Kalyana Veedu Serial: இவ்ளோ ரணகளத்திலும் கல்யாண வீடு குதூகலம்!
சென்னை: கோவிட் 19 தொற்றால் நாடெங்கும் லாக்டவுன் என்றாலும் சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் மட்டும் இன்னும் காட்சிகள் விறு விறுவென்றும், கலகலப்புடனும் சென்றுக்கொண்டு இருக்கிறது.
எவ்வளவு எபிசோட் ஷூட் செய்து ரிசர்வில் வைத்து இருந்தார்களோ.. முன் எச்சரிக்கை நடவடிக்கை என்பது போல இன்னும் காட்சிகள் இழுவை இல்லாமல், ஒரு ஃபிளாஷ்பேக் என்று இல்லாமல் எபிசோட் சுறுசுறுப்பாக நகர்கிறது.
கல்யாண வீடு சீரியலில் இந்த நேரத்திலும் அவுட்டோர் காட்சிகள் நிறைய என்று ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஒரு மாதமாகவே கல்யாண வீடு சீரியலில் அவுட்டோர் காட்சிகள் நிறைய இருக்கின்றன,

உடனடி தீர்வு
திருமுருகன் ஸ்பெஷல் என்று சீரியலில் இழுவை இருக்காது என்பதை சொல்லலாம். ஒரு முடிச்சு வைத்து உடனுக்குடன் அதற்கு தீர்வும் வைத்து, வேறு முடிச்சுடன் சீரியலை பயணிக்க வைப்பதில் திருமுருகன் ஒரு கைத்தேர்ந்த இயக்குநர். அதை அவர் இந்த சீரியலில் முழுவதுமாக கையாண்டு இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டிக்டாக் விபரீதம்
டிக்டாக் விபரீதம் என்று ஒரு நடுத்தர வயது பெண், ஒரு கல்லூரி மாணவி என்று இருவரையும் அதில் சிக்க வைத்து, நடுத்தர வயதுப் பெண்ணின் விபரீதத்துக்கு உடனடியாக தீர்வும் கண்டு இருக்கிறார். இந்த ஒரு விஷயத்தை முடிச்சாக வைத்தே பல எபிசோடுகளை இழுவையாக்கி விஷயத்தை கிடப்பில் போடும் சீரியல்களுக்கு மத்தியில் கல்யாண வீடு கொஞ்சம் பரபர சீரியல்தான்.

கூட்டு பாலியல் கொடுமை
கடந்த வருடம் கூட்டு பாலியல் வன்கொடுமை என்று ஒரு விஷயத்தை கையில் எடுத்து, அதற்கு தீர்வு சொல்கிறேன் என்று சிக்கலில் மாட்டிக்கொண்ட திருமுருகன், பல முறை வருத்தம் தெரிவித்தார். அதை மனதில் கொண்டு, கலா, சகுந்தலா சகோதரிகள் பேசும் வசனம்...கோபி அப்பாவின் இரண்டாவது மனைவியை பற்றி பேசும் வசனம் இதில் கவனம் செலுத்தி இருந்தால் சீரியல் இன்னும் தரமாக இருந்து இருக்கும்.

சின்ன பெண் மோகம்
ஒரு கல்லூரி பெண்ணின் டிக்டாக் மோகத்தை காண்பித்து இருக்கும் இயக்குநர் அதற்கான கதை நகர்வு கொஞ்சம் விபரீதமான பாணியில் பயணிப்பதாக காண்பித்து வருகிறார். முள்ளில் நடப்பது மாதிரியான இது போன்ற நிகழ்வுகள் காட்சிகளாக்கும்போது இம்மி பிசகினாலும் விமர்சனத்துக்கு உரியதாக மாறிவிடும். கவனம் தேவை...!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications