மீனா வீட்டிற்கு வந்த கதிர், முல்லை.. கதறி அழுத தனம்.. ஜீவாவின் மாற்றம்.. அசிங்கப்படுத்தும் மாமனார்
சென்னை: ஜீவாவிடம் ஜனார்த்தனன் தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டை விரிவு செய்ய வேண்டும் என்பதற்காக புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய அண்ணன்கள் மீது கோபம் இருக்கிறது. ஆனால் அவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நான் நினைக்க மாட்டேன் என்று ஜீவா கூற ஜனார்த்தனன் அதிர்ச்சி ஆகிறார்.

மீனாவின் வீட்டிற்கு முல்லையும், கதிரும் வந்து கயல் பாப்பாவை கூட்டிக்கொண்டு செல்கின்றனர்.
ஜீவாவின் மனமாற்றம்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஏப்ரல் 7-ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில், குடோனுக்கு சரக்கு வருவதாக ஒரு நபர் போன் பண்ணி சொல்ல, ஜீவா நான் போய் பார்க்கிறேன் என்று சொல்ல, அதற்கு ஜனார்த்தனன் வேண்டாம். அதற்கு தானே வேற ஆளை வச்சிருக்கோம் என்று சொல்ல, அதற்கு நிறைய குளறுபடி நடக்குது அதை நானே போய் பார்க்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு ஜனார்த்தனன் கடையை விரிவு செய்ய வேண்டும் அதற்காக சில அதிரடியான தள்ளுபடிகளை போடலாம் என்று இருக்கேன் என்று சொல்ல, அப்படி எல்லாம் வேண்டாம். அப்படி என்றால் குன்னக்குடியில் இருக்கும் மற்ற கடைகள் எல்லாம் பாதிக்கும் என்று சொல்லி ஜீவா மறுக்கிறார்.
கடுப்பாகும் மாமனார்:
நீங்க எந்த கடைய சொல்றீங்க பாண்டியன் ஸ்டோரையா என்று ஜனார்த்தனன் நக்கலாக கேட்க, அதுவும் தான். நான் எங்க அண்ணன்கள் தம்பிகளை விட்டு வந்திருக்கேன். அவங்க மேல கோபமாக இருக்கிறேன் உண்மைதான் ஆனால் அதுக்காக அவங்க கெட்டுப் போகணும்னு நான் நினைக்க மாட்டேன் என்று ஜீவா பதில் சொல்ல ஜனார்த்தனன் மனதிற்குள்ளே கடுப்பாகிறார்.
மீனாவின் பதிலடி:
அடுத்ததாக மீனாவின் வீட்டில் கயலோடு மீனா விளையாடிக் கொண்டிருக்க, அப்போது கதிர் முல்லையும் அங்கே வருகின்றார். முல்லையில் வயிற்றைப் பார்த்து மீனா நல்ல பெருசாகிட்டலா என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்க, பிறகு இருவரும் மாறி மாறி நலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று முல்லை விசாரித்துக் கொண்டிருக்க, அப்போது ஜீவா ரொம்பவே மனசு ஒடிந்து போய் இருக்கான். நான் எப்படி அவங்க கிட்ட போய் பேசுறதுன்னு தெரியல. நீங்க கதிர் வீட்டை விட்டுப் போகும்போது கூடவே தான போனீங்க என்று முல்லைக்கு மீனா பதிலடி கொடுக்கிறார்.

அவமானப்படுத்தும் மீனாவின் அம்மா:
பிறகு கதிர் எதுக்கு பழசை எல்லாம் பேசிக்கிட்டு என்று கூறிக்கொண்டு, அண்ணன் நல்லா சாப்பிடுதா என்று ஜீவாவை நலம் விசாரிக்க, மீனாவின் அம்மா என்ன நீங்க ஆளே இல்லாத காட்டுல அவர விட்ட மாதிரி இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். பிறகு கயலை நாங்க வீடு வரைக்கும் கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா? என்று மீனாவிடம் கேட்க மீனா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பிறகு சரி என்று அனுப்பி வைக்கிறார்.
கண் கலங்கும் தனம்:
கயிலை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த கதிர் முல்லையும் வீட்டு வாசலில் கயிலை நிறுத்திவிட்டு உள்ளே இருக்கும் தனத்தை பெரியம்மா என்று கூப்பிடு என்று அனுப்பி வைக்கின்றனர். உள்ளே தனியாக தனம் உட்கார்ந்து இருக்க அங்கே வரும் கயலைப் பார்த்ததும் தனம் சந்தோஷத்தில் கண்கலங்கி அழுகிறார். பிறகு அதில் யார் கூட வந்திருக்கா? ஜீவா மீனா என்று வெளியே ரொம்பவே தேடிக் கொண்டிருக்க, அப்போது கதிர் நாங்க தான் பாப்பாவை கூட்டிட்டு வந்தோம். உங்கள ஏமாத்திட்டமோ என்று கதிர் கேட்க? பிறகு தனம் மூர்த்திக்கு போன் பண்ணி கயல் வந்திருக்கு, விஷயத்தை சொல்ல வேண்டும் என்று சந்தோஷப்படுகிறார்.

கோபப்படும் ஜனார்த்தனன்:
கதிர் கயல் வந்து இருக்க விஷயத்தை சொல்ல மூர்த்தி சந்தோஷமாக வீட்டிற்கு வந்து கயலை பார்த்து கொஞ்சி கண் கலங்குகிறார். அடுத்ததாக மீனா வீட்டில் ஜீவாவும் ஜனார்த்தனன் வீட்டிற்கு வருகின்றனர். வந்ததும் கயலை எங்கே என்று தேடுகின்றனர். அப்போது முதலில் அமைதியாக இருக்கும் மீனா, பிறகு கயல் ஜீவாவின் வீட்டிற்கு சென்றிருப்பதை பற்றி கூறுகிறார். கதிரும் முல்லையும் வந்தாங்க. ஆசையா கூட்டிட்டு போகட்டுமான்னு கேட்டாங்க என்று சொல்ல, அதற்கு ஜனார்த்தனன் மீனாவை திட்டுகிறார். அதற்கு ஜீவா வேண்டாம் நாம தான் சண்டை போட்டு இருக்கோம். கயல் அப்படி இருக்க வேண்டாம். அவ போய்ட்டு வரட்டும் என்று சொல்ல ஜனார்த்தனன் அதிர்ச்சியாகி மீனாவை திட்டுகிறார். பிறகு இவளே இப்படி இருந்தால் எங்கே போய் முடியுதுன்னு தெரியல, என்று புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications