மிரட்டும் ஆக்சன் கிங்...அப்போ ஞாயிற்றுக்கிழமை சம்பவம் இருக்கு...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Subscribe to Oneindia Tamil

சென்னை : அடடா..ப்ரோமோவிலே ஆக்சன் கிங் மிரட்டுராரே அப்போ நிகழ்ச்சியில் எப்படி இருக்குமோ என்று ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையில் பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

ஜீ தமிழ் ரசிகர்களுக்கு பங்கமான நாளாக இருக்கப்போகிறது. சர்வைவர் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று முழு செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட போகிறது.

நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி பற்றி ரசிகர்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிற சேனல்களுக்கும் தற்போது இதைப்பார்த்து அல்லு விடுதாம். ..

புதுசு புதுசா கலக்குறாங்களே

புதுசு புதுசா கலக்குறாங்களே

சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களுக்கு போட்டியாக தற்போது ஜீ தமிழ் சேனலும் புதுப்புது நிகழ்ச்சிகளை களம் இறங்கி வருகிறது. முன்பெல்லாம் அதிகமான ரசிகர்கள் சன் டிவி சீரியல்களை தான் தொடர்ந்து பார்த்து வந்தனர். அதற்குப் பிறகு விஜய் டிவியில் பிறமொழியில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை கவர்ந்து இழுக்க ஆரம்பித்தது. அதற்கு பிறகு விஜய் டிவியில் புதுசு புதுசாக ரியாலிட்டி ஷோக்களை வைத்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதுவும் இளைஞர்களை லாவகமாக கையாண்டு வருகின்றனர். இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப புதுசு புதுசா கவர்ச்சியாகவும், காமெடியாகவும் பல நிகழ்ச்சிகளை களமிறங்கி வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. விஜய், சன் சேனல்களுக்கு மாற்றாக ஜீ தமிழ் தான் பலர் ரசிகர்களுக்கு இருந்து வருகிறதாம்.

மிரட்டலான சர்வதேச நிகழ்ச்சி

மிரட்டலான சர்வதேச நிகழ்ச்சி

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கும் போது இந்த நிகழ்ச்சி எல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா என்ற கோணத்தில் பல கருத்துக்கள் பரவி வந்தது. ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கி தொடர்ந்து நான்கு சீசனிலும் பெரும் வெற்றி அடைந்து விட்டது. தற்போது அதற்கு டப் கொடுக்கும் விதமாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே ஜீ தமிழும் ஒரு ரியாலிட்டி ஷோவை உருவாக்கி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. ஆனால் செப்டம்பர் இறுதி வாரத்தில் ஜீ தமிழில் சர்வைவர் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட இருக்கிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு கமல்ஹாசன் ஓகே சொன்னது போல சர்வைவர் நிகழ்ச்சியினை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

மிரட்டலான ப்ரோமோ

மிரட்டலான ப்ரோமோ

சர்வைவர் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒவ்வொன்றுமே மிரட்டலாக இருக்கிறது. இதனை பார்க்கும் போதே ஜீ தமிழின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எப்போது ஒளிபரப்பப்படும் என்று ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர். இந்த சர்வைவர் நிகழ்ச்சியின் ஷூட்டிங் முழுக்க வெளிநாட்டில் நடக்கிறது. போட்டியாளர்களுடன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும் அந்த நாட்டிற்கு சென்றுவிடவேண்டும். வாரத்தின் இறுதி நாட்கள் என்றல்லாமல் ஷோவின் ஒவ்வொருநாளும் தோன்றுகிறார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தான் தொகுப்பாளர் வருவார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அப்படி எல்லாம் இல்லையாம்.

கரண்ட் கூட இல்லையாமே

கரண்ட் கூட இல்லையாமே

தான்சானியா பகுதியிலுள்ள ஜான்சிபார் தீவுகள் தான் சூட்டிங் ஸ்பாட்டாக செலக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவிலே மிக அமைதியான சுற்றுலாப் பிரதேசம் தான் அதுவாம். ஊரடங்கு காரணமாக சர்வதேச வான் போக்குவரத்தில் நிலவிவரும் பல சிக்கல்கள் தீர்ந்ததும் போட்டியாளர்கள் அங்கே செல்ல இருக்கிறார்கள். போட்டியாளர்கள் தங்கும் தீவில் மின்சாரம் இருக்காது, எனவே வெளிச்சத்திற்கு தீப்பந்தங்களை ஏற்றுக் கொள்வார்களாம். கரண்ட் இல்லை என்றால் ஒரு தனி தீவில் எப்படி அவர்களால் தாக்குப் பிடிக்கப் போகிறார்கள் என்று பலர் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக ஏதும் பிரச்சனை இருக்காதா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டால் திரில்லிங்கான ஒரு எஃபெக்ட் இருக்குமே என்று சஸ்பென்ஸ் கூட்டுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் டூல்ஸ் மாதிரியான எந்த ஒரு பொருளும் அந்த தீவுக்குள் அனுமதிக்கப்பட வில்லையாம். எனவே போட்டியாளர்கள் சேவிங் செய்யக்கூட அனுமதி இல்லை. அப்போ ஷோ முடிந்து வெளியே வரும்போது ஆண் கன்டஸ்டன்ட்கள் தாடியோடு தான் வருவார்களா? என்று சில ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ் கமெண்ட்களில் தெரிகிறது. அப்போ பெண் கன்டஸ்டன்ட் களின் நிலைமை என்னவாக இருக்கும் மேக்கப் எதுவும் இல்லாமல் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகாமல் இருந்தால் சரிதான் என்று சிலர் நெட்டிசன்கள் கலாய்க்கவும் தவறவில்லை.

கன்டஸ்டன்ட் லிஸ்ட் ரெடி ஆகியாச்சு

கன்டஸ்டன்ட் லிஸ்ட் ரெடி ஆகியாச்சு

சர்வதேச அளவில் பாப்புலரான சர்வைவர் நிகழ்ச்சி தற்போது முதன்முறையாக தமிழுக்கு வந்திருக்கிறது. இந்த சவாலான திரில்லிங் நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சியின் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார். மேலும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 12 பேரின் பெயர்களும் தற்போது கிடைத்திருக்கிறது. அதில் வனிதா விஜயகுமார், விஜயலட்சுமி, நந்தா, கோபிநாத் ரவி, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா, ஜான் விஜய், வித்யூலெகா, வீஜெ பார்வதி, ஷாலு ஷம்மு, அனிகா சுரேந்திரன், சஞ்சனா சிங் இவர்களுடைய பெயர்கள் தான் தற்போது அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதைப்பற்றி ஞாயிற்றுக்கிழமை முழுமையாக தெரிவிக்கப்படும் என்று தற்போதைய ப்ரோமோவில் வெளியிட்டிருக்கிறார்கள். இதை பார்த்ததும் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எப்படியோ சரிந்து போன ஜீ தமிழில் டிஆர்பி இனி எகிறி விடுமென்று ஜீ தமிழில் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+