சூழ்ச்சியில் சிக்கி இருக்கும் மூர்த்தி.. ஜீவாவிற்கு தெரிய வந்த உண்மைகள்.. மீனாவால் திடீர் மாற்றங்கள்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்திக்கு தெரியாமல் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிய இருக்கிறார்கள்.
கண்ணன் மற்றும் கதிர் இருவரும் மூர்த்தி மற்றும் தனத்திற்கு தெரியாமல் செய்த செயல் மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும் வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது.
ஜீவாவிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் அண்ணன் தம்பிகள் செய்த செயலால் குடும்பத்தில் அடுத்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது.

கூட்டு குடும்பத்தில் சண்டை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டது. அதனாலேயே இந்த சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியல் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலுக்கு தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் இருந்து வருவதால் பலர் இதை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஒரே வீட்டில் குடும்பத்திற்குள் நடக்கும் கதையை தான் பல வருடங்களாக இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அண்ணன் தம்பிகளுக்குள கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பம் உடைபட போக இருக்கிறது.

பணம் பிரச்சனை
ஏற்கனவே ஜீவா சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும்போது தனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் தனம் மற்றும் மூர்த்தியிடம் பணம் கேட்டு வாங்க வேண்டிய நிலைமை இருக்கிறது அதுவும் எந்த செலவுக்காக கேட்டாலோ அதற்கு மட்டுமே குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய அண்ணனும் அண்ணியும் கொடுக்கின்றனர். ஆனால் கதிர் மற்றும் கண்ணன் இருவரும் தனியாக வேலை செய்வதால் அவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு மூர்த்தியிடம் கொடுக்கின்றனர். அதனால் அவர்கள் இருவரும் தங்களுடைய தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செல்கிறார்கள் இதனால் வருத்தத்தில் இருக்கின்றார்.

இதுக்கு காரணமே இவர்தான்
கடந்த வாரத்தில் ஜீவா மற்றும் மூர்த்தியிடம் லேசான மன கசப்பு ஏற்பட தொடங்கியது. அதே நேரத்தில் மீனாவின் சகோதரியின் திருமணம் இருப்பதால் ஜீவா மீனாவின் வீட்டிற்கு வந்த நிலையில் தற்போது திருமண வீட்டிலும் ஜீவாவிற்கு மீண்டும் அவமானம் நடக்கிறது. ஜீவா மற்றும் மீனாவின் பெயரை தவிர மீதம் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகளும் தங்களுடைய பெயரில் திருமண வீட்டில் மொய் எழுதி விடுகிறார்கள். அதில் குழப்பத்திற்கு காரணமாக அமைந்திருப்பது கண்ணன் தான் ஆனால் அது யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.

அவங்களுக்கே தெரியாது ஜீவா
இந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் மொய் வாசிக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே ஜனார்த்தனனுக்கு இவர்கள் மெய் எழுதிய விஷயம் தெரிந்து விட அவர் அதை மீனாவிடம் போட்டுக் கொடுக்க, மீனா ஜீவாவிடம் சண்டை இடுகிறார். இத்தனை நாளா நான் சொல்லிக்கிட்டே இருந்தேன் நீ தான் கேட்கல ஆனா முன்னாடி மாதிரி இப்போ நம்ம குடும்பத்துல நடக்கல விஷயமே வேற அவங்க எல்லாரும் முன்ன மாதிரி இப்போ இல்லை. எல்லோரும் சம்பாத்தியம் பண்றாங்க அதனால அவங்க சந்தோஷமா தனியா செலவு செய்றாங்க .நம்ம கிட்ட எதுவும் இல்ல. அதனால இப்ப கேவலப்படுறோம் என்று திட்ட, அதை குறித்து மூர்த்தியிடம் ஜீவா கேட்க அங்கே நடந்த எதுவுமே மூர்த்தி மற்றும் தனத்திற்கு தெரியாமல் அவர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

சொதப்பிட்டீங்களே கண்ணா
வரும் எபிசோடில் கண்ணன் ஐஸ்வர்யா தங்களுடைய பெருமைக்காக மொய் எழுதியதும், அதே நேரத்தில் முல்லை கதிர் முல்லையின் அம்மாவின் வற்புறுத்தலால் 5000 ரூபாய் மொய் செய்கிறார் அதுவும் வள்ளியின் மகன் பிரசாந்திற்கு தான். ஆனால் மல்லியின் மகன் வீட்டில் பெயரில் எழுத வேண்டிய மொய்யை கண்ணன் மீனாவின் வீட்டிற்கு எழுதி விடுவதும் தெரியவரும். ஆனால் தொடர்ந்து தன்னை அவமானம் செய்கிறார்கள் என்று ஜீவா நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இனி மொத்த உண்மையும் தெரிந்து தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழப் போகிறாரா? அல்லது இனி இவர்கள் வேண்டாம் என்று மாமனாரோடு சேர்ந்து இருக்கப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications