இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா? இப்படி பண்ணலாமா? பாண்டியன் ஸ்டோர் சீரியலை திட்டும் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வரிசையாக கர்ப்பமாக இருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து விசாரித்து செல்வதை வைத்து நித்தி சண்டை வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிப்ரவரி 27-வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் மூன்று பேர் கர்ப்பமாக இருப்பதால் அக்கம் பக்கத்தினர் அதிசயமாக விசாரித்து கொண்டிருக்கின்றனர்.

அதிலும் சிலர் குழந்தை இல்லை என்பதால் இந்த வீட்டில் நீங்க எப்போ காலி பண்ணுவீங்க நாங்களும் இங்கே வரவேண்டும் என்று கூறுகின்றனர். இந்த வீட்டின் ராசியால் எங்களுக்கும் குழந்தை பிறக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது சரியா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பயத்தில் ரசிகர்கள்

பயத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது பஞ்சமில்லாத கர்ப்பமான சீன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒன்றுக்கு மூன்று பேர் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் அதிசயம் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நிகழ்ந்து இருப்பதை ஊரே பெருமையாக பேசிக் கொண்டும், வியந்து பேசிக் கொண்டும் இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகி இருக்கின்றனர். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கட்டவுட் அடிக்கும் அண்ணன் தம்பிகள் தற்போது செய்திருக்கும் சாதனைக்கும் அடுத்தது கட் அவுட் வைக்க போகிறார்களோ என்று பயத்தோடு ரசிகர்கள் இருக்கின்றனர்.

பெரிய சாதனை தான்

பெரிய சாதனை தான்

இந்த நிலையில் தொடர்ந்து இந்த சீரியலில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே கர்ப்ப கால நிகழ்வுகள் மட்டுமே காட்டப்பட்டு வருவது பலருக்கும் கடுப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்களும் அண்ணன் தம்பிகளுக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மற்றும் சுவாரசியமான கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கதை வீட்டுக்குள்ளே அதுவும் இவர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் சாதனையை மையமாக படுத்திய இருந்து வருவதாகவும் ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 இப்படியும் நம்புவாங்களா

இப்படியும் நம்புவாங்களா

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முல்லையின் வீட்டிற்கு வரும் அக்கம் பக்கத்தினர் ஒருவர் தன்னுடைய உறவினர்களை கூட்டிக்கொண்டு வந்து நீங்கள் இந்த வீட்டை எப்போது காலி பண்ணுவீங்க? அடுத்ததாக ஹவுஸ் ஓனரிடம் அட்வான்ஸ் கொடுத்து இவங்களை இந்த வீட்டில் இருக்க வைக்க வேண்டும். இவர்களுக்கு ஏழு வருஷமாக குழந்தை இல்லை என்று அந்தப் பெண் ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து இருக்கின்றனர். குழந்தை இல்லை என்றால் அவர்கள் முறையாக மருத்துவரை சென்று பார்க்கலாமே தவிர இந்த மாதிரி ஒரு மூடநம்பிக்கை நம்பிக் கொண்டிருப்பார்களா என்று ரசிகர்கள் கடுப்பாகி கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

பெருமையாக இருக்கிறதாம்

பெருமையாக இருக்கிறதாம்

ஊரே பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை கழுவி ஊற்றிக் கொண்டிருப்பது தெரியாமல், எல்லோரும் ஏதோ சாதனை செய்துவிட்டது போல பெருமையாக இருக்கிறது. அனைவரும் நம்மளைப் பற்றியே பேசுகிறார்கள் என்று கூறிக் கொண்டிருப்பது மேலும் கடுப்பாகத்தான் இருக்கிறது என்று பலர் கருத்து கூறி வர இது எந்த ஒரு நடிப்பும் இல்லாமல் எதார்த்தமாக இருக்கிறது என்று இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் இந்த சீரியலுக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள். ஆக மொத்தம் ஒரு பக்கம் எதிர்ப்பு வலுத்துக் கொண்டு இருந்தாலும் இந்த சீரியலுக்கு டிஆர்பி வழக்கம் போல வந்த வண்ணமாக தான் இருக்கிறது. அதனால் தான் இந்த சீரியல் இந்த வர டாப் 10 சீரியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+