பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகப் போகிறாரா ராஜி? அவரே கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஷாலினி சீரியலில் இருந்து விலகுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது புதியது அல்ல. காரணம் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு சில நடிகர்களால் தொடர்ந்து அந்த சீரியலில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகி விடுகிறது. காரணம் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் கமிட்மென்ட் மற்றும் சில கருத்து வேறுபாடு காரணமாக கூட சிலர் சீரியலில் இருந்து விலகி விடுகிறார்கள்.

television vijay tv pandian stores season 2 2

அதுபோல சீரியல் பற்றிய வதந்திகளும் அடிக்கடி வருவதையும் காண முடிகிறது. சீரியலில் இணைந்து நடிக்கும் நடிகர்கள் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் அதிகமாக பரவும். ஆனால் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் மறுத்தும் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி மற்றும் செழியன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தது. அது குறித்து ஜெனி கேரக்டரில் நடிக்கும் திவ்யா மறுப்பு தெரிவித்து இருந்தார்.

television vijay tv pandian stores season 2 2

அதுபோல சில நடிகைகள் சீரியலில் இருந்து விலகுவதாக கூட செய்திகள் பரவி வருகிறது. அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் ராஜி கேரக்டரில் நடிக்கும் நடிகை ஷாலினி சீரியலில் இருந்து விலகப்போவதாக பல செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்து ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

television vijay tv pandian stores season 2 2

அதில் "வணக்கம் மக்களே நான் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக போவதாக செய்திகள் பரவி வருகிறது. அது முற்றிலும் பொய்யான தகவல். எதற்காக சிலர் இதுபோன்ற வதந்திகள் பரப்புகிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை. தயவு செய்து இதுபோல இனி பொய்யான தகவல்கள் பரப்பாதீர்கள். நான் என்றும் உங்கள் ராஜியாக தொடர்வேன்..." என்று கூறியிருக்கிறார்.

television vijay tv pandian stores season 2 2

ஏற்கனவே ஷாலினி விஜய் டிவியில் கதாநாயகி என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் காரணமாக முதல்முறையாக சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் இருந்து இவர் விலகுவதாக சிலர் செய்திகள் பரப்பி வருகிறார்கள்.

television vijay tv pandian stores season 2 2

ஆனால் இவர் சீரியலில் இருந்து விலகக் கூடாது என்று தொடர்ச்சியாக அவருடைய ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். அதற்கு அவர் நான் சீரியலில் இருந்து விலக மாட்டேன் என்று இப்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை கூறி இருக்கிறார்.

television vijay tv pandian stores season 2 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+