மாட்டு சாணம் இருந்த கையோடு தேசிய விருது வாங்கினேன்.. அப்போது நடந்தது ஆச்சரியம்! நெகிழ்ந்த நித்யா மேனன்
சென்னை: நடிகை நித்யா மேனன் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் தலைவன் தலைவி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது தான் தேசிய விருது வாங்கும் போது தன்னுடைய கையில் மாட்டுச்சாணம் இருந்தது என்று பேசி இருக்கிறார்.
நடிகை நித்யா மேனன் தமிழில் மட்டும் அல்லாமல் பலமொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தான் நடிக்கும் ஒரு சில திரைப்படங்களிலும் தன்னுடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ள வகையிலேயே கதை தேர்வு செய்து நடித்து வருகிறார். வருடத்திற்கு ஒரு திரைப்படம் வந்தாலும் அந்த படத்தில் என்னுடைய கேரக்டரின் தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்று குறைவான படங்கள் நடித்து வரும் நித்யா மேனன் தமிழில் ஓ காதல் கண்மணி, திருசிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துப் பெரிய அளவில் பாராட்டு வாங்கி இருந்தார்.

அதிலும் நடிகர் தனுஷுடன் திருசிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்தது பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. அந்த திரைப்படத்தில் தன்னுடைய காதலை தனுஷிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருப்பது, தனுஷ் தன் முன்பே மற்ற பெண்களிடம் பேசும்போது தனக்குள் இருக்கும் வலியை கூட சிரித்தபடியே வெளிக்காட்டுவது போன்று பல இடங்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மனதை கவர்ந்திருந்தார்.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் கொடுத்த வெற்றியின் காரணமாக தனுஷுடன் இப்போது இட்லி கடை திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல விஜய் சேதுபதி உடன் தலைவன் தலைவி திரைப்படத்துடன் நடைபெறுகிறது. இந்த திரைப்படம் ட்ரெய்லர் வெளியானது பலருடைய கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் சமீபத்தில் விகடன் சேனலில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து நித்யா மேனன் பேசி இருந்தார். அப்போது இட்லி கடை படத்தில் நடித்த போது தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி அவர் பேசும்போது, "இட்லி கடை படத்திற்காக மாட்டுச்சாணத்தை எப்படி அள்ளுவது என்று கற்றுக் கொண்டேன். நான் அதை செய்ய தயாராக இருக்கிறேனா? என்று பட குழுவினர் என்னிடம் கேட்டார்கள் அதற்கு நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.
வாழ்க்கையில் முதல் முறையாக வெறும் கைகளால் மாட்டுச் சாணத்தை எப்படி உருட்டுவது, எப்படி சுழற்றுவது என்று கற்றுக் கொண்டேன். தேசிய விருது வாங்க டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக நான் இட்லிக்கடை படத்தில் மாட்டு சாணம் அள்ளுவது தொடர்பான காட்சி ஒன்றில் தான் நடித்திருந்தேன். நான் தேசிய விருது வாங்க சென்றபோது என் விரல் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மாட்டுசாணம் இருந்த கையில் தேசிய விருது வாங்கியது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, அதுதாங்க வாழ்க்கை.

இட்லி கடை படத்தில் எனக்கு கிடைத்த பன்முக அனுபவம் மிகவும் பிடித்திருக்கிறது. அந்த படம் எனக்கு கிடைக்கவில்லை என்றால் எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று நித்யா மேனன் மகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார். இவர் மாட்டு சாணம் அள்ளியதை இவ்வளவு பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசியது இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications