சாந்தி பிரியாவின் கண் முன்னாடியே போன கணவரின் உயிர்.. நிஷாந்தியின் மோசமான நிலைமை.. பாவம் பானுப்பிரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பேட் கேர்ள். இப்படத்தை வர்ஷா பரத் இயக்கி உள்ளார். இதில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டீஜே அருணாச்சலம், ஷஷாங்க் போன்றோர் நடித்துள்ளனர்.. ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதில், கதாநாயகியின் அம்மாவாக, நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா நடித்துள்ளார்.. இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, பேட் கேர்ள் படத்தில் நடித்ததற்காக நிஷாந்தி என்கிற சாந்தி பிரியாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.. வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் தனுஷ் அம்மாவாக நடிப்பதற்காக 2 முக்கிய நடிகைகள் மறுத்துவிட்டார்கள்.. அதற்கு பிறகு பானுப்பிரியா அந்த கேரக்டரில் நடித்திருந்தார்..

Television Nishanthi shanti priya

ஓவர் ஆக்டிங் இல்லாமல், அதேசமயம், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த பானுப்பிரியாவை நடிக்க வைக்கலாம் என்று ஐடியா தந்ததே தனுஷ்தானாம்.. அப்போதுகூட பானுப்பிரியா அந்த கேரக்டரில் நடிக்க தயங்கியிருக்கிறார், பிறகு தனுஷே பானுப்பிரியாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அந்த படத்தில் தாய்-மகன் பாசஉறவே அற்புதமாக இருக்கும்.

அதுபோல வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கியிருக்கிற பேட் கேர்ள் படத்தில் பானுப்ரியா தங்கை நிஷாந்தியின் நடிப்பும் பேசப்பட்டு வருகிறது.

கிராமத்து டவுசர் நடிகர்

80'களில் கொடிகட்டி பறந்தவர் பானுப்பிரியா.. அந்த நேரத்தில், ஒரு கிராமத்து படத்தில் ஒருபுது நடிகரை, மாடு மேய்க்கும் கேரக்டரில் அறிமுகப்படுத்துகிறார்கள்.. படம் முழுக்க நடிகருக்கு டிரவுசர்தான்.. சட்டைகூட கிடையாது.. இவருடன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் இந்த நடிகரின் போட்டோவை காட்டினார்கள்.. ஆனால், யாருமே நடிக்க முன்வரவில்லை..

புதுமுகத்தை வைத்து நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தனர்.. அப்போதுதான் ஒரு கல்யாண ஆல்பத்தில் நிஷாந்தியை பார்த்தார்கள்.. அவர் யாரென்று விசாரித்தபோது, பானுப்பிரியாவின் தங்கை என்பது தெரியவந்தது. உடனே பானுப்பிரியா அம்மாவிடம் கங்கை அமரன், சங்கிலி முருகன் என எல்லாரும் சென்று கேட்டதற்கு, தன் மகளை நடிக்க வைக்கவே முடியாது என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

இந்த சினிமாவில் தன்னுடைய ஒரு மகள் போராடியதே போதும், இன்னொரு மகளை அனுப்ப கூடாது என்று முடிவெடுத்திருந்தார் பானுப்பிரியா அம்மா..

மேக்கப் இல்லாமல் போட்டோ டெஸ்ட்

அப்போது நிஷாந்தி பள்ளி முடித்து யூனிபார்முடன் வீட்டுக்குள் நுழைந்தார்.. போட்டோ டெஸ்ட் மட்டுமாவது எடுத்து பார்க்கிறோம் என்று பானுப்பிரியா அம்மாவிடம் சொல்லி, ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்றனர்.. மேக்கப் கூட இல்லாமல் வேறு ஒரு டிரஸ் தந்து கொசுவம் வைத்த சேலை, பெரிய பொட்டு வைத்து, போட்டோ எடுத்து பார்த்ததுமே, அனைவருக்குமே பிடித்துவிட்டது.

பிறகுதான், மீண்டும் பானுப்பிரியா அம்மாவிடம் பேசி சம்மதம் பெற்றனர்.. இறுதியில் நிஷாந்தி - ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் படம் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டானது.. அப்போதுதான் சாந்தி பிரியா என்ற ஒரிஜினல் பெயரை மாற்றி நிஷாந்தி என்று வைத்தனர்..

பள்ளி படித்த பெண், முதல் படம் போலவே தெரியலயே, பிரம்மாதமாக நடித்திருப்பதாக பாராட்டுக்கள் குவிந்தன.. பிரபு, விஜயகாந்த், போன்றோருடன் நடிக்க, நிஷாந்திக்கு வாய்ப்புகள் வந்தபடியே இருந்தன

அக்காவுக்கு முன்பு தங்கை திருமணம்

அந்தவகையில் மராத்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது.. அங்கே ஒரு நடிகரை மனதார காதலித்தார்.. இந்த காதலுக்கு இரு வீட்டிலுமே எதிர்ப்புகள் வலுத்தன.. பானுப்பிரியாவுக்கே இன்னும் திருமணமாகாதபோது, தங்கைக்கு எப்படி திருமணம் செய்வது? என்று பானுப்பிரியா அம்மா எதிர்த்தார்.. ஆனால், தனக்கு சினிமாவில் நடிக்கவே பிடிக்கவில்லை, ஆனாலும் பட வாய்ப்புகள் குவிந்தபடியே உள்ளது, இதிலிருந்து தப்பிக்க திருமணம் செய்து கொள்கிறேன் என்று குடும்பத்தாரை சமாதானம் செய்து, திருமணத்தை செய்து கொண்டார் நிஷாந்தி,.

அக்கா இருக்கும் தங்கைக்கு திருமணமா? என்று பத்திரிகைகளிலும் கிசுகிசுக்கள் வந்தன.. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல், மும்பையில் அன்பான கணவர், அழகான குழந்தையுடன் வாழ்க்கையை துவங்கினார் நிஷாந்தி.

இதன்பிறகு நிஷாந்தியின் ஒரு பேட்டி வெளியானது.. அதில், என்னுடைய ஒருநாள் கணவர் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்..நான் கிச்சனில் சமைத்து கொண்டிருந்தேன்.. அப்போது என் கணவருக்கு புரை ஏறிவிட்டது.. பிறகு விக்கலாக மாறியது.. என் மகன் உடனே அம்மா, அப்பா என்று கத்தினான்..

புரை ஏறிவிட்டது

உடனே நான் ஓடிவந்து தண்ணீர் தந்தேன்.. 2 மடக்கு குடித்ததுமே அப்படியே சுருண்டு கீழே விழுந்துவிட்டார்.. கையும், காலும் ஓடாமல் நான் கதறினேன்.. என் கதறலை கேட்டு, என் வீட்டுக்கு மாடியிலிருந்த டாக்டர் ஓடிவந்தார்..

என் கணவரின் நாடி பார்த்துவிட்டு, ரொம்ப சீரியஸாக இருக்கார், உடனே ஆஸ்பத்திரிக்கு எமர்ஜென்சிக்கு கொண்டு போக சொன்னார்.. ஆனால் பலனில்லை.. மாரடைப்பை என் கண் முன்னாடியே நான் பார்த்தேன்.. என் மகனும் பார்த்தான்.. அதிலிருந்து மீள எனக்கு பல காலமானது.. என் மகன்தான் எனக்கு பெரிய ஆறுதல். அப்போதிருந்தே நான் ஒதுங்கியே இருந்தேன்.

ரீ-யூனியனில்கூட அக்கா இல்லை

மற்றொருபக்கம் என் அக்காவுக்கு ஏகப்பட்ட கொடுமைகள், அக்கிரமங்கள் நடந்தன.. 80களில் கொடிகட்டி பறந்தவர் என் அக்கா.. ஆனால் 80's ரீ-யூனியனில்கூட என் அக்கா இல்லை. என் அக்காவை இந்த சினிமா துறை ஒதுக்கிவிட்டது" என்று நொந்து போய் சொன்னார் நிஷாந்தி.

பானுப்பிரியாவின் கணவருக்கு ஒரு பூச்சி கடித்து, அதிலிருந்து மீள முடியாமல் போயிற்று.. சொந்த சகோதரர்களும் பானுப்பிரியாவுக்கு துரோகம் செய்துவிட்டனர். சொந்த வீடு இல்லை.. நடுத்தெருவுக்கும் வந்தாச்சு.. அப்போதுதான் ஏவிஎம்மில் நடிக்க பானுப்பிரியாவுக்கு அழைப்பு வந்தது.. வாரம் ஒருமுறைதான் சம்பளம்..

ஏவிஎம் ஓட்டல் ரூம்

வீடில்லாமல் இருந்த பானுப்பிரியாவை ஓட்டலில் தங்க வைக்க ஏவிஎம் முடிவு செய்தது. ஆனால், எத்தனை நாளைக்கு ஓட்டலுக்கு பில் தர முடியும்? பிறகுதான் ஏவிஎம்மிலேயே ஒரு ரூம் தந்து பானுப்பிரியாவை தங்க வைத்தனர்.

நிஷாந்தினியும் அப்படித்தான்.. அவர் ஒரு நடிகைதானே? ஆடி காரில் போறாங்க, 7 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடறாங்க என்றெல்லாம் சிலர் நினைத்து கொள்கிறார்கள்.. ஆனால், பல சோகங்களை மறைத்து கொண்டுதான் இதுபோன்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+