கண்ணன் செய்த குளறுபடி.. அசிங்கப்படுத்திய ஜனார்த்தனன்.. மீனா கேட்ட கேள்வியால் ஜீவா எடுத்த முடிவு
மீனாவின் தங்கை திருமணத்தில் கண்ணன் மொய் விஷயத்தில் சொதப்பியதால் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா மற்றும் மீனா பெயரில் மொய் எழுதவில்லை என்று ஜனார்த்தனன் மீனாவை திட்டுகிறார்.
கண்ணன் மொய் விஷயத்தில் மாற்றி எழுதியதால் மீனா ஜீவாவை திட்டுகிறார்.
தனது அண்ணனை நம்பி இருந்த ஜீவாவிற்கு வீட்டில் நடந்த செயலால் அதிர்ச்சி காத்திருக்கிறது.

முல்லை அம்மாவின் கோபம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 20 ஆம் தேதிக்கான இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முல்லையிடம் அவருடைய அம்மா ரூ. 5000 மொய் வைத்தால் மல்லி என்ன சொல்வாள்? இன்னும் கொஞ்சம் சேர்த்து மொய் வை என்று சொல்ல, அதற்கு ஏற்கனவே அக்கா தனியாக மொய் வைக்கிறாங்க. நான் தனியா வைக்கிறது கூட அவங்க கிட்ட சொல்லல. இதுவே போதும். அக்காவும் மாமாவும் அதிகமாகத்தான் செய்ய போறாங்க என்று சொல்ல, அந்த மொய் கவரை என்னிடம் கொடு என்று முல்லையின் அம்மா வாங்கிக்கொண்டு பிறகு தன்னுடைய மொய்யையும் எழுதுவதற்காக க்யூவில் நிக்கிறார்.

தம்பியை ரசிக்கும் குடும்பம்
அடுத்ததாக தனமும் மூர்த்தியும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு ஜீவா தன்னுடைய மாமனார் உடன் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பெருமைப்பட்டு கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரையும் இப்படி பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, நல்லா இருக்கு என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மொய் எழுதும் இடத்தில் முல்லையின் அம்மா தனக்கு கால் வலிக்கிறது என்று கூற கண்ணன் கொண்டாங்க நானே எழுதிட்டு வருகிறேன் என்று சொல்ல, முதலில் வேண்டாம் என்று உள்ள சொல்ல, பிறகு நான் உங்க பணத்தை கொண்டுட்டு ஓடிவிட மாட்டேன் என்று கண்ணன் வாங்கிக் கொள்கிறார்.

மொய் விஷயத்தில் குளறுபடி
அடுத்ததாக மொய் வைக்கும் இடத்தில் முதலாவதாக கண்ணன் ஐஸ்வர்யா பெயரில் மொய் எழுதி பிறகு பெரியண்ணன் கொடுத்த தவறை பார்த்து இது தனியாகத்தான் இருக்கிறது. சத்தியமூர்த்தி தனலட்சுமி என்கிற பெயரில் எழுதி விட, அடுத்ததாக கதிர் முல்லை கவரை பார்த்து அப்போ இவர்களும் பொண்ணு வீட்டுக்கு தான் இருக்கும் என்று பொண்ணு வீட்டு சைடில் கதிர் முல்லையின் பெயரையும் எழுதி விடுகிறார். பிறகு திருமண மொய் எழுதிய பிரிண்ட் அவுட் கொண்டு அங்கிருக்கும் நபர் மீனாவின் அப்பாவிடம் கொடுக்கிறார்.

ஜனார்த்தனன் கேட்ட கேள்வி
மீனாவின் அப்பா பிரிண்ட் அவுட்டை பார்த்து அதில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் தனித்தனியாக மொய் எழுதி இருப்பதையும், அதில் ஜீவா மற்றும் மீனா பெயர் இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சியாகி மீனாவை கூப்பிட்டு வரச் சொல்லி, மீனாவிடம் பிரிண்ட் அவுட் கொடுத்து பார்க்க சொல்ல மீனா அதிர்ச்சியாகிறார். உங்களிடம் பணம் எழுதுவதற்கு இல்லை என்றால் என்னிடம் கேட்டிருந்தால் நான் லட்சக்கணக்கில் எழுதி இருப்பேன். அந்த வீட்டில் பொடி பையன் கண்ணன் அவன் கூட தனியாக மொய் எழுதி இருக்கிறான். எல்லோரும் தனித்தனியாக எழுதி இருக்கிறார்கள் ஆனால் என்னுடைய மாப்பிள்ளை ஜீவா பெயர் மட்டும் இல்லை. இதை இங்கிருக்கும் சொந்தக்காரர்கள் முன்னிலையில் படித்துப் பார்க்கும்போது எல்லோரும் என்னிடம் கேட்பார்கள். நான் என்ன சொல்வது என்று ஜனார்த்தனன் கோபப்பட்டு மீனாவிடம் கேட்கிறார்.

ஜீவாவிற்கு கிடைத்த அதிர்ச்சி
மீனா அந்த பிரிண்ட் பேப்பரை வாங்கிக்கொண்டு ஜீவாவிடம் காட்டி அனைவரும் தனித்தனியாக மொய் எழுதி இருப்பதை பற்றி சொல்ல ஜீவா அதிர்ச்சி அடைகிறார். நான் தான் உன்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கேன் இல்ல, முன்னாடி மாதிரி இல்ல இப்போ நம்ம வீடு. எல்லோரும் தனித்தனியாக சம்பாதிக்கிறாங்க. நம்ம கிட்ட தான் காசு கிடையாது. அதனால எல்லோரும் மாறிட்டாங்க என்று நான் சொன்னதுக்கு நீ கேட்கல. இப்போ அவங்க நம்மள அவமானப்படுத்திட்டாங்க. என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு நம்ம மொய் செய்யவில்லை என்றால் வந்து இருக்கும் சொந்த பந்தங்கள் முன்னாடி நாமதானே அவமானப்படனும் என்று கேட்க, இப்படி அண்ணன், அண்ணி செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கல என்று சொல்ல, இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கான எபிசொட்டில் ஜீவா மூர்த்தியிடம் நான் உங்களுக்கு என்ன பாவம் அண்ணே செஞ்சேன். என்னை எதுக்கு இப்படி அவமானப்படுத்தறீங்க. என்னை காயப்படுத்தி காயப்படுத்தி ரசிக்கிறதுல உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தம் என்று கேட்க, வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.












Click it and Unblock the Notifications