தம்பி விரும்பின பொண்ணு.. வந்த இடத்தில் உல்டா.. அண்ணன் மீது பொண்ணுக்கு லவ்வு!
சென்னை: விஜய் டிவியில பாரதி கண்ணம்மான்னு ஒரு சீரியல். கண்ணம்மா அம்மா இல்லாத பொண்ணு, சித்தி கொடுமை. அஞ்சலி சித்தியோட செல்ல பொண்ணு. வீட்டுல வேலைக்காரி மாதிரிதான் கண்ணம்மா. அப்பா பேருக்கு மட்டும் வீட்டுல இருக்கார்.
அஞ்சலியை பொண்ணு பார்க்க பாரதியும் அவன் தம்பி அகிலனும் அம்மா அப்பாவோட வராங்க. இதுல ஒத்துமை என்னன்னா இங்க இவனோட தம்பிக்கு பொண்ணு பார்க்க போறாங்க. அங்க கண்ணாம்மாவோட தங்கச்சியை பொண்ணு பார்க்க வராங்க. ஆக மொத்தம் இங்க அண்ணனுக்கும், அங்க அக்காவுக்கும் கல்யாணம் ஆகலை.
குடும்பமா பொண்ணு பார்க்க போறாங்க, அஞ்சலி பாரதியை மாப்பிள்ளை என்று பார்க்க, மாப்பிள்ளை இவன்மான்னு சொல்லி அகிலனை காமிக்கிறாங்க. ஆனா, இவளுக்கு அண்ணன் பாரதியைத்தான் பிடிச்சு போகுது.

கண்ணம்மா
இப்போ பெண்கள் கருப்பா, சிவப்பா, மாநிறமான்றது பிரச்சனையே இல்லைன்ற அளவுக்கு நம்ம மக்கள் கிட்ட தெளிவு இருக்குன்னுதானே சொல்லணும். இருந்தாலும் சில சீரியல்களில் கருப்பு நிறத்தை ஹைலைட்டாக்கி காண்பிப்பாங்க. இதிலும் சித்தி கண்ணம்மா கருப்புண்ணும், தன் பொண்ணுக்கு நல்ல பெரிய இடத்து சம்பந்தம் வந்துருச்சுன்னும் குதூகலிக்கறாங்க.

பாரதி-கண்ணம்மா
அகிலனுக்கு பொண்ணு பார்க்க வரத்துக்கு முன்பே கோயிலில் கண்ணம்மாவின் நல்ல குணத்தையும், அஞ்சலியின் கெட்ட குணத்தையும் பார்த்து கருப்பு கண்ணம்மாவை பிடித்துப் போகிறது பாரதிக்கு.நெஞ்சில் நிழலோவியமாய் பதிய வைக்கிறான்.

எனக்கு வேணும்
கல்யாண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, அஞ்சலிக்கு பாரதியை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசை வருது. இதுக்கு ஒரு ஐடியா சொல்லுங்கடின்னு தோழிகளிடம் கேட்கறா அஞ்சலி. அவங்க வீட்டுல எப்படிடீ ஒத்துக்குவாங்க.. பேசாம அகிலனையே கல்யாணம் பண்ணிக்கோன்னு தோழிகள் சொல்றாங்க.

தம்பிகூட
அண்ணனை நினைச்சுகிட்டு ஒரே வீட்டுல தம்பி கூட எப்படிடீ வாழ முடியும். அது முடியாது, நல்ல ஐடியாவா குடுங்கன்னு சொல்றா அஞ்சலி. நேர பாரதிகிட்ட போய் சொல்லிடு, நான் உங்களைத்தான் விரும்பறேன்னு தோழிகள் ஐடியா கொடுக்க, பாரதிக்கு போன் செய்துட்டு, அவன் மருத்துவமனைக்கு போறா அஞ்சலி.

அவனைப் பார்க்கவா
தம்பி லவ்வர் நம்மகிட்ட என்னத்த பேசப்போறா, சர்பிரைஸா தம்பியையே வரவழைச்சுருவோம்னு, அகிலனை உட்கார வச்சுட்டு, போயிடறான். அஞ்சலி வருகிறாள். பாரதி என்று நினைச்சு அகிலனிடம் பேச ஆரம்பிக்கிறாள்.

லவ் ஃபீலிங்
அது.. வந்து... உங்ககிட்ட நான் ஒரு விஷயம் பேசணும்.. பேசலாமான்னு கேட்கறா அஞ்சலி. முக்கியமான விஷயம்னா பேசலாமேன்னு சொல்றான் பாரதியாக நடிக்கும் அகிலன். எனக்கு இப்போதான் லவ்னா என்னன்னு தெரியுது. அந்த ஃபீலிங் வருது... அதான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கலாம்னு...

நேரமாகி வரக்கூடாது..
இவள் சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் கதவைத் திறந்துகொண்டு பாரதி வருகிறான். அஞ்சலி அதிர்ந்துவிட, இவன், என்னண்ணே.. கொஞ்சம் நேரம் கழிச்சு வரக்கூடாதா, இப்போதான் இவங்களுக்கு லவ் ஃபீலிங் வர ஆரம்பிச்சுதுன்னு சொன்னாங்க.. அதுக்குள்ளே நீ வந்துட்டன்னு சொல்றான் அகிலன். அஞ்சலி கிளம்பி விடுகிறாள்.

கருப்பு பிடிக்காதாம்
அகிலனின் அம்மாவுக்கு கருப்பு பிடிக்காதாம். இதில் ஏதோ சிதம்பர ரகசியத்தை வச்சு கதையை கொண்டு போறாங்க.தன மகன் ஆசைப்பட்ட பொண்ணு சிவப்பா இருக்கான்னு அஞ்சலி ஏழையாக இருந்தாலும் கல்யாணத்துக்கு ஒத்துக்கறாங்க அகிலனின் அம்மா. அதுக்காக அவங்க ஒரு வீட்டையே அஞ்சலிக்கு பரிசா கொடுக்கறாங்க. இதுக்கு நடுவுல தான் பெத்த பொண்ணுக்கு பிறந்த மகள் கருப்புன்னு அகிலனின் அம்மாவுக்கு பேத்தியை புடிக்காதாம்.

பாரதி-கண்ணம்மா
இப்போதான் அகிலனின் அக்கா, தன அம்மாவிடம் கேட்கறாங்க. ஏன்மா பாரதிக்கு பொண்ணு பார்க்காம, அகிலனுக்கு பார்த்தேன்னு. அவன் மனசுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு அமையலேன்னுதான் அகிலனுக்கு பார்த்துட்டேன். பொண்ணு எவ்ளோ அழகு தெரியுமான்னு சொல்றாங்க

பாரதிக்கு கருப்பா
ஏம்மா, என் பொண்ணு கருப்புண்ணே இன்னும் அவளை கிட்டத்துல சேர்க்க மாட்டேங்கறே.. ஒரு வேலை பாரதிக்கு கருப்பு பொண்ணா புடிச்சிருக்குன்னு சொன்னா என்ன செய்வேம்மான்னு கேட்டாளே ஒரு கேள்வி..தாய் பற்களை கடிக்கிறாள்...
ஆக மொத்தம் இங்கயும் கருப்பு நிற விளையாட்டு தொடங்கிருச்சு... விமோசனம் எப்போ?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications