இப்படி செய்யக் கூடாது...பாக்கியலட்சுமி சீரியலுக்கு எதிராக போலீசில் புகார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலால் தற்போது விஜய் டிவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சீரியலில் கதைகளதற்கு எதிராக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் கருத்து
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலின் கதை பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் சீரியல் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியலை ஆரம்பத்திலிருந்தே கலாய்த்து வருகின்றனர். காரணம் இது பாக்கியா என்னும் ஒரு குடும்பத் தலைவி பற்றிய சீரியலாக இருந்தாலும் அவருடைய கணவனின் செயல்பாடு பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் குடும்பம் நடத்தி வருவது பலருக்கு தவறான முன்னுதாரணமாக இருந்துவிடும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல பெண்களின் நிலைமை இதுதான்
வீட்டில் இருக்கும் படிக்காத ஒரு குடும்பத்தலைவி தன்னுடைய குழந்தைகளையும் கணவனையும் மட்டுமே வாழ்க்கை என்று நம்பிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய சுய கவுரவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கும் அதிரடியான முடிவுகள் பற்றி தான் இந்த சீரியலில் இருந்து வருகிறது. பல பெண்கள் தற்போது சமுதாயத்தில் இப்படி தான் வாழ்ந்து வருகின்றனர். வீட்டு வேலை செய்வது குழந்தைகளை கவனிப்பதில் தனது கடமை முடிந்து விடுகிறது என்று வாழ்ந்து வருகிறார்கள் என்று இந்த கதை சொல்லாமல் சொல்லி வருகிறது. இந்த நிலையில் தற்போது கதையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

கதையில் திருப்புமுனை
தற்போது பாக்யாவின் மகள் இனியாவின் தோழி பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். அதை தைரியமாக கையாள்வதை விட்டு விட்டு இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தற்கொலை முயற்சி செய்வது போன்று கதை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல பிரச்சனைகள் இந்த மாதிரி நாளுக்கு நாள் வெடித்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு கதை தேவையா?? என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மாதிரி சூழ்நிலையில் பெண்பிள்ளைகள் தைரியமாக எப்படி நடக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு மாற்றாக அந்த கேரக்டர் தற்கொலை முயற்சி செய்வது போன்று இருப்பதால் இதற்கு பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரச்சனையில் பாக்கியலட்சுமி
தற்போதைய சூழ்நிலையில் சீரியலுக்கு ஒரு விறுவிறுப்பு கூட்டுவதற்காக இந்த மாதிரி ஒரு கதை தேவைப்படுகிறது என்று சமுதாயத்தைப் பற்றி அக்கறை இல்லாமல் இப்படி எடுத்து விட்டார்களா?? என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் முகம்மது கோஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதனால் இந்த சீரியலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கதை ஒளிபரப்பப்பட்டு விட்டதால் இங்கு கதையில் மாற்றம் ஏற்படுமா??என்று பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications