கல்யாண வீட்டில் ஜீவாவுக்கு கிடைத்த அவமானம்.. தனத்திற்கு மீனாவின் பதிலடி.. கதிரோடு அடுத்த பிரச்சனை?
மீனாவின் தங்கை திருமணத்திற்கு வந்த தன்னுடைய குடும்பத்தை ஜீவா கண்டு கொள்ளவில்லை.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் தங்கை திருமணத்திற்கு வந்த தனம் மீனாவிடம் வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றி பேசுகிறார்.
கல்யாண வீட்டில் ஜீவாவை மீனாவின் அப்பாவின் நண்பர் அனைவர் முன்னிலையிலும் என்ன வேலை செய்கிறார் என கேட்டு அவமானப்படுத்துகிறார்.
பங்ஷனுக்கு வந்த தன்னுடைய குடும்பத்தினரிடம் ஜீவா முகம் கொடுத்து பேசாமல் தவிர்த்து வருகிறார்.

புகழும் மாமனார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மார்ச் 16ஆம் தேதி எபிசோட்டின் ஆரம்பத்தில் கல்யாண வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டினர் வருகின்றனர். அவர்களை ஜீவா, மீனா குடும்பத்தோடு வரவேற்கின்றனர். அப்போது ஜீவா தான் என்னுடைய மூத்த மருமகன் இல்லை என்னுடைய மகன் மாதிரி என்று ஜீவாவின் அப்பா வந்தவர்களிடம் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

புது ஐஸ்வர்யா அறிமுகம்
அடுத்ததாக மூர்த்தியின் குடும்பத்தினர் அனைவரும் காரில் மீனா வீட்டுக்கு வருகின்றனர். அப்போது புது ஐஸ்வர்யாவாக விஜே தீபிகா இணைந்திருக்கிறார். மாப்பிள்ளை வீட்டினர்களோடு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினரையும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களோடு மீனாவின் அப்பாவும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் ஜீவா யாரிடமும் சரியாக முகம் கொடுத்து பேசாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.

மீனாவின் பதிலடி
பிறகு மீனா, தனம், முல்லை மூவரும் பூ கட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜீவா வருத்தப்பட்டானா அவனை கவலைப்பட வேண்டாம் என்று சொல்லு இதைப் பற்றி வீட்டில் பேசலாம் என தனம் அட்வைஸ் பண்ணுகிறார். இருவரும் அந்த நேரத்தில் எதற்காக அப்படி கோபமாக பேசினார்கள் என்று தெரியவில்லை, ஜீவா அப்படி பண்ணற ஆளு கிடையாது. எதற்காக ஷட்டரை பாதிவரைக்கும் பூட்டிட்டு போன என்று அமைதியாக மாமா கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. அதற்கு ஜீவாவும் காசு எனக்கு தந்தா வச்சிருக்கீங்க என கேட்டது தவறுதான். அதனால் மாமா ரொம்ப கஷ்டப்பட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா நான் வீட்டில் இருந்து பணம் கொண்டு வந்து இருந்தா இப்படி ஆகி இருக்காது என்று தனத்திற்கு பதிலடி கொடுக்கிறார்.

விலகும் ஜீவா
அடுத்ததாக ஆண்கள் அனைவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே மூர்த்தி வந்ததும் விளையாடு கொண்டிருந்த ஜீவா எழுந்து போக போகிறார். பிரசாந்த் பாண்டியன் ஸ்டோர் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் ஒன்றாக இருந்து விளையாடுங்க என்று அனைவரையும் ஒன்றாக இருக்க வைக்க, ஜீவா அந்த இடத்தை விட்டு கிளம்பி போவதற்கு ரெடியாக இருக்கிறார். அப்போது ஜனார்த்தனன் தனது நண்பரை அறிமுகம் செய்து வைக்கிறார்.

தொடரும் அவமானங்கள்
ஜனார்த்தனன் நண்பன் அனைவரிடமும் வேலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஜீவாவின் வேலையை கேட்டு அவமானப்படுத்த ஜீவா அங்கிருந்து கோபத்தில் கிளம்புகிறார். பிறகு ஜீவா சென்றதை பார்த்து மாமனாரின் முகம் மாறுகிறது. அதற்கு மூர்த்தி பாண்டியன் ஸ்டோர் கடை முழுக்க பார்த்துக் கொள்வது என்னுடைய தம்பி தான். என்னுடைய வீட்டில் முதல் நாளாக காலேஜ் சென்று படித்தது அவன்தான் என்று ஜீவாவை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு மாமனார் உடன் சேர்ந்து ஜீவா குடித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைய எபிசோட்டில் கதிர் வந்து ஜீவாவை குடிக்க வேண்டாம் என்று தடுக்க, ஜீவா நீ யார் என்னை தடுப்பதற்கு, உங்க அண்ணன் மாதிரி நீயும் திட்ட போறியா? என்று கேட்கிறார். இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications