Pandavar Illam Serial: மல்லிகாவையே அவ இல்லைன்னு சொல்றானே கிறுக்குப் பய!
சென்னை: சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் பரம்பரை பாரம்பரியத்தை பின் பற்றி வாழும் குடும்பங்களின் கதை. பாண்டவர் இல்லம் முதலாவது பாரம்பரிய குடும்பம். ஜமீன் குடும்பம் ரெண்டாவது பாரம்பரிய குடும்பம்.
இதில் ஜமீன் குடும்பத்தின் வேதநாயகியை பாண்டவர் குடும்பத்தின் பெரிய சுந்தரத்துக்கு கல்யாணம் செய்து வைத்து ஏதோ விபரீதம் நடந்துவிட்டது. இதனால் வேதநாயகி வில்லியாக மாறி பாண்டவர் குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறாங்க.
பாண்டவர் குடும்பத்தில் வேதநாயகி வாழாமல் போனதில் இருந்து, அந்த குடும்பத்துக்கு பெண்களே வேண்டாம் என்று ஐந்து வளர்ந்த பேரப் பிள்ளைகளுடன் தாத்தா வாழ்ந்து வருகிறார்.

திட்டமிடும் வேதநாயகி
ஜாமீன் குடும்பத்தின் வேதநாயகி, பாண்டவர் குடும்பத்தில் ஒரு கல்யாணமும் நடக்க கூடாது என்று வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர். இதில் பாண்டவர் இல்லத்தின் நான்காவது பேரன் அழகு சுந்தரத்தை மல்லிகா என்கிற பெண் துரத்தி துரத்தி காதலிக்கறா. ஆனால், இவளுக்கு அழகு சுந்தரத்துடன் கல்யாணம் நடக்க கூடாது.. ஒரு லூசு பையனுடன்தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்று மல்லிகாவின் அக்கா புருஷன் மூலம் திட்டம் போடறாங்க வேதநாயகி.

லூசு புருஷன்
மல்லிகாவுக்கு லூசு புருஷனை பொண்ணு பார்க்க வரும்போது, அங்கே குட்டி சுந்தரத்தை காதலிச்ச கயல் அங்கு மல்லிகா வீட்டு அறையில் மாட்டிக்கறா. தனியா பேசணும்னு மல்லிகா மாப்பிள்ளையை கூப்பிட, மல்லிகா ஒரு ரூமில் போக, லூசு மாப்பிள்ளை இன்னொரு ரூமில் போயி, கயல்தான் பொண்ணுன்னு நினைச்சு அவ கூட செல்ஃபி எடுத்துக்கறான்.

கயல் போட்டோவை
தினம் தினம் கயல் போட்டோவை எடுத்து வச்சுக்கிட்டு எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம் என்று கேட்டுகிட்டு இருக்கான் அந்த லூசு மாப்பிள்ளை.கல்யாண நாளும் வந்தாச்சு. மல்லிகா லூசு மாப்பிள்ளையின் அருகிலும் வந்து உட்கார்ந்தாச்சு. அதற்குள் கல்யாணத்தை நிறுத்த பாண்டவர்களும், கல்யாணத்தை நடத்த ஜாமீன் குடும்பமும் வந்துடறாங்க.

காதலன் கயல்
பாண்டவர் இல்லத்தின் கடைசி பையன் குட்டி சுந்தரத்தை காதலிக்கிறாள் கயல், கோயிலில் எப்படியாவது குட்டி சுந்தரத்தை கல்யாணம் செய்துக்கணும் என்று அவளும் அலங்காரத்துடன் வந்திருக்கா. அந்த நேரத்தில்தான் என்னை பாருடா.. என்னை பார்த்துட்டா நீ பார்த்த பொண்ணு நான் இல்லைன்னு தெரிஞ்சுடும்னு மல்லிகா போராடறா.

பொண்ணு இவ இல்லை
கடைசி நேரத்தில் தாலி கட்டுடா என்று வேதநாயகி மிரட்ட, தாலி கட்ட போன லூசு மாப்பிள்ளை போட்டோவில் நாம் செல்ஃபி எடுத்த பொண்ணு இவ இல்லைன்னு அதிர்ச்சியாகி, இவ என் மல்லிகா இல்லேன்னு மல்லிகாகிட்டேயே சொல்லிட்டு, இவளை நான் கட்டிக்கமாட்டேன்னு ஓடிப்போகிறான்.
அப்புறம் என்ன, பாண்டவர் இல்லத்தில் ஒரு கல்யாணம் நடந்தே தீரும்னு சவால் விட்ட கயல், கடைசி பையனான குட்டி சுந்தரத்தை கல்யாணம் செய்துக்கறா. ஆனால், பாவம் தாத்தான் ரெண்டு பேரையும் இன்னும் ஏத்துக்கலை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications