அந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் அடிச்சிட்டாங்க! தற்கொலை முயற்சி! கேட்க யாரும் இல்ல! சாந்தினி உருக்கம்
சென்னை:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சுகன்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சாந்தினி பிரகாஷ், தனது சீரியல் அனுபவங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். தான் சக நடிகை நிரோஷாவிடம் நிஜமாகவே அடி வாங்கியதாக அவர் கூறியது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

யார் இந்த சாந்தினி பிரகாஷ்
நடிகை சாந்தினி பிரகாஷ், சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் இவர் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 வெற்றிக்குப் பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுகன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் கதாபாத்திரம் நல்லதா, வில்லனா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியில் கூமாப்பட்டி தங்கப்பாண்டியுடன் இணைந்து நடனமாடி, தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அடி வாங்க சம்மதித்த சாந்தினி
சமீரியன் யூடியூப் சேனலுக்கு சாந்தினி அளித்த பேட்டியில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் உள்ள மற்ற கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசினார். அப்போது, கோமதி (நிரோஷா) கதாபாத்திரம் மிகவும் பாவமானது என்றும், அவர் கிராமத்துப் பெண்கள் போல கணவர் பேச்சை மீற மாட்டார் என்றும் பாராட்டினார்.
அப்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் வெளிப்படுத்தினார். "என்னை ஒருமுறை நிரோஷா மேம் போட்டு வெளுத்து கட்டினார். அந்த காட்சியில் அவர் ரியாலிட்டியாக என்னை அடித்தார். 'அடிப்பேன், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று சொன்னார். அதற்கு நான், 'நீங்க அடிங்க மேம், பார்த்துகலாம்' என்று சொன்னேன். அதன்பிறகுதான் அவர் என்னை அடித்தார்" என்று கூறினார்.
சாந்தினியின் உருக்கமான பேட்டி
தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய சாந்தினி, தனக்கு பாய் ஃபிரண்ட் கிடையாது என்று கூறினார். "நீ இருக்கியா? செத்தியா? உயிரோடு இருக்கியா?" என்று கேட்கக்கூட எனக்கு யாரும் இல்லை. இந்த நிலை தனக்குப் பழகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், "மன உளைச்சல் இருக்கிறது. வேலை செய்ய முடியவில்லை என்றால் ஏன் அதில் இருக்க வேண்டும்? அதில் இருந்து வெளியில் வர வேண்டும். நமக்குனு யார் இருக்கிறார் என்று யோசித்தால் அது டைம் வேஸ்ட். நான் உனக்கு ஒன்று செய்கிறேன், நீ இதை எனக்காக செய்ய வேண்டும் என்று நான் யாரிடமும் கேட்கமாட்டேன். இந்த நிலைமையில் நமக்கு யாருமே இல்லை என்று பல பெண்கள் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது தவறு. முடியாது என்று நினைக்காமல் அதில் இருந்து வெளியில் வர வேண்டும்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
சாந்தினியின் இந்த வெளிப்படையான பேச்சு, திரையுலகப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் வலிகளையும், மன உளைச்சல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications