கணீர் குரல் மறைந்தது.. 6 மாதமாக புற்று நோயுடன் போராடிய செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய சௌந்தர்யா அமுதமொழி இன்று காலமானார்.

மரணம் யாருக்கு எப்படி வருகிறது என்று யாராலும் கணிக்க முடியாத மாயையாகவே இருந்து வருகிறது. அந்த மாதிரிதான் சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் செய்தி சேனலில் கம்பீரமான தமிழ் உச்சரிப்போடு செய்தி வாசித்து வந்த சௌந்தர்யா அமுதமொழி இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காலமாகி இருக்கிறார்.

Television serial news

கடந்த ஆறு மாத காலமாக ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்யாவிற்கு அவரது சிகிச்சைக்காக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்ட நிலையில் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சார்பில் 5. 51 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

Television serial news

ஆனாலும் நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்த சௌந்தர்யா இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். தன்னுடைய தெளிவான உச்சரிப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றால் தனித்துவம் பெற்றிருந்த சௌந்தர்யாவின் மறைவு அவருடைய ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+