நீயா நானாவில் கோபிநாத் fees கட்டுறேன்னு சொன்னாரு.. ஆனால்!? படிப்பு தடைபட்ட பெண் விரக்தியில் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு தாத்தா தன்னுடைய பேத்திக்கு படிப்பு கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கண்ணீரோடு பேசி இருந்த நிலையில் அப்போது கோபிநாத் தான் அந்த மாணவியின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு படிப்பு கட்டணம் செலுத்தவே இல்லை என்று வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதாவது நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது போல கோபிநாத் நிஜத்தில் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை ஒரு வாரமாக தான் முயற்சி செய்தும் அவரிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்

பல பேருக்கு அட்வைஸ் செய்து ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் இருக்கும் கோபிநாத் கேமரா முன்பு ஒன்று பேசி விட்டு பிறகு இப்படி அலட்சியம் செய்திருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் செய்த செயலால் கல்லூரி மாணவி தன்னுடைய படிப்பு தடைப்பட்டு விட்டது என்று இணையத்தில் பேசி இருக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. பொதுவாக நீயா நானா நிகழ்ச்சி என்றால் அனைவருக்கும் தெரிந்து விடும்.

netizens troll by Neeya Naana Gopinath Said He Will Pay Study Fees

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பல வருடங்களாக கோபிநாத் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவதும் தான் இவருடைய பிளஸ் பாயிண்ட். கோபிநாத் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பு ராஜ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி பிறகு ஜெயா டிவி, என் டி டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி பிறகு 2006 ஆம் ஆண்டு முதல் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் இவருடைய தனித்துவமான கருத்து மூலமாக பல ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார்.

அதன் மூலமாக ஒரு சில திரைப்படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் மட்டுமல்லாமல் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக ஆர்வலராக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வருகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் பலருக்கும் தெரிந்தது தான்.

இந்த நிலையில் கோபிநாத் குறித்து ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 2016 ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் வயதான நபர் ஒருவரும் அவருடைய பேத்தியும் கலந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது அந்த வயதான நபர் தன்னுடைய பேத்தியின் படிப்புக்காக கஷ்டப்படுவதாக கூறியிருந்தார். அதில் அந்த பெண் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்திருந்தால் எப்படியோ கஷ்டப்பட்டு பத்தாயிரம் ரூபாய் கட்டி விட்டதாகவும் மீதம் 26,000 பேலன்ஸ் இருப்பதாகவும் அதை எப்படியாவது கட்ட வேண்டும் என்றும் பேசி இருந்தார்.

அதை பார்த்து அனைவரும் கண்கலங்கி இருந்தனர். அந்த நேரத்தில் கோபிநாத் நீங்க கவலைப்படாதீங்க உங்க பேத்தி படிப்புக்கு தேவையான மொத்த பணத்தையும் நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறியிருந்தார். இதை அடுத்து அந்த மாணவி இப்போது ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நான் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது அதில் எங்க தாத்தா எனக்கு பீஸ் கட்ட பைசா இல்லை என்று சொன்னபோது நான் மீதமுள்ள தொகையை செலுத்தி படிக்க வைக்கிறேன் என்று கோபிநாத் சொல்லி இருந்தார். அப்போது அவருடைய பிஏ நம்பர் எங்களிடம் தந்து இருந்தார். நாங்கள் ஒரு வாரமாக கோபிநாத் சாரின் பிஏ விற்கு போன் செய்து கொண்டே இருந்தோம்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் எடுக்கவே இல்லை பிறகு கோபிநாத் பிசியாக இருக்கிறார். பிறகு அவரே உங்களிடம் கூப்பிடுவார் என்று சொல்லி விட்டார்கள். நானும் தானாக உதவி செய்ய வந்தவர்களை தொல்லை பண்ண கூடாது அவர்களே கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். பின் பல மாதங்கள் கழிந்தும் அவர்கள் கூப்பிடவே இல்லை... எனக்கும் இனி கூப்பிட வேண்டாம் என்று தோன்றி விட்டது.

netizens troll by Neeya Naana Gopinath Said He Will Pay Study Fees

பிறகு நான் என் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்காக தேடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தாத்தாவை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்... ஒருவருக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் சொன்னதை செய்யணும் இப்படி ஒருவருக்கு உறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றக்கூடாது என்று வருத்தத்துடன் அந்த மாணவி பேசியிருந்தார். தற்போது இவர் பேசியிருக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து கோபிநாத்தா இப்படி செய்தது என்று ரசிகர்கள் அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+