இனி ஜீவாவிற்கு இரண்டு பொண்டாட்டி.. ரகசியத்தை உளறிய மீனா.. அடுத்த குழப்பமும், பிரச்சனையும் ரெடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மேக்கிங் வீடியோவை அந்த சீரியலின் மீனா வெளியிட்டு இருக்கிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மீனாவின் சகோதரியின் திருமணத்தில் என்னென்ன ட்விஸ்ட் நடந்து இருக்கிறது என்பது பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.
மீனாவின் சகோதரியின் கழுத்தில் தாலி கட்டிய மீனா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சில செயல்களை செய்து இருக்கிறார்.

பிரிந்த குடும்பம்
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் அடுத்தடுத்து பிரிந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ஜீவா மீனாவின் தங்கையின் திருமணத்தில் நடந்த கலவரத்தால் தன்னுடைய மனதில் இருக்கும் மொத்த சோகத்தையும் கொட்டி விட்டு கிளம்பி இருந்தார்.

அடுத்தடுத்து கிளம்புறாங்களே
அதைத் தொடர்ந்து வீட்டில் நடந்த பிரச்சனையால் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டை விட்டு கிளம்பி சென்று விட்டனர். அது போதாது என்று மூர்த்தி ஒரு பக்கம் நானும் இந்த வீட்டை விட்டுப் போகப் போகிறேன் என்று கதிரிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார். கதிர் இத்தனை பிரச்சனைக்கு காரணமாக இருந்தாலும் தற்போது மூர்த்தியை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.

முயற்சிகள் வீணானது
அது மட்டுமில்லாமல் தனம் ஒரு பக்கம் ஜீவா மற்றும் மீனாவை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்துவிட முயற்சி செய்து இருக்கிறார். அதுபோல கதிரும் கண்ணன் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்துவிட முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் முயற்சி வீணாகிப் போனது. இருவரும் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் இந்த சீரியலில் மொத்த பிரச்சனைக்கு காரணமாக இருந்த மேக்கிங் வீடியோவை இந்த சீரியலில் மீனாவாக நடிக்க ஹேமா வெளியிட்டு இருக்கிறார்.

மேக்கிங் வீடியோ
அதில் ஒரு பக்கம் ஜீவா அண்ணன்களிடம் வீர வசனமா பேசி சண்டை போட்டுக் கொண்டிருக்க, அப்போது தாலி கட்டும் சீன்களில் எப்படி நடிப்பார்கள் என்பதை மீனா அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். ஒரு மஞ்ச கயிறை எடுத்துக் கொண்டு மீனா பிரசாந்த் கழுத்தில் தாலி கட்டி விட, அனைவரும் அய்யோ என்ன காரியம் செய்தாய் என்று கேட்க? நான் மாத்தி கட்டி விட்டேன் என்று மீண்டும் பிரசாந்த் கழுத்தில் இருந்த தாலி கயிற்றை கழற்றி மீனாவின் சகோதரியின் கழுத்திலே கட்டிவிட்டு வெளியே பார்ப்பதற்கு தான் மாப்பிள்ளை தாலி கட்டின மாதிரி இருக்கும். ஆனால் சீரியலில் அப்படி எல்லாம் நடக்காது என்று கூறுகிறார்.

என்னது இரண்டு பொண்டாட்டியா
பிறகு நான் இந்தப் பொண்ணுக்கு தாலி கட்டி விட்டதால் ஜீவாவுக்கு இனி 2 பொண்டாட்டி. ஜீவாவுக்கு நான் பொண்டாட்டி. எனக்கு இவா பொண்டாட்டி. அப்போ ஜீவாவிற்கு இரண்டு பொண்டாட்டி என்று கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாங்க கூட சீரியலில் கதை தான் மாறப்போகிறதோ என்று நினைத்தால், இப்படி மீனா சொல்லிவிட்டாரே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வர, இன்னொரு பக்கம் அப்போ அந்த தாலியை பிரசாந்த் கட்டவில்லையா? மீனாதான் கட்டினாரா? எதற்காக அப்போ பிரசாந்து கழுத்தில் மீனா தாலி கட்டினார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று அடுக்கடுக்கா பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications