்டு வேற லெவல் என்று கூறி வருகிறார்கள். அடிக்கடி இந்த சீரியலில் இதுபோன்று பல சொதப்பல்களும் அபத்தமான காட்சிகளும் இருக்கிறது. அதுபோல இந்த சீரியலின் கதை கூட ஒரு அபத்தமானது தான்." ஒரு கல்லூரி மாணவி காலேஜ் ப்ரொபோசரை காதலித்து இவர்கள் பண்ணும் ரொமான்ஸ் பார்க்க சகிக்கவில்லை" என்று பலர் கருத்து கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்த காட்சிகளிலும் இவர்கள் செய்யும் அலப்பறையும் தாங்க முடியவில்லை. காரணம் கதை நகர வேண்டும் என்பதற்காக எப்படி என்றாலும் இவர்கள் கதையை உருவாக்க முடியுமா? என்று இந்த சீரியலில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும் என்று சில கூறி வருகின்றனர். காரணம் இவர்கள் அடிக்கடி இது போன்ற சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது.
குறிப்பிட்ட இந்த காருக்குள் இருக்கும் சீனில் கூட இவர்களை தேடி வந்து அடியாள்கள் வைக்கோல்போர் பக்கத்தில் இருந்து சாப்பிட்டு கொண்டிருப்பார்கள் அப்போது அவர்களுக்கே தெரியாமல் சூர்யா சென்று அங்கிருக்கும் சாப்பாட்டை திருடி கொண்டு வந்து வெண்ணிலாவிடம் கொடுத்து இருப்பார். எப்படி ஒரு மனிதன் வெளியே வைக்கோல் போரை விட்டு வெளியே வந்து பிறகு மீண்டும் உள்ளே போவது கூட தெரியாத அளவிற்கு அங்கு இருப்பவர்களால் இருக்க முடிந்தது என்று தெரியவில்லை.
ஆனால் காருக்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வெண்ணிலாவிற்கு விக்கல் வரும் அப்போது மட்டும் அங்கிருந்தவர்களுக்கு காது கேட்கிறது. இதுதான் எப்படி என்று தெரியவில்லை. அதுபோல அந்த வக்கோல் போருக்குள் கார் உள்ளே போயிருக்கும். ஆனால் வைக்கோல்போர் சுற்றி சிறு கயிறால் கட்டப்பட்டிருக்கிறது. எந்த கயிறையும் கார் துண்டிக்காமல் உள்ளே போய் இருக்கிறது. இது எப்படி? என்று கேள்வியும் நமக்கு வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த காருக்குள் இவர்கள் இருக்கப் போகிறார்களோ என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்

Click it and Unblock the Notifications