செய்தி வாசிக்கும்போது வந்த மரண செய்தி! தலையில் வச்ச பூவை எடுத்துட்டு.. நிர்மலா பெரியசாமி எமோஷனல்
சென்னை: செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி பல வருடங்களுக்குப் பிறகு தான் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது தனக்கு வந்த நெருக்கடிகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் ஒரு முறை நான் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது வந்த மரண செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து கண்கலங்கி என் தலையில் வைத்திருந்த பூவை எடுத்து விட்டு வருத்தத்தோடு அந்த செய்தியை படித்து முடித்தேன் என்று பேசி இருக்கிறார்.
அதிலும் செய்தி படிக்கும் போது சிரித்த முகமாக செய்தி படிக்கும் நிர்மலா பெரியசாமி படித்து முடித்ததும் கடைசியில் சொல்லும் வணக்க்கம் என்ற வார்த்தை பலருடைய மனதை கவர்ந்தது. அதுவே அவருடைய அடையாளமாகவும் மாறி இருந்தது. இந்த நிலையில் நிர்மலா பெரியசாமி அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர்களுக்கும், தொகுப்பாளர்களுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். அதிலும் குறிப்பிட்ட ஒரு சில பிரபலங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தனர். அதில் ஒருவர் தான் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி. இவர் டிவியில் செய்தி வாசித்து முடித்ததும் கடைசியில் வணக்க்கம் என்று சொல்லி பலருடைய மனதைக் கவர்ந்திருந்தார்.
செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி அதற்குப் பிறகு ஜீ தமிழில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதற்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் அதிகமாக தலை காட்டாமல் இருந்த இவர் பல வருடங்கள் கழித்து இப்போது பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது நான் சில நேரங்களில் மனநெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறேன்.
ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளர் வேலையை நான் ரொம்பவே நேசித்து ஆசைப்பட்டு தான் சேர்ந்தேன். ஆனால் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது சில சோகமான செய்திகள் நம்முடைய மனதை சுக்கு நூறாக உடைத்து விடும் அந்த மாதிரி பலமுறை நடந்திருக்கிறது. அதிலும் நடிகர் சிவாஜி கணேசன் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். ஆனால் அவர் இறந்த செய்தியை நான் படிக்க வேண்டிய நிலைமை வந்தது. அப்போது நடந்தது எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

அன்று நான் வழக்கம்போல புது புடவை பூ போட்டு எல்லாம் போயிட்டு அலங்காரம் செய்துவிட்டு செய்தி வாசிக்க போயிருந்தேன். ஆரம்பத்தில் நன்றாக தான் செய்திகள் போய்க்கொண்டிருந்தது. இப்போது இருக்கிற மாதிரி அப்போது லைவ் ரெக்கார்டு கிடையாது. கட் என்று சொல்லி தான் ஒவ்வொரு செய்திகளை படிக்க வேண்டும். அப்படி நான் ஒவ்வொரு செய்திகளாக படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சிவாஜி கணேசன் இறந்துவிட்டார் என்று செய்தியும் வந்தது.
எனக்கு எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. ஏற்கனவே ரெண்டு மூணு செய்தி படித்து விட்டேன் ஈப்போது எனக்கு பிடித்த சிவாஜி கணேசன் சாரின் மரண செய்தியை படிக்கணும் ஆனால் நான் விதவிதமான அலங்காரத்தோடு இருக்கிறேன் அது எனக்கே ஒரு குற்ற உணர்ச்சியாக இருந்தது. இப்போது எதுவும் செய்ய முடியாது ஆனாலும் மனதை கல்லாக்கி கொண்டு அந்த நேரத்தில் என்னுடைய தலையில் இருந்த பூவை மட்டும் எடுத்து வைத்துவிட்டு நான் செய்தியை படித்து முடித்தேன்.
இந்த மாதிரி சில விபத்து செய்திகள் படிக்கும் போது மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கும். அதுபோல சில சந்தோஷமான செய்திகளையும் நான் படித்திருக்கிறேன். அது குறித்து பல வருடங்கள் கழித்து நான் பாராட்டு வாங்கி இருக்கிறேன். அதாவது சிலர் என்னை பார்க்கும் போது நான் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதை நீங்கள் தான் செய்தியில் சொன்னீர்கள் என்று சொல்லுவார்கள்.

சிலர் நான் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றேன் அதை நீங்கள் படித்தீர்கள் என்று சொல்வார்கள். அதிலும் ஒருவர் நான் நீதிபதி ஆனதை நீங்கள் தான் செய்தியில் சொன்னீர்கள் என்ற செய்தியை என்னிடம் சொல்லி ஒரு நீதிபதி என்னை பாராட்டிய போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாகவும் இருந்தது என்று எமோஷனலாக அந்த பேட்டியில் நிர்மலா பெரியசாமி பேசியிருக்கிறார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications