மகன்களுக்காக பொறுமையாக இருக்கிறேன்! பாடகியுடன் தொடர்பா? வெளிப்படையாக பேசிய ஜெயம் ரவி
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் ஒரு பாடகியோடு தொடர்பு என்று சில வதந்திகள் பரவி வந்த நிலையில் அதை மறுத்து இருக்கிறார். அதோடு தான் விவாகரத்து செய்ய போவது தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு தெரியாது என்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
சில தினங்களாகவே நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஜெயம் ரவி தான் தன்னுடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதற்கு அவருடைய மனைவி ஆர்த்தி ஜெயம் ரவி எடுத்த முடிவு அவருடைய தனிப்பட்ட முடிவு எனக்கு அவர் விவாகரத்து செய்ய போவதே தெரியாது. அவர் என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. நான் என்னுடைய கணவரோடு பேச வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். ஆனால் அதற்கான சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்று ஆர்த்தி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸ்க்கும் பழக்கம் இருப்பதாலேயே ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரிய முடிவெடுத்தார் என்ற வதந்திகள் பரவியது. இந்த நிலையில் ஜெயம் ரவி இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அது பற்றி அவர் கூறுகையில், நான் எடுத்த விவாகரத்து முடிவு ஆர்த்திக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை.

ஏற்கனவே அவருக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. மகன்களுக்காகத் தான் நான் அமைதியாக இருக்கிறேன். சட்ட ரீதியாக செல்கிறேன். பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுவது பேசியவர்களுக்கு தான் அசிங்கம்.
அந்தப் பாடகி ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்து எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரோடு ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை தவிர்ப்பதற்காக இப்படி பேசுகின்றனரா? என்று தெரியவில்லை. அப்படி பேசுவது மிகவும் தவறு நான் சட்டத்தை நம்புகிறேன்.. என்று ஜெயம் ரவி கூறி இருக்கிறார்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications