அட!நம்ம அஞ்சலி இவ்ளோ அழகாக சன் டிவியில்...!
சென்னை: நமக்கு பரிச்சயமான நம்மை மகிழ்வித்த சில நடிகைகளை தமிழ் சினிமாக்களில் ஏனோ பயன்படுத்திக்காமல் இருந்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் நடிகை அஞ்சலி.
கற்றது தமிழ் படம் வந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. பின்னர் அங்காடித் தெரு படத்தில் அனைவரையும் தனது நடிப்பால் ஈர்த்தவர். சுந்தர் சி படமான கலகலப்பு படத்தில் ரொம்ப அழகாக இருந்தார்.
கலகலப்பு படத்தில் காமெடியும் செய்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் தமிழ் படங்களில் இப்போது அதிகம் நடிக்காமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

கொண்டாட்டம் நாடோடிகள் 2
நாடோடிகள் 2 பட கொண்டாட்டம் விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவியில் நடைப்பெற்றது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக்கொண்டனர். நடிகைகள் அதுல்யா ரவி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அசத்தலாக அழகாக
அஞ்சலி முதல் படத்தில் பார்த்த சின்னப் பெண் போலவே அழகாக, அசத்தலாக இருக்கிறார்.சொந்த குரலில் அழகாக தமிழ் பேசும் நடிகையான அஞ்சலியை இவ்ளோ நாள் திரையுலகம் கண்டுக்காமல் விட்டது ஏனோ என்று எண்ணத் தோன்றுகின்றது. கலகலப்பு படத்தில் சந்தானம் சொல்லி இருப்பார். நாங்க பாதாம், முந்திரி, பிஸ்தான்னு குடுத்து தளதளன்னு வளர்த்து வச்சிருப்போம், வெறும் அயர்ன் பண்ணின சட்டையைப் போட்டுக்கிட்டு வந்து நீங்க கொத்திகிட்டு போய்டுவீங்களாடான்னு . அப்படித்தான் அஞ்சலி சும்மா கும்முன்னு இருந்த அஞ்சலி தெலுங்கு பக்கம் போனார். .

அஞ்சலி அதுல்யா
அஞ்சலி அதுல்யாவுக்குமான கோலம் போடும் போட்டியில் மிக ஆச்சரியம் இருவருமே அழகாக கோலம் போட்டு அசத்தினார்கள், அஞ்சலி புள்ளி வச்சு கோலம் போட்டார்.இப்போது நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட வீட்டில் வளரும் பெண்களுக்கே கோலம் போடுவது சுத்தமாக தெரியவில்லை. இவர்கள் இருவரும் ரொம்ப அசால்ட்டா வந்து கோலம் போட்டு கவுரவம் காத்தார்கள்.

பாடலில் அப்பா
நாடோடிகள் 2 படத்தில் வரும் அப்பா பாடலை பாடகர் வேல்முருகன் பாடினார்.அனைவர் கண்ணிலும் தண்ணீர் வந்ததோடு, நடிகை அதுல்யா விடாமல் அழுதுகொண்டே இருந்தார். பாடல் ,முடிந்து கேட்கையில், அப்பா நினைவு வந்துவிட்டது என்று கூறினார்.

நடத்தியவர் அப்பா
என்னை எல்லாமும் ஆக இருந்து வழி நடத்தியவர் அப்பா.வீட்டில் பாட்டி, தாத்தா எல்லாரும் ஹாஸ்டலுக்கு அனுப்பி படிக்க வைக்கணுமா என்றபோது, அவங்க பேச்சை மீறி படிக்க வச்சார்.சினிமாவில் நடிக்க வந்தபோதும் இப்படித்தான்.ஆனா, இப்போ அவருக்கு உடம்பு சரி இல்லாம இருக்கு. அதை கவனிச்சுக்க மாட்டேங்கறார். அது எனக்கு வருத்தமா இருக்கு. அப்பா என் கூட ரொம்ப வருஷம் இருந்து என் வளர்ச்சியைப் பார்க்கணும்னு நான் விரும்பறேன்னு மனக் குமுறலோடு பேசினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications