மீனா பற்றி வீட்டில் எழும் பேச்சு.. அடுத்தடுத்து ஜீவாவிற்கு கிடைத்த அவமானங்கள்..மாமனார் செய்த செயல்
பண விஷயத்தில் அடுத்தடுத்து ஜீவா அனைவரிடமும் அவமானப்படுகிறார்.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவாவை கார் விஷயத்தில் முல்லையின் அம்மா அவமானப்படுத்துகிறார்.
மீனா ஒரு நாள் வீட்டில் இல்லாததால் வீட்டில் இருக்கும் மருமகள்கள் அனைவரும் மீனாவை ரொம்பவே மிஸ் பண்ணுகின்றனர்.
ஜீவாவின் மனதை மாற்றுவதற்காக மீனாவின் அப்பா ஜீவாவிற்கு பணம் கொடுத்து உதவி செய்கிறார்.

காருக்காக கிடைத்த அவமானம்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 10ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஜீவா காரை துடைத்துக் கொண்டிருக்க, அங்கே வரும் முல்லையின் அப்பாவும் அம்மாவும் என்ன காரை துடைத்துக் கொண்டிருக்கிங்க வேலைக்கு கிளம்பலையா என்று கேட்கின்றனர். அதற்கு ஜீவா கல்யாண பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்று சொல்ல, நீங்க எதற்கு காரை துடைக்கிறீங்க என்று முல்லையின் அம்மா கேட்க? நாங்க காரில் தான் போகப் போகிறோம் என்று ஜீவா சொல்ல, அப்போ நாங்க எப்படி போகிறது. என்னை ஹாஸ்பிடலுக்கு மாப்பிளை கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காங்க. இது என்னோட மாப்பிள்ளையோட கார் தானே என்று ஜீவாவை அவமானப்படுத்துகிறார்.

பீல் பண்ணும் முல்லை
முல்லையின் அப்பா சமாதானம் செய்தாலும் முல்லையின் அம்மா அதைக் கேட்டுக் கொள்ள வில்லை. அதற்கு நாங்கள் பைக்கில் போய்கிறோம் என்று ஜீவா சொல்லி விடுகிறார். பிறகு கதிர் அனைவரிடமும் போயிட்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு, முல்லையின் அப்பா அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகிறார். ஜீவாவும், மீனாவும் சின்ன பைக்கில் போகும்போது தனம் என்ன ஆச்சு என கேட்க கதிர் காரில் அவங்களை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க என்று சொல்ல, அதற்கு முல்லை இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அம்மாவுக்கு வேற நாளில் அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கலாம் என்று கூறுகிறார்.

பணம் பிரச்சனை பெரும் பிரச்சனை
பிறகு முல்லையின் அப்பாவும் ஜீவா பிரசாந்த் மூவரும் காரில் பத்திரிக்கை வைக்க சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது பெட்ரோல் போடுவதற்காக பிரசாந்த் ஜீவாவிடம் பணம் கொடுக்கிறார். முதலில் மறுத்த ஜீவா பின்பு வாங்கிக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து தெருவில் இளநீர் வாங்கிக் குடிக்கும் போது தன்னிடம் காசு இல்லாமல் ஜீவா திணறிக் கொண்டிருக்கிறார். அப்போதும் மீனாவின் அப்பா அதை பார்த்துக்கொண்டு பணம் கொடுத்து விடுகிறார். பின்பு பேக்கரியில் நின்று கொண்டு பிரசாந்த் ஜீவாவிடம் என்னிடம் பணம் இல்லை உங்களிடம் 400 ரூபாய் இருக்கிறதா என்று கேட்க ஜீவா தன்னிடம் இல்லை என்று சங்கடத்துடன் கூறுகிறார்.

மனம் மாறும் ஜீவா
அடுத்ததாக கடைக்கு வரும் ஜீவாவிடம் மூர்த்தி அடுத்தடுத்து வேலைகளை கூறிக் கொண்டே இருக்கிறார். ஆர்டர் கொடுக்க வேண்டிய பொருள்களை கொண்டு செல்வதற்கு கிளம்பிய ஜீவாவிற்கு பைக்கில் பெட்ரோல் இல்லை என்று சொன்னதும் அவருடைய அண்ணன் பெட்ரோல் போடுவதற்கு மட்டும் 200 ரூபாய் கொடுத்து இருக்க, அதை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தபடியே ஜீவா நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது. நாளை சோட்டில் இரவு மீனாவின் வீட்டிற்கு வரும் ஜீவாவிடம் மீனாவின் அப்பா ஒரு கட்டாக பணத்தை கொடுக்கிறார். அதற்கு ஜீவா எனக்கு வேண்டாம் என்று சொல்ல, நீங்க எனக்கு எப்போதும் மூத்த மருமகன். நீங்க எந்த இடத்திலையும் குறைவாக இருக்கக் கூடாது. நாளைக்கு பத்திரிக்கை வைக்க போகும் போது உங்களுக்கு செலவுக்கு இது தேவைப்படும் என்று கூறுகிறார். ஜீவா அந்த பணத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications