அவமானப்படுத்திய மூர்த்தியால் ஜீவா செய்த செயல்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.. மீனா எடுத்த முடிவு
கடையை பூட்டாமல் சென்றதற்காக மூர்த்தி திட்டுவதால் கோபப்பட்டு ஜீவா மூர்த்தியை கேள்வி கேட்கிறார்.
சென்னை: மீனா அவசரமாக கூப்பிட்டதால் ஜீவா கடையை பாதி வரைக்கும் பூட்டிவிட்டு சென்று விட்டதால் மூர்த்தி ஜீவாவை திட்டி இருக்கிறார்.
பொறுமையாக இருந்து வந்த ஜீவா அவமானத்தால் திடீரென்று மூர்த்தி மீது தனக்கு இருந்த கோபத்தை கொட்டி விட்டார்.
ஜீவாவை அனைவரும் திட்டிக் கொண்டிருக்க அங்கே வரும் மீனா கேட்ட கேள்வியால் ஜீவா கண் கலங்கி அழுகிறார்.

மூர்த்திக்கு கிடைத்த அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 13-ஆம் நாளுக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் கடைக்கு வரும் மூர்த்தி கடை பாதியளவில் பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மேலும் கடையில் நின்ற கஸ்டமருக்கு பொருட்களை கொடுத்து அனுப்பிவிட்டு அங்கு வரும் குமரேசன் மாமாவை திட்டுகிறார். அப்போது குமரேசன் மாமா நான் பூட்டவில்லை ஜீவா தான் கடையை பூட்டி விட்டு போய் இருக்கணும் என்று சொல்கிறார்.

திட்டும் மூர்த்தி
பின்னர் வீட்டிற்கு வந்ததும் மூர்த்தி உம்மென்று இருக்க அனைவரும் ஏன் மூர்த்தி இப்படி அமைதியாக கோபத்தோடு இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி நாம ஞாயிற்றுக்கிழமை தவிர எப்போதாவது கடையை பூட்டி இருக்கோமா? ஆனால் இந்த ஜீவா இன்னைக்கு கடைய பாதியில் பூட்டிட்டு போயிருக்கான் அதுவும் பூட்டியும் பூட்டாம அப்படியே விட்டுட்டு அவசரமா வெளியே போய் இருக்கான். ஒரு வார்த்தை யார்கிட்டயாவது சொல்லி இருக்கானா? என்று கோபமாக திட்டுகிறார்.

ஜீவா கேட்ட கேள்விகள்
மூர்த்தி பேசியதை கேட்டு அமைதியாக இருந்த ஜீவா கடையை யாரும் பாதியில் பூட்டிட்டு வேணும்னு வெளியே போவாங்களா? மீனா நடுத்தெருவில் நின்னுகிட்டு குழந்தைக்கு உடல் சரியில்லை என்று போன் பண்ணுனா? அதனால தான் நான் போனேன். என்று சொல்ல, அப்போ ஒரு ஆட்டோ அனுப்பி இருக்கலாமே என்று மூர்த்தி கேட்க நீங்க காசு கொடுத்துட்டு போன மாதிரி கேக்குறீங்க? என்கிட்ட எப்பவாவது பணம் தந்து வச்சிருக்கீங்களா? கல்லாப்பெட்டியை எதுக்கு பூட்டிட்டு போனீங்க. என் மேல அவ்வளவு நம்பிக்கையா? என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்கிறார்.

தொடரும் அட்வைஸ்
இதனால் மூர்த்தியோடு சேர்ந்து மொத்த குடும்பமும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. பின்னர் அனைவரும் ஒவ்வொருவராக ஜீவாவை சமாதானம் செய்கின்றனர். ஜீவா கோபித்துக் கொண்டு வெளியே சென்று நிற்க, அங்கு வரும் தனம் நீ உங்க அண்ணனை இப்படி திட்டி இருக்கக் கூடாது. நீ எப்பவாது கேட்டு அண்ணன் பணம் தரமாட்டேன் என்று சொல்லி இருக்காங்களா? கல்லாப்பெட்டியில் இருந்து நீ காசு எடுத்தா ஏதாவது சொல்லி இருக்காங்களா? என்று அட்வைஸ் பண்ணுகிறார். அது மாதிரி அடுத்து வரும் கதிரும் அட்வைஸ் பண்ணுகிறார்.

கதறி அழும் ஜீவா
பிறகு மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கலாம் வா என்று கதிர் ஜீவாவின் கையைப் பிடித்து இழுக்க, ஜீவா விடு கையை என்று உதறி விட ,கதிரும் தனமும் உள்ளே செல்கின்றனர். பிறகு அங்கு வரும் மீனாவிடம் நீயும் என்னை திட்ட போறியா? திட்டு. நான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி எல்லோரும் திட்டுறாங்க. நீயும் பதிலுக்கு திட்டு என்று சொல்கிறார். ஆனால் மீனா பொறுமையாக பேச, ஜீவா நீயாவது என்கூட இரு என்னால முடியல. எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி இருக்குது என்று கண் கலங்கி அழுது விடுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications