ஒரு கல்யாணம் மொத்த குடும்பமும் குளோஸ்.. முல்லையின் அம்மாவால் கதிர் எடுக்கும் முடிவு.. அடுத்த பிரச்சனை
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்து அண்ணன் தம்பிகள் பிரிந்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரைக்கும் கூட்டு குடும்பமாக இருந்த அண்ணன் தம்பிகளில் இப்போது மொய் பிரச்சனையால் ஜீவா முதலில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனாவும் கண்ணனும் வீட்டை விட்டு வெளியேற இருக்கின்றனர்.

கூட்டுக் குடும்பம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு கூட்டுக் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறது. இந்த சீரியலை பார்த்து பல பெண்கள் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் இப்போது உள்ள சூழ்நிலையில் இந்த மாதிரி எல்லாம் கண்டிப்பா இருக்க முடியாது என்று அடித்து கூறி வருகின்றனர். ஆனாலும் இந்த சீரியலின் கதை மட்டும் அப்படி இருந்தால் நல்லா இருக்கும், இப்படி இருந்தா நல்லா இருக்கும் என்று கருத்துக்கள் குவிகிறது. தனம் செய்வது சரி என்று ஒரு பக்கம். இல்லை தனம் அனைவரையும் அடிமைப்படுத்துகிறார் என்று இன்னொரு பக்கம், மீனாதான் உண்மையாக இருக்கிறார் என்று மீனாவை பாராட்டி பல ரசிகர்கள் என இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகி வருகிறது.

தொடர்ந்து கர்ப்பம்
இந்த நிலையில் தற்போது சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்தடுத்து மருமகள்கள் மூவரும் கர்ப்பமானார்கள். முதலில் முல்லை பல வருடங்கள் கழித்து கர்ப்பமான நிலையில் அதுவே சந்தோஷமாக ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் இதுவே நல்லா இருக்கே இப்படியே கொண்டு போய்விடலாம் என்று சீரியல் டீம் யோசித்து விட்டார்கள் போல, அடுத்ததாக ஐஸ்வர்யா கர்ப்பமாக மாறினார். அதைத்தொடர்ந்து தனமும் கர்ப்பமாக மாறினார். இப்படியே சில வாரங்கள் ஒரே வாந்தி யோடு கதை நகர்ந்து கொண்டிருந்தது. இது ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட தொடங்கிவிட்டது.

பிரிந்த ஜீவா
இந்த நிலையில் தற்போது சீரியல் விறுவிறுப்பு ஏற்படும் வேண்டும் என்பதற்காக பாண்டியன் ஸ்டோர் சீரியல் குடும்பத்தையே மொத்தமாக சிதற விட்டு விட்டார்கள். இதுவரைக்கும் இல்லாத வகையில் இப்போது அண்ணன்கள் தம்பிகள் செய்யும் அனைத்து செயல்களும் ஜீவாவை எவ்வளவு பாதிக்கிறது என்பதை ஒரு சில வாரங்களாக கொண்டு வந்து கடைசியில் மீனாவின் தங்கையின் திருமணத்தில் ஜீவா பெயரில் மொய் எழுதவில்லை என்கிற ஒரு பஞ்சாயத்தை கூட்டி தற்போது தன்னுடைய மனதில் இருந்த அதாவது ரசிகர்கள் கேட்டு வந்த கேள்விகளை எல்லாம் ஜீவா மூர்த்தியிடம் கொட்டி விட்டார். இப்போது நானும் உங்களுக்கு தம்பி இல்லை நீங்கள் இனி எனக்கு அண்ணன் இல்லை என்று மண்டபத்தை விட்டு தன்னுடைய அண்ணன் தம்பிகளை ஜீவா துரத்தி விட்டிருக்கிறார்.

அடுத்த வெளியேற்றம் ரெடி
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த இடத்தில் கண்ணன்தான் இருந்த பிரச்சனை எல்லாம் இன்று தனம் கண்ணனைத் திட்ட, என்ன ரொம்ப ஓவரா பேசிக்கிட்டு இருக்கீங்க என்று தன்னுடைய கணவருக்காக ஐஸ்வர்யா வரிஞ்சு கட்டி கொண்டு வர, நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்களா என்று முல்லையும் தன் தரப்பு கேள்விகளை முதல்முறையாக எடுத்து வைக்கிறார். பல நாட்களுக்குப் பிறகு முல்லைக்கு இப்போதுதான் முல்லைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டயலாக்கும் கிடைத்திருக்கிறது. அதனால் தன்னுடைய கெத்தை முல்லையும் காட்ட, இனி நாங்கள் எல்லா சம்பளத்தையும் உங்களிடம் தந்து விட்டு உங்ககிட்ட கெஞ்சிகிட்டு இருக்கனுமா நாங்க நிறைய sacrifice பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று ஐஸ்வர்யா பொங்குகிறார். அதற்கு மூர்த்தி அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுகிட்டு இங்க யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்ல, நான் மட்டும் போகணுமா? கண்ணனையும் கூட்டிக்கிட்டு போகணுமா என்று மிரட்டுகிறார். இந்த பிரமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ஒருவேளை வாய்ப்பிருக்கிறது
ஏற்கனவே ஜீவா மூர்த்தியிடம் கேள்வி கேட்க ஒரு வாரம் இழுத்துக் கொண்டு போன நிலையில் இனி அடுத்ததாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் தங்களுடைய கேள்விகளை துவங்க இருக்கிறார்கள். அதை தொடர்ந்து முல்லையின் அம்மா முல்லைக்கு போட்டு கொடுத்து முல்லையும் கதிரும், மூர்த்தி தளத்திடம் நாங்கள் எங்களுடைய ஹோட்டல் வருமானத்தில் இருந்து தானே நாங்கள் மொய் வச்சோம் என்று அவர்கள் பிரச்சனை கிளப்ப, அடுத்த வாரமும் அண்ணன் தம்பி சண்டை வரிசை கட்டி வர இருக்கிறது. கடைசியில் மூர்த்திக்கு ஹார்ட் அட்டாக் மீண்டும் வரப்போகிறது. அதனால் பிரிந்து போன அண்ணன் தம்பிகள் எல்லாம் மீண்டும் ஒன்று சேர போகிறார்கள் என்று தற்போது கதை போய்க் கொண்டிருக்கும் போக்கை பார்த்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுவே கடைசியில் கதையாக வருவதற்கும் வாய்ப்பு இருந்தாலும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications