நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அண்ணன் தம்பி..மூர்த்திக்கு அதிர்ச்சி கொடுத்த ஜீவா..பரபரப்பான திருப்பம்
சென்னை: மூர்த்தியும், கதிரும் குடும்பத்தோடு அம்மாவின் பிறந்தநாளுக்கு கோயிலுக்கு வருகின்றனர்.
ஜீவாவும் கோவிலுக்கு மீனாவோடு வந்திருக்கிறார்.
கோவிலில் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்த நிலையில் தனத்திற்கு மீனா அதிர்ச்சி கொடுக்கிறார்.

அம்மாவின் பிறந்தநாள்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 10ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில்,
மூர்த்தி மற்றும் கதிர் குடும்பத்தோடு கோவிலுக்கு வருகின்றனர். கோவிலுக்கு வந்த மூர்த்தி அம்மா இறந்த பிறகு இது இரண்டாவது பிறந்தநாள் வருகிறது. அதற்குள் இரண்டு பேரு குடும்பத்தை விட்டு பிரிந்து போய்விட்டார்கள். இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ! எல்லாரும் அம்மாவின் பிறந்தநாள மறந்துட்டாங்க என்று புலம்பியபடி இருக்கிறார்.
ஜீவாவின் பதிலடி:அதற்கு தனம் அப்படி யாரும் மறந்திருக்க மாட்டாங்க. நீங்க பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறிக்கொண்டு கோவிலுக்கு வருகின்றனர். கோவிலுக்கு வந்து மூர்த்தியின் அம்மாவின் பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு திரும்புகின்றனர். ஜீவாவும் மீனாவும் அதே கோவிலுக்கு வருகின்றனர். அவர்கள் காரை விட்டு இறங்கும் போது பக்கத்தில் இருந்த காரை பார்த்து இது நம்ம காரர்தானே என்று மீனா கேட்க? இது நம்ம கார் இல்லை கதிர் கார் என்று ஜீவா சொல்கிறார்.
முட்டிக்கொண்ட அண்ணன் தம்பி: இந்த கோவிலுக்கு தான் அவங்களும் வந்துருக்காங்க என்று மீனா சொல்ல, ஜீவா நான் கோவிலுக்குள் வரவில்லை நீ மட்டும் போயிட்டு வரியா என்று கேட்க, கோவிலுக்கு தானே வந்தோம். இத்தனை நாளும் ஒரே வீட்டில் தானே இருந்தோம். இப்ப ஏன் அவங்க முகத்தை பார்க்கறதுக்கு நீ இப்படி பண்ணுற? என்று திட்டி கோவிலுக்கு கூட்டிக் கொண்டு வருகிறார். உள்ளே வரும்போது சரியாக மூர்த்தி மீது ஜீவா மோதி விடுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பிறகு விலகி செல்கின்றனர்.

மீனாவின் கலாய்ப்பு:அடுத்ததாக மீனா அனைவரிடமும் கோயிலுக்கு தான் வந்தீங்களா? என்று கேட்க, அதற்கு கதிர் நக்கலாக இல்ல வாக்கிங் வந்தோம் என்று சொல்ல, என்ன கிண்டலா? என்று மீனா கேட்க, நீங்க என்னக்கா இப்படி கேக்குறீங்க? என்று முல்லை சொல்ல, உங்க வீட்டுக்காரரை விட்டுக் கொடுக்க மாட்டேங்குற, என்று மீனா கிண்டல் செய்துவிட்டு பிறகு கயல் பாப்பாவை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்த பாண்டியனை வாங்கிக்கொண்டு மீனாவும் ஜீவாவும் சாமி கும்பிட செல்கின்றனர்.
கெத்து காட்டும் ஜீவா: குழந்தைகளிடம் மாறி மாறி குடும்பத்தினர் கொஞ்சி கொண்டு இருக்க, பிறகு வீட்டிற்கு கிளம்பலாம் என்று சொல்லி மீனா பாண்டியனை தனத்திடம் ஒப்படைத்து விட்டு கயிலை வாங்கிக் கொள்கிறார். அப்போது அங்கு இருக்கும் மூர்த்தியை பார்த்ததும் ஜீவா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, பிறகு மூர்த்தி குடும்பத்தினர் வெளியே வந்து காரை எடுக்க முயற்சி செய்ய, அங்கே ஜீவாவின் கார் நிற்பதை பார்த்து இது யாருடைய காருன்னு தெரியலையே! எப்படி நாம எடுக்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு கெத்தாக ஜீவா நடந்து வந்து கார் சாவியில் அன்லாக் செய்து காரை எடுக்கிறார்.

இதுதான் ஈகோ:ஜீவா காரில் செல்வதை பார்த்து மூர்த்தி குடும்பத்தோடு அதிர்ச்சியில் நிற்கின்றனர். பிறகு காரில் சென்று கொண்டிருக்கும்போது மூர்த்தியிடம் தனம், ஜீவா உங்கள் தம்பி தானே எப்படி இருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டா என்ன? என்று கேட்க அவன் என் தம்பி தானே? அவன் ஒரு வார்த்தை என்கிட்ட பேச மாட்டானாமா? என்று கோபத்தோடு திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications