அண்ணன் தம்பிகளை இணைக்க கதிர் எடுத்த முடிவு.. கண்ணனை பிரிக்க ஐஸ்வர்யா செய்த சூழ்ச்சி
சென்னை: முல்லையின் வளைகாப்பிற்கு ஜீவா அனைவருக்கும் ஒரே கலரில் சட்டை எடுத்து இருக்கிறார்.
ஐஸ்வர்யா வளைகாப்பு ஃபங்ஷனில் கண்ணனை குடும்பத்தோடு சேர்ந்து விடாமல் இருக்க பிளான் போடுகிறார்.
மண்டபத்தில் வேலை செய்ய யாரும் இல்லாமல் தனியாக கதிர் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 18ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில், ஜீவாவை சந்தித்த கதிர் அனைவருக்கும் ஒரே கலரில் ஃபங்ஷனில் போட்டுக்கொள்ள சட்டை எடுத்து இருக்கிறேன். அதனால் நீயும் போட்டுக் கொண்டு வந்து விடு என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போதைக்கு ஜீவாவும் சரி வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அடுத்ததாக ஐஸ்வர்யா வீட்டில் ஐஸ்வர்யாவின் சித்தி வாங்கி வைத்த பொருள்களை எல்லாம் பார்த்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே கதிர் வருகிறார் பிறகு கண்ணுக்கு வாங்கிய சட்டை தைத்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது என்று கூறி கண்ணனுக்கும் சட்டையை கொடுத்துவிட்டு செல்ல, ஐஸ்வர்யாவும் அவருடைய சித்தியும் இவங்களுக்கு இது ஒன்னு தான் குறை. நான் எப்படியும் வளைகாப்பு பங்ஷனுக்கு இந்த சட்டையை போட விட மாட்டேன் என்று கூறுகிறார்.
அடுத்ததாக தனம் முல்லைக்கு வாங்கிய தங்க நகையை மூர்த்தி இடம் காட்டிக் கொண்டு இருக்க, மண்டபத்தில் கதிர் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். அலங்கார வேலைகளை தனியாக பார்த்துக் கொண்டிருக்கும் கதிர், இதற்கு முன்பு ஒவ்வொரு பங்க்ஷனிலும் தான் செய்ததையும் அண்ணன் தம்பிகள் சந்தோசமாக இருந்ததையும், ஜீவா செய்த செயலையும் நினைத்து பார்க்கிறார். அப்போது அங்கு வரும் மூர்த்தியும் கதிர் தனியாக வேலை செய்வதை பார்த்து பீல் பண்ணி தனக்கு ஜீவா மேக்கப் போட்டு விட்டதை நினைத்துப் பார்க்கிறார்,
ஐஸ்வர்யாவும், கண்ணனும் வீட்டில் தனியாக உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணனுக்கு தங்கள் வீட்டில் நடந்த பங்க்ஷனில் தான் ஆட்டம் போட்டது எல்லாம் நினைவுக்கு வருகிறது. இதற்கு முன்பு வீட்டில் பங்க்ஷன் நடக்கும் போதெல்லாம் நாங்கள் சந்தோஷமாக இருப்போம் என்று பேசிக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா இனி வேறு ஏதாவது பங்க்ஷன் வரும்போது நீ போய் டெக்கரேஷன் எல்லாம் பண்ணு என்று கூறுகிறார்.

அடுத்ததாக மீனாவும் ஜீவாவும் வீட்டில் தனியாக அமர்ந்து இருக்க, அப்போது மீனா ஜீவாவிடம் நாளைக்கு நாம பங்க்சனுக்கு போறோம் தானே என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் ஜீவா அப்படியே அமர்ந்திருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது..
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications