உங்க அப்பா குடும்பத்தை பிரிச்சிட்டார்! அடுத்து என்ன? கேள்விக்கு மீனா பதில்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் அடுத்தடுத்து சண்டை போட்டு பிரிந்து கொண்டிருக்கின்றனர்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் மீனா சமூக வலைத்தளத்தில் தத்துவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

ஹேமாவின் ஆரம்ப காலம்

ஹேமாவின் ஆரம்ப காலம்

மீனாவாக நடிக்கும் ஹேமாவின் சொந்த ஊர் மயிலாடுதுறை தானாம். இவருக்கு சிறு வயதிலிருந்து மீடியாவில் சேர வேண்டும் என்று ஆசையில் இருந்திருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு சைதாப்பேட்டை காவல் நிலைய அலுவலகத்தில் ஹார்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். பிறகு வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஆபீஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மெல்ல திறந்தது கதவு, சின்னத்தம்பி என பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

பரபரப்பான கதைக்களம்

பரபரப்பான கதைக்களம்

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது பரபரப்பான கதை களம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் குடும்பம் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தது. இந்த குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்தாலும் அண்ணன் தம்பி பிரியாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் கதிர் முல்லையோடு வீட்டை விட்டு கிளம்பி சென்று இருந்தார். இந்த நிலையில் தற்போது ஜீவாவும் மீனாவும் வீட்டை விட்டு பிரிந்து செல்லும் பல திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராட்டப்படும் நடிப்பு

பாராட்டப்படும் நடிப்பு

ஏற்கனவே மீனாவிடம் அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் குடும்பத்தை பிரிந்து விடாமல் பார்த்துக்கோங்க மீனா என்று கருத்து கூறி வந்தனர். அது மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிகமான ரசிகர்கள் ஆதரவு இப்போது ஜீவா மற்றும் மீனாவிற்கு இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே மீனா இந்த வீட்டில் செய்யும் சிறுசிறு செயல்கள் நிகழ்ச்சியின் சுவாரசியமாகவும் கலகலப்பாகவும் கொண்டு போய்க் கொண்டிருந்த நிலையில், தற்போது அழுகாச்சி சீன்களில் மீனா மற்றும் ஜீவா நடிப்பு அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.

மீனாவின் தத்துவம்

மீனாவின் தத்துவம்

தற்போது மீனா தன்னுடைய கணவருக்காக மட்டும்தான் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தன்னுடைய வலி வேதனைகளை எல்லாம் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று ஜீவாவை மீனா சமாதானப்படுத்தி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் தற்போது மீனாவாக நடிக்கும் ஹேமா வெளியிட்ட புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதில் ஒரு ரசிகர் உங்க அப்பாவால குடும்பம் உடைஞ்சிடுச்சி. இனி கண்ணனும் தனியா போயிடுவான். ஏற்கனவே நீங்க தனியா வந்தாச்சு. இனி புது வீடு எப்ப கட்ட போறீங்க என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில் தான் வெளியிட்ட புகைப்படத்திற்கு ஹேமா இன்று உலகம் அழியும் என்று கவலைப்பட வேண்டாம். இது ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நாளை என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+