சம்பளம் வந்ததும் தாறுமாறாக செலவு செய்யும் ஐஸ்வர்யா..கண்ணன் வேலைக்கு வந்த ஆப்பு..பதிலடி கொடுத்த கதிர்
சென்னை: கண்ணனுக்கு சம்பளம் வந்ததும் ஐஸ்வர்யா வீட்டுக்கு தேவையான பொருட்கள் என சம்பள பணத்தை காலி செய்கிறார்.
மீனாவின் வீட்டிற்கு கதிர் வந்த நிலையில் ஜனார்த்தனன் கதிரை அவமானப்படுத்துகிறார்.
ஜீவா கதிரிடம் சரியாக பேசாமல் விலகி செல்கிறார்.

தொடங்கியது இஎம்ஐ பிரச்சனை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 8ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கண்ணன் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வருகிறார். ஐஸ்வர்யா எப்போதும் போல சந்தோஷமாக கண்ணனை வரவேற்று பிறகு சம்பளம் கிரெடிட் ஆகிவிட்டதா என்று கேட்க, அதற்கு கண்ணனும் ஆமாம் என்று சொல்ல, நாம எல்லா பொருள்களிலும் இஎம்ஐயில் தானே வாங்கி இருக்கோம். அதனால அக்கவுண்டில் பணம் இருக்கணும். அவங்க எடுக்க வேணும். மொத்த பணத்தையும் எடுத்துறாத என்று அட்வைஸ் கூறிவிட்டு, நாம எவ்வளவு இஎம்ஐ கட்ட வேண்டும் என்று கணக்கு பார்க்கிறார்.
அடுத்த செலவும் ரெடி
பிறகு சம்பள பணத்தில் பாதிக்கு மேலே இஎம்ஐ கட்ட வேண்டியது இருக்கிறதே என்று ஐஸ்வர்யா சொல்ல கண்ணன் அதிர்ச்சி ஆகிறார். சமாளித்து விடலாமா? என்று கண்ணன் கேட்க, பார்த்துக்கலாம் என்று ஐஸ்வர்யா சொல்லி, இந்த மாசத்துக்கான மளிகை சாமான்கள், வீட்டுக்கு தேவையான சில பொருட்களும் வாங்க வேண்டும் என்று சூப்பர் மார்க்கெட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்.
செலவு அதிகம் தான்
வீட்டிற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அளவுக்கு அதிகமாகவே ஐஸ்வர்யா வாங்கி குவிக்க, அதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். கடைசியில் சம்பள பணத்தில் அதிகமான பணம் செலவு ஆகி விடுகிறது. இதை பார்த்து கண்ணன் தவித்துக் கொண்டிருக்கிறார். நான் இன்னமும் பொருள்கள் வாங்க வேண்டும் என்று கூறி ஐஸ்வர்யா மேலும் கண்ணனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். சூப்பர் மார்க்கெட்டில் 9000 பில் கட்டி விட்டு அதிர்ச்சியோடு வீட்டிற்கு வருகின்றனர்.

கதிருக்கு கிடைத்த அவமானம்
அடுத்ததாக கதிர் கையிலை கூட்டிக்கொண்டு மீனாவின் வீட்டிற்கு வந்து விடுகிறார். மீனா இவள் அழாம சமத்தா இருந்தாலா? என கேட்க, அவா ஏன் அழப்போறா? நாங்க என்ன புது ஆளா? என்று கதிர் கேட்கிறார். பிறகு ஜனார்த்தனன் நீங்க கடைக்கு போகலையா? என்று கேட்க, அதற்கு கதிர் போகணும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் கடையை நல்லா பாத்துக்கிட்டா தான நல்லா வருமானம் வரும். அப்பதானே நீங்க தனியா சேர்த்து வைக்க முடியும் என்று ஜனார்த்தனன் வில்லங்கமாக பேசுகிறார். அப்போது ஜீவா அங்கே வர ஜீவா கதிரிடம் பட்டும்படாமல் பேசுகிறார்.
கதிரின் பதிலடி
அதை பார்த்த ஜனார்த்தனன் உங்க மேல அவருக்கு இன்னும் கோபம் தீரல. உங்ககிட்ட சரியா பேச மாட்டேங்கிறார். நீங்க எதுக்கு அவர்கிட்ட பேசிக்கிட்டே இருக்கீங்க என்று கேட்க, எங்க அண்ணன் தான? சீக்கிரமா சரியாயிடுவார். அவர் எப்படின்னு எங்களுக்கு தெரியும். உங்களுக்கு மூணு வருஷமா தான் தெரியும். அதனால சீக்கிரமா எங்க அண்ணன் மனமாறி எங்க வீட்டுக்கு பழையபடி வந்து விடுவார் என்று சொல்லி பதிலடி கொடுத்து விட்டு கிளம்ப, ஜனார்த்தனன் அதிர்ச்சியில் கோபத்தோடு யோசித்துக் கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications