செய்தி வாசிக்கும் போது என்னை பாதித்த சம்பவம்.. தீயில் கருகிய குழந்தைகள்! ஸ்ரீவித்யா சங்கர் எமோஷனல்
சென்னை: நடிகையாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருக்கும் ஸ்ரீ வித்யா சங்கர் தான் செய்தி வாசிக்கும் போது மறக்க முடியாத அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
பல நாடுகளிலும் சின்ன சின்ன ஊர்களிலும் நடக்கும் விஷயங்கள் செய்தி சேனல்களின் வழியாகத்தான் எல்லோருக்கும் தெரியவரும். அந்த செய்தி சேனல்களில் செய்திகள் வாசிக்கும் போது என்னதான் தனக்குள் இருக்கும் கவலைகளையும் சந்தோஷங்களையும் வெளியே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒரே விதமான ரியாக்சனோடுதான் வாசிக்க வேண்டும்.

அதில் சின்ன பிழை செய்தால் கூட அதைப் பார்க்கும், கேட்கும் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும். அதனாலேயே செய்தி வாசிக்கும்போது அவர்களுக்குள் எந்த சிந்தனைகளும் கலக்கங்களும் ஏற்படாமல் தான் செய்தி வாசிப்பாளர்கள் வாசிக்கிறார்கள். ஆனால் சில செய்திகள் படிக்கும் போது அவர்களையும் மீறி அவர்களுக்குள் ஒருவித அழுத்தம் சோகம் வருகிறது என்று செய்தி வாசிப்பாளர் ஸ்ரீவித்யா சங்கர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
ஸ்ரீவித்யா சங்கர் கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அதோடு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் பல சீரியல்களிலும் வில்லியாகவும், பாசிட்டிவ் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனதை பாதித்த விஷயம் என்றால் அது கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்து என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

மகன்களுக்காக பொறுமையாக இருக்கிறேன்! பாடகியுடன் தொடர்பா? வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி
அந்த விபத்து பற்றி நான் வாசித்தது தான் என்னால் மறக்கவே முடியாது. செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது அந்த செய்தி மற்றும் அந்த குழந்தைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது என்னை அறியாமல் எனக்குள் கண்ணீர் மல்கி விட்டது.
அந்த வீடியோக்களில் குழந்தைகள் நெருப்பில் எரிந்து கரிக்கட்டையாக இருந்ததை பார்த்து அழுதுவிட்டேன். எமோஷனல் முகத்தில் காட்டக்கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு நான் பேசினேன். ஆனால் அதைப் பேசி முடித்ததும் எனக்கு ரொம்ப நேரம் எதுவும் பேச முடியாமல் இருந்தது. அதுபோல நீ செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது நமக்கு பிடித்த தலைவர்கள், உறவினர்கள் யாராவது பற்றி செய்திகளில் படிக்கும் போது அதுவும் நமக்கு ஒரு தயக்கத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.

அதையெல்லாம் தாண்டி தான் நாம் செய்திகளை மக்களுக்கு புரிகிற மாதிரி படிக்கனும். இப்போது இருக்கிற அட்வான்ஸ் எல்லாம் அப்போது கிடையாது. அதனால் நாம் எந்த இடத்திலும் தவறு செய்யாமல் செய்தியை சரியாக வாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் ஸ்ரீவித்யா சங்கர் பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications