மீண்டும் ஜீவாவிடம் வந்து கெஞ்சும் கதிர்.. ஐஸ்வர்யா செய்த பிரச்சனையால் பறிபோகும் வேலை
சென்னை: முல்லையின் வளைகாப்புக்கு கட்டாயம் போக வேண்டும் என்று மீனா ஜீவாவிடம் அடம் பிடிக்க அதற்கு மீனாவின் அம்மா அப்பா திட்டுகின்றனர்.
ஐஸ்வர்யா துணி கடையில் இஎம்ஐ யில் பொருள்களை வாங்கி குவித்து இருக்கிறார். அதனால் கண்ணன் அதிர்ச்சி ஆகிறார்.
ஜீவா எப்படியும் வர வேண்டும் என்று மீண்டும் கதிர் ஜீவாவிடம் கெஞ்சுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏப்ரல் 17ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் ஜீவா, மீனாவிடம் முல்லை வளைகாப்புக்கு போக வேண்டாம் என்று சொல்ல, மீனா தனக்கு ஆரம்பத்தில் குடும்பத்தினர் அனைவரும் செய்த உதவியை கூறி அப்போ வேலை செய்யாமல் வைத்து பார்த்தனர். ஆனால் இப்போ அவங்க சந்தோஷத்துல நாமளும் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.
மீனா எவ்வளவு எடுத்துக் கூறியும் ஜீவா அங்க எல்லாம் போக முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு மீனாவின் அப்பாவும் அம்மாவும் மீனாவை திட்டுகின்றனர். அவர்களிடமும் மீனா தனக்கு அந்த வீட்டில் எப்படி பாசம் கிடைத்தது என்றும், மரியாதை கிடைத்தது என்றும் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு கோபத்தில் மீனா கிளம்பி போய் விடுகிறார் ஜனார்த்தனன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்
அடுத்ததாக ஐஸ்வர்யாவும் கண்ணனும் ஷாப்பிங் செய்தது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது ஐஸ்வர்யா கண்ணனை சமாளிக்கிறார். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா தானே கட்டப் போறோம் உன்னை உங்க வீட்டில் மிடில் கிளாஸ் பையனாவே வளத்துட்டாங்க அதனால்தான் நீ செலவு செய்ய மாட்டேங்குற, உன்னை மாத்தி காட்டுகிறேன் பார் என்று சொல்லி நகைக்கடையிலும், துணிக்கடையிலும் வாங்கிய பொருள்களை பார்த்துக் கொண்டு அப்படியே தன்னுடைய யூடியூப் பக்கத்தில் லைவில் அதை காட்டிக் கொண்டிருக்க கண்ணன் அதிர்ச்சி ஆகிறார்.

அடுத்ததாக வீட்டில் தனியாக கதிர் யோசித்துக் கொண்டிருக்கும் போது முல்லை கதிரை எப்படியும் ஜீவா குடும்பத்தோடு வளைகாப்புக்கு வந்து விடுவார் பயப்பட வேண்டாம் என்று சமாதானம் செய்கின்றார். அதற்கு ஜீவா அண்ணாவுக்கு நாம இப்ப வேண்டாதவங்களா போயிட்டமா? என நினைத்து கதிர் ஃபீல் பண்ணிக்கொண்டு பிறகு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஜீவாவிடம் வளைகாப்புக்கு வரும்படி மீண்டும் அழைக்க, ஜீவா முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார். பிறகு நான் வருகிறேன் என்று கூறிவிட்டு கதிர் கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications