பாண்டியன் ஸ்டோர்ஸ்: செந்தில் கேட்ட கேள்வி, கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போன பாண்டியன்! மீனாக்கு விழுந்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூலை 12ஆம் தேதிக்கான எபிசோடில் செந்தில் கேட்ட கேள்வியால் கோபத்தில் பாண்டியன் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அதே நேரத்தில் சமாதானம் செய்யப்போன மீனாவை கோமதி தள்ளி விடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாண்டியன் நல்ல அப்பா கிடையாது என்று செந்தில் சொன்னதும் கோமதி செந்திலை அடித்து விடுகிறார். அதற்கு செந்தில் இவரு செஞ்சேன்... செஞ்சேன்னு எங்களை கஷ்டம் தான் படுத்திட்டு இருக்கிறார். அரசி கல்யாணம் வரைக்கும் தப்பான முடிவு எடுத்திருக்கிறார். இவர் நல்ல அப்பாவே இல்லை என்று மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க அதனால் கோபமான பாண்டியன் தலைகுனிந்து வெளியே சென்று விடுகிறார்.

கோமதி என்ன பேச்சு பேசுற நீ மனசாட்சியோட பேசுறியா என்று செந்திலை மீண்டும் அடிக்க, அப்போது கதிர் மற்றும் சரவணன் வந்து தடுக்கிறார்கள். அதோடு ஏன்டா இவரை இப்படி கொடுமை படுத்துறீங்க என்று கோமதி கேட்டு கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாண்டியன் கோவிலில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறார். செந்தில் சொன்னதை நினைத்து பார்த்து நான் நல்ல அப்பாவா இல்லன்னா இந்த உலகத்தில் யாருமே நல்ல அப்பா இல்லை.
நான் எதுவும் செய்யாமல் தான் இவன் இவ்வளவு வளர்ந்தானா? என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதேபோல வீட்டில் எல்லோரும் வருத்தமாக இருக்கும்போது கோமதி எதுக்கு எல்லாரும் உக்காந்துக்க இருக்கீங்க அவர் கண்டிப்பா வீட்டுக்கு வருவாரு அப்போ இன்னும் அவரை அசிங்கப்படுத்தனும்னு நீங்க எல்லாரும் உட்கார்ந்து இருக்கீங்களா போய் படுங்க என்று திட்டுகிறார். அவரிடம் சரவணன் பேசப் போக கோமதி சரவணனிடமும் கோபத்தை காட்டுகிறார்.
அதுபோல பாண்டியனை நினைத்து புலம்பி கொண்டு இருக்க கோமதியை எல்லோரும் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்போது தங்கமயில் உங்களுக்கு ஏதாவது ஆகிடும் இப்படி அழுதுட்டு இருக்காதீங்க என்று சொல்ல, எனக்கு ஏதாவது ஆனா ஆகட்டும் என்று கோமதி சொல்லிக் கொண்டிருக்கிறார். மீனா வந்து பேச போகும்போது கோமதி அவரிடம் நீ பேசாத என்று சொல்ல நான் பேசல ஆனா நீங்களும் பேசாம இருங்க என்று மீனா சொல்ல, ஏன் பேசினா புல்டோசர் கொண்டு வந்து இடிக்க போறியா என்று கோமதி கேட்கிறார்.

அதற்கு மீனா அவரை சமாதானம் செய்ய பார்க்க ஒரு கட்டத்தில் கோமதி மீனாவை பிடித்து தள்ளி விடுகிறார். அந்த நேரத்தில் பாண்டியன் குடித்துவிட்டு வர சரவணன் அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்போது பாண்டியன் நான் பட்ட கஷ்டத்தை நீங்க யாரும் பாக்கல அதான் இப்படி பேசுறீங்க நான் பட்ட கஷ்டம் இன்னொருத்தன் பட்டு இருந்தா என்னைக்கோ போய் சேர்ந்திருப்பான். உங்களை எல்லாம் நான் வளர்த்த மாதிரி என்னை வளர்க்க யாருமே இல்ல. இருக்க இடம் கூட கிடையாது சாப்டியானு கேட்க கூட யாரும் இல்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் நீங்க நல்லா அப்பா தான் என்று சொல்ல, நீயாவது என்னை புரிஞ்சுகிட்டியே என்று பாண்டியன் புலம்பி கொண்டிருக்கும்போது சரவணன் சமாதானம் செய்து படுக்க வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications