பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசியின் நிஜ கணவர் இந்த பிரபலம் தான்! இவங்க காதல் கதையை வைத்தே ஒரு சீரியல் எடுக்கலாம் போல
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் அரசி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சத்யா சாய் கிருஷ்ணாவை பற்றிய பயோகிராபியை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சத்யாவிற்கு கல்யாணம் முடிந்தது பலருக்கும் தெரிந்திருக்காது ஆனால் அவருடைய கணவர் ஒரு ப்ரொபசர், அதோடு சத்யாவின் நிஜக் கல்யாணமும் காதல் கல்யாணம் தான். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல டிஆர் பி பெற்று வருகிறது. இந்த சீரியலில் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகம் தொடங்க போகிறது என்றதும் இது மக்களை கவருமா? என்ற பல்வேறு கேள்விகள் இருந்தது. காரணம் அந்த நேரத்தில் தொடங்கப்பட்ட பாரதி கண்ணம்மா உட்பட பல சீரியல்கள் இரண்டாவது பாகம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை அதனாலேயே சில மாதங்களில் முடித்து விட்டனர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கிய சில வாரங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள்
இந்த சீரியலில் நடிக்கும் எல்லா கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அதிலும் இந்த சீரியலில் அரசியின் செயலை பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். அரசி அவருடைய குடும்பத்திற்கு எதிராக இருக்கும் குமாரை காதலித்திருந்தார், ஆனால் கடைசியில் குமாருடைய சுயரூபம் தெரிந்ததும் இப்போது அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று குடும்பத்தினரை நம்ப வைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார். கதை இப்படி போய்க் கொண்டிருக்க அரசி தன்னுடைய கணவரோடு எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேள்விகளுக்கு பதில்
அதை பார்த்ததும் இவருக்கு கல்யாணம் முடிந்து விட்டதா? அல்லது இவர் தான் காதலரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. ஆனால் அரசிக்கு சில வருடங்களுக்கு முன்பே காதல் திருமணம் நடந்து விட்டது. ஆனால் சீரியலில் மட்டுமல்ல இவர்களுடைய நிஜ காதலிலும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதாவது அரிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சத்யா சின்ன வயதிலிருந்து எக்ஸ்ட்ரா கரிகுலேஷனில் திறமையானவராக இருந்திருக்கிறார்.
காலேஜ் ப்ரொபசர்
படிப்பு மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரியில் பல போட்டிகளிலும் கலந்து கொள்வாராம். அது போல தான் கல்லூரி படிக்கும் போது ஒரு முறை இவருடைய கல்லூரிக்கு ஜோசப் கல்லூரியில் இருந்து அன்பு என்ற ப்ரொபசர் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கல்லூரியில் இருக்கும் மாணவர்களை இவருடைய கல்லூரி பங்க்ஷனுக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அப்போது இவர்களுடைய திறமையை பார்த்து இவரிடம் பேசி இருக்கிறார். முதலில் சத்யா மாடலிங் செய்கிறார், நடிகையாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு பேசி இருக்கிறார். ஆனால் பிறகு அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது.

காதல் திருமணம்
இவர்களுடைய காதல் விஷயத்தை அன்புவின் தங்கச்சி தான் வீட்டில் போட்டுக் கொடுத்திருக்கிறார். அப்போது இரண்டு வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு சின்னதாக எதிர்ப்பு தொடங்கி இருக்கிறது. பிறகு இருவரும் தங்களுடைய குடும்பத்தினரிடம் பேசி சம்மதம் வாங்கி திருமணத்தை மிக மிக எளிமையாக முடித்து இருக்கிறார்கள். அவர்களுடைய ரிசப்ஷன் மதுரையில் தான் நடந்திருக்கிறது. சத்யா ப்ரோபசரை காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் சத்யாவின் கனவுகளுக்கு அவருடைய கணவர் அன்பு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லையாம்.
கணவரின் சப்போர்ட்
உன்னுடைய ஆசை இலட்சியத்தை நீ அடையலாம் என்று அவர் கூறியிருக்கிறார். அதனாலயே சத்யாவால் கல்யாணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்க முடிந்திருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகத்தில் இவர்தான் கண்ணனுக்கு ஜோடியாக முதலில் நடித்திருக்கிறார். ஆனால் கண்ணனுக்கு இவருக்கும் பொருத்தம் இல்லை, இவர் அக்கா மாதிரி இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதற்கு பிறகு தான் இவருக்கு பதிலாக வேறு கேரக்டரை அந்த சீரியலில் கொண்டு வந்திருக்கிறார்கள். பிறகு அதே சீரியலில் இரண்டாவது பாகத்தில் சத்யாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அவருடைய குடும்பத்தினர் ரொம்பவும் சந்தோஷப்பட்டு இருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசி
இப்போது இந்த சீரியலில் இவரை சுற்றி தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அப்பா மகனின் பாச கதையாக இருந்தாலும் இதில் செல்ல மகளாக அரசி கேரக்டரில் சத்யா நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாகவும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications