ஓம் காளி ஜெய் காளி ரிவ்யூ: தசரா முத்தாரம்மன் அருள் கிடைத்ததா? இல்லையா? இந்த ட்விஸ்ட் சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் புகழ், குயின்சி, கஞ்சா கருப்பு, திவ்யா துரைசாமி, பாவனி ரெட்டி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டாரில் "ஓம் காளி ஜெய் காளி" வெப் சீரிஸ் வந்திருக்கிறது. இந்த சீரிஸில் ஐந்து எபிசோடு இருக்கிறது. இதன் கதை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஓம் காளி ஜெய் காளி வெப் சீரிஸில் ரசிகர்களுக்கு பரீட்சையமான பல நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள் என்று சொல்வதை விடவும் அவர்கள் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும் கதையின் நாயகனாக விமல் திருநெல்வேலி மாவட்டத்துக்காரராகவே மாறி இருக்கிறார்.

vimal Om Kaali Jai Kaali

முக்கிய நடிகர்கள்

அதுபோல பிக் பாஸ் குயின்சி இந்த வெப் சீரிஸின் முக்கிய கருவாக இருக்கிறார். அவரை சுற்றி தான் இந்த சீரியஸில் கதையே நகர்கிறது. அதுபோல சில எபிசோடுகள் வந்தாலும் பாவனி ரெட்டியின் நடிப்பும் கதாபாத்திரமும் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கிறது. அதுபோல புகழ், கஞ்சா கருப்பு, மகேஸ்வரி ஆகியோரும் அவர்களுடைய கேரக்டருக்கு சரியான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

வட்டார வழக்கு

எத்தனையோ திரைப்படங்களில் திருநெல்வேலி பேச்சு வழக்கு காட்டப்படும் ஆனால் அது இயல்பாக இருக்காது. ஆனால் இந்த வெப் சீரிஸில் திருநெல்வேலி பேச்சு வழக்கு அப்படியே காட்டப்படுகிறது. அதோடு நாகர்கோவிலில் வில்லன் குடும்பத்தினர் இருக்கிறார்கள் அங்கும் நாகர்கோவில் மக்களின் பாஷை கச்சிதமாக காட்டப்பட்டிருக்கிறது.

கதையின் கரு

திருநெல்வேலி மாவட்டத்தில் வனதேசம் என்ற ஊரில் இருக்கும் ஒரு தசரா குழு குலசேகரப்பட்டினத்தில் இருக்கும் காளிக்கு தசராவிற்கு வேடம் போடுகிறார்கள். அப்போது தசரா திருவிழா நேரத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது, அதனால் ஏற்படும் இழப்புகள் போன்றவை கதையில் காட்டப்பட்டிருக்கிறது.

முக்கிய பாயிண்ட்

குயின்ஸியும் அவருடைய கணவரும் குயின்சியின் அண்ணன்களிடமிருந்து தப்பி வருகிறார்கள். அதில் குயின்ஸியின் கணவர் கொல்லப்படுகிறார். பிறகு குயின்சி எப்படி வனதேசம் மக்களிடம் சிக்கினார்? அவர்கள் குயின்ஸிக்காக பல உயிர்களை எதற்காக தியாகம் செய்தார்கள் என்று தான் இந்த கதை சுற்றி வருகிறது.

மிரட்டும் தசரா குழு

நாயகன் விமலே காதலித்து வரும் கிராமத்து பெண்ணாக பாவனி ரொட்டி நடித்து இருக்கிறார். தன்னுடைய காதலனை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்று கையில் தாலியோடு சுற்றும் அவர் கதாநாயகனோடு சேர்ந்தாரா? இல்லையா? என்பது இந்த வெப்சீரிஸின் முக்கிய கதை. முதல் இரண்டு எபிசோடுகள் பார்ப்பவர்களை மிரள வைத்தது. அதிலும் தசரா குழுவினர்கள் எப்படி அவர்கள் விரதம் இருக்கிறார்கள், எப்படி பூஜைகள் செய்கிறார்கள் என்பது அழகாக காட்டப்பட்டிருக்கிறது.

படத்தின் நிறை

மூன்றாவது எபிசோட்க்கு பிறகு பழிவாங்கும் படலமாக கதை போகிறது. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா போன்ற காட்சிகள் வரும் போது நெல்லை மக்களின் இயல்பு வாழ்க்கையை அழகாக காட்டியிருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு பெரிய அளவில் வலு சேர்ப்பது படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங் வேலைகளும் தான். தசரா திருவிழா நடக்கும் காட்சிகளை அழகாக படமாக்கி இருக்கிறார்கள்.

இதுதான் குறை

அதே நேரத்தில் அதிகமான கொடூரமான ரத்த காட்சிகளும் வெட்டு குத்தும் இந்த வெப் சீரிஸில் அதிகமாக இருக்கிறது. "செத்த செத்து விளையாடலாம்" என்பதுபோல அடிக்கடி வெட்டுப்பட்டு ஹாஸ்பிடலுக்கு போவதும் பிறகு அங்கிருந்து தப்பி வந்து மீண்டும் வில்லன் குடும்பத்தை கதாநாயகன் குரூப்ஸ் தாக்குவதும் என்று கதை நகர்ந்து கொண்டிருந்தாலும் அப்போவெல்லாம் போலீஸ் எங்கப்பா போச்சு என்று லாஜிக்காக மனது கேள்வி கேட்கிறது.

திருநெல்வேலியின் அடையாளம்

ஆனாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மக்களுக்கு அவர்களுடைய பாஷை மற்றும் அவர்களின் ஊர் பெருமையை இந்த வெப் சீரிஸில் அதிகமான இடங்களில் கேட்கலாம். குறிப்பாக களக்காடு, ரோஸ்மியாபுரம், பணகுடி, தளவாய்புரம் போன்ற பெயர்கள் அதில் சொல்லப்படுகிறது. அது போல திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் எம்எல்ஏவாக இருக்கும் சபாநாயகர் அப்பாவு பற்றியும் அதில் ஒரு இடத்தில் கூறப்பட்டிருக்கிறது.

vimal Om Kaali Jai Kaali

ஊர் பெருமை

அப்பாவு எம்எல்ஏ தான் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி தண்ணீர் வருவதற்கு காரணம். அதனாலேயே அவர் தாமிரபரணி நாயகன் என்று அந்த ஊர் மக்களால் கூப்பிடப்படுகிறார். அதை இந்த வெப் சீரிஸிலும் சொல்லி இருக்கிறார்கள். உணர்வு ரீதியாக பலருடைய மனதை தொடும் இந்த வெப் சீரியஸில் ரத்த காட்சிகளை குறைத்து இருந்தால் இன்னும் மின்னி இருக்கும்.

உங்க கருத்து என்ன பாஸ்

ஆனால் தசரா காட்சிகளில் புகழ், விமல், தங்கதுரை போன்றோர் சாமி ஆடும் போது ஒருவித உணர்வு ஏற்படுகிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. நீங்க ஓம் காளி ஜெய் காளி வெப் சீரிஸ் பார்த்து விட்டீர்களா? அதில் தசரா காட்சிகளை பார்க்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது?. இந்த காட்சிகளில் நடிக்கும் போது அது வரைக்கும் இல்லாத உணர்வு ஒருவிதமான பரவசம் தனக்கு ஏற்பட்டதாக நடிகர் விமல் கூறி இருக்கிறார். இது பற்றி உங்க கருத்து என்ன பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+