எதிர்நீச்சல் குணசேகரன் குறித்து அதிகாரப்பூர்வமாக சேனல் வெளியிட்ட வீடியோ.. குவியும் கருத்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த மாரிமுத்து குறித்து சேனல் தரப்பில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறது.
இந்த ப்ரோமோ வெளியானதைத் தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அந்தப் பிரமோவில் கரிகலனை ரேணுகா வார்த்தைகளால் பாடாய்படுத்தி எடுத்து இருக்கிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்துவின் கனவு வீட்டை திறந்து வைக்கப் போவது இந்த மூன்று பிரபலங்கள் தானா? வெளியான ரகசியம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலுக்காக காலையில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனைக்கு சென்று பிறகு அங்கு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் அவர் நடித்த எபிசோடு இன்றோடு முடிவடைகிறது. அதே நேரத்தில் கடைசியாக மாரிமுத்து பேசிய டப்பிங் வீடியோவும் எபிசோடும் இதுதான் என்று சேனல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் இனி குணசேகரனாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் நிலையில் அந்தப் ப்ரோமோவில் மேலும் சில சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்று இருக்கிறது. அது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நேற்றைய எபிசோட்டில் நந்தினி புதிய பிசினஸ் ஆக சாப்பாடு செய்து கொண்டு கிளம்பிய நிலையில் விசாலாட்சி அவர்களோடு சேர்ந்து குணசேகரனிடம் பொய் சொல்லி சமாளித்தார் ஆனால் அதை குணசேகரன் நம்பாமல் எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இனி என்ன நடக்க போகிறது என்பது இன்று வெளியான ப்ரோமோவில் பார்க்கலாம்.
நந்தினி, ரேணுகா அறையில் இருக்கிறார். அப்போது கரிகாலன் மேலே மாடிக்கு வந்து அறையின் வாசலில் எட்டி பார்க்க அப்போது ரேணுகா கோபமாக என்ன வேவு பாக்க சொல்லி உன் மாமா அனுப்புனாங்களா? முகத்துல கண்ணு, காது, மூக்கு எதுவும் இருக்காது, ஓடிப் போயிடு என்று கரிகாலனை ஓட விடுகிறார்.

அடுத்ததாக குணசேகரன் கரிகாலன் கீழே வந்ததும் கரிகாலா எனக்கும் சந்தேகமா தான்டா இருக்கு என்று சொல்லிக்கொண்டு, அம்மாவிடம் இவங்க முன்னாடி எல்லாம் புள்ளையை விட்டுக் கொடுக்கிறது உனக்கு வேலையா போச்சு என்று புலம்புகிறார். இந்த நிலையில் இதுதான் குணசேகரன் நடித்த கடைசி காட்சிகள் என்பதை சேனல் தரப்பில் இருந்து சொன்னதை கேட்டதும் அதிகமான ரசிகர்கள் தாங்கள் மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications