கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத ஜனார்த்தனன்..மனம் மாறிய ஜீவா.. மூர்த்திக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: ஜீவா மீனாவை எப்படியாவது முல்லையின் வளைகாப்புக்கு போக விடக்கூடாது என்று ஜனார்த்தனன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மருத்துவமனையில் ஜனார்த்தனனுக்கு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டனர்.

மண்டபத்தில் எல்லோரும் காத்துக் கொண்டிருக்க கடைசி நேரத்தில் ஜீவாவும் மீனாவும் வளைகாப்பில் கலந்து கொள்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஜனார்த்தனனை ஜீவாவும், மீனாவும் மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து ஜீவாவிடமும் மீனாவிடமும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி நடித்துக் கொண்டே இருக்கிறார்.

மொத்த குடும்பமும் ஜீவாவையும் மீனாவையும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மல்லியின் குடும்பமும் அங்கே வந்து சேர ஐஸ்வர்யா அவர்களிடம் தன்னுடைய கணவர் கவர்மெண்ட் வேலை செய்வதாகவும் அதனால் எங்க வீட்டில் ஈசியாக நாங்க ஏசி வாங்கி விடுவோம் என்றெல்லாம் பெருமையாக பேசி பேசிக்கொண்டிருக்கிறார்.
மருத்துவமனையில் ஜீவாவிடம் மீனாவின் அப்பா எனக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயமாக இருக்கிறது. நீங்கள் தான் எனக்கு பிறகு குடும்பத்தை பார்க்க வேண்டும். என்னுடைய பிசினஸை எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். மீனாவின் அம்மாவும் ஒரு பக்கமாக அழுது கொண்டிருக்கிறார். பிறகு ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்து ஜீவாவும் மீனாவும் ரிப்போர்ட்டை வாங்க போகின்றனர்.

ரிப்போர்ட்டில் ஜனார்த்தனனுக்கு எதுவும் இல்லை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகலாம் என்று சொன்னதை கேட்டு ஜீவாவும் மீனாவும் ஜனார்த்தனிடம் நேராக உங்களை வீட்டில் கூட்டிக்கொண்டு விட்டுவிட்டு நாங்கள் வளைகாப்புக்கு போக போகிறோம் என்று சொல்ல ஜனார்த்தனன் திகைத்துப் போய் விடுகிறார். எப்படியாவது ஏதாவது செய்யுங்க என்று கண்களாலே மீனாவின் அம்மா ஜனார்த்தனனிடம் கூறுகிறார்.
அதே நேரத்தில் மண்டபத்தில் எல்லாரும் கதிரை முல்லையின் அருகில் வந்து உட்கார கூப்பிடுகின்றனர். கதிரும் முல்லையும் வாசலை பார்த்தபடியே இருக்கின்றனர். கடைசி நேரத்தில் ஜீவாவும் மீனாவும் வாசலில் குழந்தையோடு நிற்கின்றனர். அதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டு இன்ப அதிர்ச்சி அடைகின்றனர். மூர்த்தி ஜீவாவை பார்த்ததும் முகம் மாறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது..
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications