Nila serial: கணவன் மனைவி பார்த்துக்க முடியாம கண்ணாமூச்சு ஆட்டமா இருக்கே!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் ஒவ்வொரு மர்மத்தையா விடுவித்து கடைசியில் புருஷன் பொண்டாட்டியை சேர்த்து வைக்கும் விஷயத்தில் மட்டும் ரெண்டு பேரையும் சேர்ந்து பார்த்துக்க விடாமல் இன்னும் கண்ணாமூச்சு ஆட்டம் காட்டிகிட்டு இருக்காங்க.
நிலா தன் அப்பா அம்மாவை தேடி கண்டு பிடிக்க காதலன் கார்த்திக்குடன் போனவள், கணவன் அசோக்குடன் வருகிறாள். திடீரென்று அசோக்கை கல்யாணம் செய்து கொண்டதன் நோக்கம் என்னன்னு தெரிவதற்குள், நிலாதான் வாரிசுன்னு நீலாம்பரி அத்தனை உண்மையையும் சொல்லிடறாங்க.
நிலாவின் அப்பா ஸ்ரீதர் இறந்துட்டார்னு உறுதியா இருக்கும் நீலாம்பரி ,நிலாவின் அம்மாவை கண்டு பிடிச்சே தீரணும் என்பதில் தீவிரமாக இருப்பது எதற்கு என்று தெரியவில்லை.

ஸ்ரீதர் அன்வர்
ஹைதராபாத்தில் இருந்து சென்னை ஆஸ்ரமத்துக்கு வந்து இருக்கும் அன்வர் ஸ்ரீதர் மாதிரி இருந்தாலும், அவருக்கு நீலாம்பரியை பார்த்து எந்தவித ஆச்சரியமும் இல்லை. கேட்டால், ஸ்ரீதருக்கு 20 வருட காலத்துக்கு முன்னான எந்த நினைவும் இல்லையென்று ஆஸ்ரமத்தில் இருப்பவர் சொல்ல, இவர் ஸ்ரீதரா இல்லை அன்வரா என்பதில் நீலாம்பரி ஏன் கவனம் செலுத்தவில்லை என்றும் தெரியவில்லை.

ரேவதி அன்வர்
அன்வராக ஆஸ்ரமத்தில் இருப்பவர் கணவர் ஸ்ரீதர் மாதிரி இருக்கிறாரே என்று யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இன்னும் அவரை சந்திக்கவில்லை ரேவதி. அஞ்சலிக்கு வைத்தியம் பார்க்கும் அவரை இன்னும் சந்தித்து பேசாமல் அந்த ஆஸ்ரமத்தில் மாச கணக்கா வைத்தியம் பார்த்துக்கறாங்க என்றால் நம்ப முடியவில்லை., இதில் மட்டும் ட்விஸ்ட் வச்சு கதை இதுவரை பயணிச்சுக்கிட்டு இருக்குது.

சந்தேகம் நீலாம்பரிக்கு
நீலாம்பரிக்கு ரேவதிதான் சுஜாதா அதாவது ஸ்ரீதரின் மனைவி நிலாவின் அம்மாவாக இருக்கக் கூடும் என்கிற சந்தேகம் வலுத்து அதை கண்டு பிடிக்க சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யறாங்க. பூஜைக்கு ஆஸ்ரமத்தில் வைத்தியம் செய்து கொள்ளும் அஞ்சலியை அழைச்சுக்கிட்டு வா ரேவதின்னு சொல்லிட, ரேவதியம் அஞ்சலியை அழைச்சுக்கிட்டு கிளம்பறாங்க.

காத்திருக்கும் அன்வர்
ரேவதி வரட்டும், அவங்களை பார்த்துட்டு,அஞ்சலி வைத்தியம் பத்தி பேசிட்டு அவங்களை அனுப்பி வைக்கலாம் என்று இங்கு அவர் காத்திருக்கார். புருஷன் எங்கே இருக்கார், எப்படி இருக்கார்னு தெரியாமல் தவிச்சுக்கிட்டு இருக்கும் ரேவதிக்கு இன்னும் அன்வரை சந்திக்கும் நேரம் வரவில்லை. ஒரே இடத்தில் இருந்தும் இதுவரை கணவரை கண்ணில் காட்டாமல் கண்ணாமூச்சு ஆட்டம் காண்பிக்குது இந்த நிலா சீரியல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications