இது பாண்டியன் ஸ்டோரா இல்லை அதுவா? இவங்களால் மட்டும் எப்படி முடியுது? காண்டாகும் நெட்டிசன்கள்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்றாவதாக தற்போது தனம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் காண்டாகி கலாய்த்து வருகிறார்கள்.
ஏற்கனவே முல்லை மற்றும் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது தனம் கர்ப்பமாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
நான்கு மாதமாக ஒரே அறையில் அனைவரும் படுத்து தூங்கினாலும் எப்படி இவர்களால் மட்டும் கர்ப்பமாக முடிகிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அண்ணன் தம்பி கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. அண்ணன் தம்பி கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு தனியாக குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். இந்த நிலையில் தற்போது சில நாட்கள் ஆகவே இந்த சீரியலின் கதை ஏதோ நகர வேண்டுமே என்கிற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

குடும்பத்தோடு ஒரே வீட்டில்
ஏற்கனவே இவர்கள் அனைவரும் தொடங்கும் பிசினஸ் எல்லாமே அடுத்தடுத்து மூடு விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் சூப்பர் மார்க்கெட் தொடங்கினார்கள் அதுவும் கமர்சியல் பில்டிங் கட்ட முடியாத இடத்தில் கட்டி இருப்பதாக கூறி அதை சீல் வைத்தனர். அதற்கு முன்பு அவர்களுடைய பாரம்பரியமான பரம்பரை வீட்டில் இருந்து மீனாவின் அப்பாவால் வெளியேற்றப்பட்டனர். பிறகு கதிர் ஏற்கனவே இருந்து வந்த தனி வீட்டில் குடும்பத்தோடு தங்கி இருந்து வருகின்றனர்.

முல்லையின் கர்ப்பம்
இந்த நிலையில் அந்த வீட்டில் ஒரே ஒரு பெட்ரூம் ஒரே ஒரு ஹால் ஒரு கிச்சன் மட்டுமே இருக்கிறது. இதில் அனைவரும் காலையில் தான் படுத்து தூங்குகின்றனர். இதில் ஆரம்பத்தில் முல்லை கர்ப்பமாக இருப்பது போன்று காட்டப்பட்டது ஏற்கனவே பல வருடங்களாக முல்லை குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று டாக்டர் கூறியிருந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். அதை குறித்து அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தது.

வாந்தி ஸ்டோர்
எப்படி அனைவரும் ஒரே இடத்தில் படுத்து தூங்கும் போது கர்ப்பமாக முடிந்தது என்று கேள்வி எழுப்பி கலாய்த்து கொண்டிருந்த நேரத்தில் அடுத்ததாக ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக அடுத்த ட்விஸ்ட் வைத்தனர். இதைக் குறித்து கலாய்த்து முடிப்பதற்குள் இன்று தனம் வாந்தி எடுத்து அவரும் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் கூறியிருக்கிறார். தொடர்ந்து இவர்கள் வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பதால் பாண்டியன் ஸ்டோருக்கு பதிலாக "வாந்தி ஸ்டோர்" என்று பெயர் வைக்கலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தொடரும் வாந்தி
நான்கு மாதமாக அனைவரும் ஒன்றாக படுத்து தூங்கும்போது தனித்தனியாக இவர்களால் மட்டும் எப்படி தான் கர்ப்பமாக முடிந்தது என்பது பலருடைய தீர்க்க முடியாத கேள்வியாக இருக்கும் நிலையில், போதுமடா இந்த சீரியலை நிறுத்துங்கள். இவர்கள் வாந்தி எடுக்கும் சத்தத்தை பார்த்து நமக்கு வாந்தி வந்துவிடும் போல என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே வெளியே சென்றிருக்கும் ஆண்கள் வீட்டிற்கு வந்து எட்டு மணிக்கு தான் சாப்பிட உட்காருவார்கள். அப்போது இவர்களுடைய வாந்தி சத்தம் தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று பலர் தங்களுடைய வருத்தத்தை பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு ஒரு விடிவே இல்லையா? கதை இல்லை என்றால் இப்படியே சுற்றிக் கொண்டிருப்பார்களா? என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications