பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு சாய் காயத்ரி விலகியது இதனால் தானா? கடைசியில் இப்படி ஆகிவிட்டதே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரி சமீபத்தில் தான் விலகி இருந்தார்.
சீரியலிலிருந்து விலகுவதற்கு காரணம் கதை தன்னுடைய கேரக்டருக்கு பொருத்தம் இல்லாததாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கதையின் தன்மையை சரியாக புரிந்து கொள்ளாமல் சாய் காயத்ரி விலகி விட்டதாக அந்த சீரியலில் மீனாவின் அப்பாவாக நடிக்கும் ஜனார்த்தனன் கூறியிருக்கிறார்.

அடிக்கடி மாற்றம்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஒரே குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிற நிலையில் இதில் அடுத்தடுத்து பல நடிகர்கள் மாறிவிட்டனர். குறிப்பாக ஒரு சில கேரக்டரில் இவருக்கு பதில் இவர் என்று அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா கேரக்டரும் ஒன்று. ஐஸ்வர்யாவாக ஆரம்பத்தில் ஒரு நடிகை நடித்து வந்தார். அவருக்கு பிறகு விஜே தீபிகா நடித்து வந்தார். அவருக்கு முகத்தில் பரு காரணமாக அவர் சீரியலில் இருந்து விலக வைக்கப்பட்டார்.

மூன்றாவது ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா கேரக்டரில் மூன்றாவது நடிகையாக சாய் காயத்ரி அறிமுகமானார். சாய் காயத்ரி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஈரமான ரோஜாவே சீரியலில் இவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதனால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் ஐஸ்வர்யாவாக இவர் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார்.

திடீர் விலகல்
சில வாரங்களுக்கு முன்பு தனக்கு சீரியலில் சொன்ன கதை இந்த சீரியலில் இப்ப வரைக்கும் வரவில்லை என்று சீரியலை விட்டு விலகப் போவதாக அறிக்கை வெளியிட்டு விட்டு விலகி இருந்தார். அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து பலரும் பலவிதமாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் இருந்து விலகிய பிறகும் அதுகுறித்து பேட்டி கொடுத்து வந்தார். இந்த நிலையில் அந்த சீரியலில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் சாய் காயத்ரி பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார்.

ஜனார்த்தனன் விளக்கம்
அதாவது அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான் அவர் சீரியலில் இருந்து விலகிய பின்பு சொல்லி இருந்தார், பத்து வருஷமா கிரிக்கெட் விளையாடும் ஒருவரால் ஃபுட்பால் விளையாட முடியாது. அது மாதிரி ஃபுட்பால் விளையாடும் ஒருவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என்றார். ஆனால் ஒரு நடிகரால் ஃபுட் பாலும் விளையாட முடியும். கிரிக்கெட்டும் விளையாட முடியும். அந்த பொண்ணுக்காக சொல்லல. இனி வர்றவங்களும் அப்படி நினைச்சிட கூடாது. நல்ல கேரக்டரில் நடிச்சா நெகட்டிவாக நடிக்க முடியாது என்று நினைக்க கூடாது என்பதற்காகத்தான் இதை சொன்னேன் என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.

இது வில்லத்தனம் இல்லையாம்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டர் இனி நெகட்டிவ் ஆக மாறப்போகிறது. அதனால் நான் கேரக்டரில் நான் நடிக்கவில்லை என்று சாய் காயத்ரி சீரியலை விட்டு விலகி இருந்தாலும், அது ஒன்றும் நெகட்டிவ் கேரக்டர் கிடையாது. தன்னுடைய கணவரை தன் முன்னாடியே ஒருவர் திட்டுவதும், அடிக்கவும் செய்தால் எந்த பெண்ணுக்காக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும். அப்படித்தான் ஐஸ்வர்யாவுக்கும் வருகிறது. அதனால் ஐஸ்வர்யா கேரக்டர் ஒன்னும் தப்பான கேரக்டராக மாறிவிட வில்லை. அதனால் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்காமல் விலகியது வருத்தமாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications