என் மாப்பிள்ளையை பாடாய் படுத்துறாங்க..ஒரு பாத்ரூம் கூட கட்ட வக்கில்லை..அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை ஜனார்த்தனன் கழுவி கழுவி ஊத்துகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்ற ட்விஸ்ட் பற்றி சமீபத்திய பேட்டியில் மீனாவின் அப்பா பல தகவல்களை கூறி இருக்கிறார்.
தன்னுடைய கேரக்டர் மற்றும் என்னுடைய முடிவு இதுதான் என்று ஜனார்த்தனன் பேசிய வீடியோவை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

அதிகரிக்கும் கருத்துக்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் மாறி இருக்கிறது. இதற்கு முன்பு இந்த சீரியலை பார்க்காத ரசிகர்கள் கூட இந்த சீரியலில் அண்ணன் தம்பி கதை சண்டையில் போய்க்கொண்டிருப்பதை பார்த்து இதே போல தான் எங்கள் வீட்டிலும் நடந்தது, இதே போலத்தான் எங்கள் பக்கத்து வீட்டில் நடந்தது என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

பாராட்டப்படும் கேரக்டர்
தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் அந்த கேரக்டரின் பெயரிலேயே ரசிகர்களின் மத்தியில பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் ஜனார்த்தனன் கேரக்டரை ரசிகர்கள் இப்போது அதிகமாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். காரணம் ஜனார்த்தனன் தன்னுடைய மகள் மீது வைத்திருக்கும் பாசம் மற்றும் மருமகன் மீது தனக்கு இருக்கும் மரியாதை பாசத்தை குறித்து தான் பலரும் கூறி வருகிறார்கள்.

ஜனார்த்தனன் பேட்டி
பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை பற்றி ரசிகர்களின் மனதில் இருக்கும் கேள்விகளை அப்படியே கேட்கும் நபர் என்றால் அது ஜனார்த்தனன் தான். அதனாலே அவர் அதிகமாக பாராட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். மீனா அந்த வீட்டை விட்டு வெளியே வந்தது எனக்கு ரொம்பவே சந்தோசம் தான். பாண்டியன் ஸ்டோர் குடும்பம் எனக்கு ஒன்னும் பண்ணல. எதுவும் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் என் பொண்ணு, மாப்பிள்ளை, பேத்தி, சந்தோசமா சவுரியமா சுகமா வாழனும் அது என்னோட கொள்கை.

விட்டுக் கொடுக்கும் மனது இல்லை
அதனால மாப்பிள்ளையோட தம்பிங்க, தம்பி பொண்டாட்டிக எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பாண்டியன் ஸ்டோர் புறா கூண்டு மாதிரி ஒரு கடை. அதுல வர சொற்ப வருமானத்தை வச்சுக்கிட்டு மாப்பிள்ளையை பாடா படுத்துறாங்க. அவங்களுக்கு போதுமான அளவு பணம் கொடுக்க மாட்டேங்கிறாங்க. மரியாதை கொடுக்கல. என்கிட்ட கோடி கோடியா சொத்து இருக்கு வாயா வந்து அனுபவிச்சுக்கயான்னு சொல்றேன். நாலு பேரு ஒன்னா பிறந்தோம் அதுல ஒருத்தனுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சுச்சுனா அதை விட்டுக் கொடுக்கிற மனப்பக்குவம் அவங்களுக்கு வரணும். அது அவங்களுக்கு இல்லை, என்று சீரியலின் கதையை நிஜ வாழ்க்கை போலவே பேசிக் கொண்டிருக்கிறார்.

இனி வரப்போவது இதுதான்
ஏற்கனவே ஜீவா மற்றும் மீனா தற்போது குடும்பத்தை விட்டு மாமனார் வீட்டில் சேர்ந்திருக்கும் நிலையில் இனி என்ன மாதிரி நடந்துக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் நான் என்னுடைய மருமகன் மீது எனக்கு அதிகமான மரியாதை இருப்பதால் அவரிடம் தவறாக எந்த வார்த்தையும் பேச மாட்டேன். அவரை இனி தாங்கு தாங்கு என்று தாங்க போகிறேன். என்னுடைய மகள் அந்த வீட்டில் இருக்கும்போது ஒரு டாய்லெட் கட்டித் தரல, மூணு வருஷம் போராட்டம். என் பொண்ணு என்ன கேட்டுச்சு? ஒரு அட்டாச் பாத்ரூம் கேட்டுச்சு .அதைக்கூட செஞ்சு குடுக்கலன்னா அந்த குடும்பத்தில் இருந்து என்ன பலன் என்று கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications